Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வேலை வாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 314
₹78.00
ஜோதிட நூல்; 
கைரேகை சாஸ்திரம்; 
கைரேகை ஜோதிடம்.
 
மொழி: தமிழ்; 
காகித அட்டை (Paperback); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);  
பாரதி பதிப்பகம். 
 
FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

வேலை வாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம்.

என்னுரை:  

குரு வாழ்க!                       குருவே துணை!!!

பேரன்புடையீர் வணக்கம். 

‘வேலை வாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும்’ என்ற இந்த நூலை எழுத எண்ணத்தை அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி கூறி, இந்நூலை எளிதியதற்கான நோக்கத்தையும் கூற விரும்புகிறேன்.

எனது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடுமோ, எங்கே சென்றால் எந்த வேலை, அரசு வேலையா? தனியார் வேலையா? தொழில் கல்வி படித்துவிட்டாலும் படிப்புக்கேற்ற வேலையா? வேலை எப்போது? படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை எந்த வேலை? வேலை எங்கே? வேலை எங்கே?..என ஊர்விட்டு ஊர்வந்து, ஏதோ  ஒரு வேலை என்ற அச்சநிலை மாறி அவர்கள் எதிர்காலம் சிறப்படைய வேண்டும். 

அவர்கள் சிறப்படைய வேண்டுமெனில், அவர்களிடமுள்ள இயற்கையான ஆற்றலை, அறிவினை பட்டை தீட்டி அவர்களுக்கும், சமுதாயத்திற்கும் சிறப்பினை சேர்க்கிற வேலை எது? என்பதை அவர்களின் கைரேகையைக்கொண்டே கண்டறிந்து, அவர்களின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கிற அந்த அற்புத சக்தியை தட்டி எழுப்ப வேண்டும். அந்தஉன்னதஆற்றலைஅவர்களையேஅறிந்துகொள்ளச்செய்யவேண்டும். அதற்கு கைரேகைக் கலை எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை பல ஆண்டுகளாக பல ஆயிரம் கைரேகைகளையும், சாதகங்களையும் ஆய்வு செய்து, ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து, துறைவாரியாக பிரித்து ஒரு வேலைவாய்ப்பு அகராதிப் போல வேலை வாய்ப்பு தேடுவோருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நீண்ட காலமாக இருந்து கொண்டே இருந்தது. இறைவன் அளித்த அந்த எண்ணத்தின் தாக்கம்தான் இந்த 'வேலைவாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற கைரேகைஆய்வு நூல். இந்நூல் வேலை தேடுவோருக்கு மட்டுமன்றி சோதிட, கைரேகை ஆர்வலர்களுக்கும், சோதிடம் பயின்று வரும் இளம் சோதிடர்களுக்கும் நிச்சயம் பயன் அளிக்கும்.

சோதிட ஆராய்ச்சி சிந்தனைகளை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்வது சோதிட ஆர்வமுள்ள இளம் சோதிடர்களின் கடமையாகும். இந்நூலினை நீங்கள் படித்துப் பயன்பெறுவதுடன் உங்களை சார்ந்திருப்போரும் பயன் அடைந்து வேலை வாய்ப்பினைப் பெற்று மகிழ்ச்சியுடன், மன அமைதியுடனும் வாழ வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன். எனது ஏழாவது படைப்பான இந்நூல் வெளியாவதற்கு உதவியாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும், அச்சிட்டு வழங்கிய சிவகாமி பிரிண்டோகிராபிக்ஸ் உரிமையாளருக்கும் எனது நன்றி. 

வாழ்க ஜோதிடக் கலை!                                   வாழ்க வளமுடன் !!

காஞ்சி எஸ். சண்முகம்

பொருளடக்கம்:-  

01. கிரகமேடுகளும்வேலைவாய்ப்புயோகமும் 

(i) கிரகமேடுகள் படம் - 11; 

(ii) குருமேடும் வேலைவாய்ப்பு யோகமும் - 12; 

(iii) சனிமேடும் வேலைவாய்ப்பு யோகமும் - 14; 

(iv) சூரியமேடும் வேலைவாய்ப்பு யோகமும் - 17; 

(v) புதன்மேடும் வேலைவாய்ப்பு யோகமும் - 19; 

(vi) செவ்வாய்மேடும் வேலைவாய்ப்பு யோகமும் - 21; 

(vii) சந்திரமேடும் வேலைவாய்ப்பு யோகமும் - 23; 

(viii) சுக்கிரமேடும் வேலைவாய்ப்பு யோகமும் - 25; 

 

02. முக்கியரேகைகளும் வேலைவாய்ப்பு யோகமும் 

(i) முக்கிய ரேகைகள் படம் - 27; 

(ii) ஆயுள் ரேகையும் வேலை வாய்ப்பு யோகமும் - 28; 

(iii) புத்திரேகையும் வேலைவாய்ப்பு யோகமும் - 30; 

(iv) இருதயரேகையும் வேலைவாய்ப்பு யோகமும் - 32

(v) விதிரேகையும் வேலைவாய்ப்பு யோகமும் - 34

(vi) சூரியரேகையும் வேலைவாய்ப்பு யோகமும் - 37

03. மத்திய, மாநிலஅரசுப் பணிகளும், வேலைவாய்ப்பு யோகமும் - 40

04. கல்விதுறையும் வேலைவாய்ப்பு யோகமும் - ஆய்வு 1 - 2 -       55

05. மருத்துவத் தொழிலும் வேலைவாய்ப்பு யோகமும் - ஆய்வு : 3 - 77

06. வங்கித்துறை மற்றும் காப்பீட்டுத் துறையும் வேலைவாய்ப்பு யோகமும் - ஆய்வு : 4 - 5 -  92

07. போக்குவரத்து துறையும் வேலைவாய்ப்பு யோகமும் - 111

08. கட்டுமானம் மற்றும் பொதுப்பணித்துறையும் வேலைவாய்ப்பு யோகமும் - 123; 

09. தகவல் தொழில்நுட்பத் துறையும் வேலை வாய்ப்பு யோகமும் ஆய்வு: 6 - 7 - 127; 

10. மின்வாரியமும் வேலை வாய்ப்பு யோகமும் - 146

11. இராணுவம், காவல்துறை மற்றும் நீதித் துறையும் வேலை வாய்ப்பு யோகமும் - 153

12. அறநிலையத் துறையும் வேலை வாய்ப்பு யோகமும் - 170

13. அரசியல் பணியும் வேலை வாய்ப்பு யோகமும் ஆய்வு : 8 - 177

14. திரைப்படத் தொழிலும் வேலை வாய்ப்பு யோகமும் ஆய்வு : 9 - 191.

ஆசிரியர் குறித்து: கைரேகைக்கலை குறித்து படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள நூலை எழுதியுள்ளார் ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம். 

 

ஆசிரியர் பெயர்: செ.சண்முகம்; 

வயது: 50; 

கல்வித் தகுதி: B.Sc., M.A, B.Ed, S.D.T.D; 

பெற்றோர் : எஸ்.செல்வ கணபதி -இராஜலெட்சுமி; 

சொந்த ஊர் : வேதாரண்யம்; 

ஜோதிடபட்டங்கள் : ஜோதிஷ் ஞான சிரோன்மணி; ஜோதிஷ் சாம்ராட்; ஜோதிஷ் வித்வான் மணி; 

எழுதிய நூல்: கே.பி.ஜோதிடமும் செவித்திறன் குறையும் (ஒரு பாகம்); 

வீட்டு முகவரி: பிளாட் எண்.128, 172 A, பெரியார் சாலை, அன்னை இந்திரா நகர், புதிய இரயில் நிலையம் அருகில், காஞ்சிபுரம்-631502.

Ph. 9659632767.

More Information
SKU Code Bharti B 314
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம். - Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam
Publisher Name பாரதி பதிப்பகம் - Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:வேலை வாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம்

Similar Category Products





Other Books by ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம். - Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam