Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

விநாயகர் அகவல் ஞானவிளக்கம் - பா.கமலக்கண்ணன் - Vinayagar Agaval Gnanavilakkam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 386
₹45.00
ஆன்மீகம் நூல்.
பேப்பர்பேக்;
60 பக்கங்கள்; 
முதற் பதிப்பு: டிசம்பர் 2014; 
இரண்டாம் பதிப்பு: நவம்பர் 2017; 
மொழி: தமிழ்;
வானதி பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் விநாயகர் அகவல் ஞானவிளக்கம், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

முன்னுரை:

மரணமிலாப் பெருவாழ்வை இலட்சியமாகக் கொண்டு ஞானத் தவம்புரிவோரின் வழித் துணைவரே விநாயகர் என்பது குருவாக்கு. இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், பெரும் பாலான சித்தர்கள் தமது நூல்களை விநாயகர்மீது காப்புச் செய்யுளுடன் தொடங்கியிருப்பதைக் காணலாம். "வானோரும் யானை முகத்து ஐங் கரனைக் காதலால் கைகூப்புவர்" என்று கருவூர்த் தேவர் பாடியிருப்பது, இக்கருத்துக்கு தக்க சான்று ஆகும். ஆனால், தமிழ் இலக்கியத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்றும், பத்தாம் சைவத் திருமுறையான திருமந்திரத்திலுள்ள "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை" என்ற காப்புச் செய்யுள் இடைச்செருகல் என்றும் தமிழறிஞர்கள் கூறுகின்றனர். வல்லவராயச் சோழனிடம் அமைச்சராக இருந்த பரஞ்சோதியார், அரசரின் பொருட்டு வாதாபியின் மீது படை எடுத்துச் சென்று திரும்பும்போது, வெற்றிச் சின்னமாகக் கொணர்ந்ததே விநாயகர் சிலை என்றும் கூறுகின்றனர். மேலும், அவ்வை என்ற பெயரால் பல்வேறு காலங்களில் வாழ்ந்த ஆறு பேர்களுள், விநாயகர் அகவல் எழுதிய அவ்வையார் யார் என்றும் வினவுகின்றனர். இந்த வினாக்களை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, மரணமிலாப் பெறுவாழ்விற்கு இந்நூல் காட்டும் வழி யாது என்று ஆழ்ந்து அகன்று ஆய்வு செய்தேன். எழுபத்திரண்டு வரிகளுக்குள் ஏழ்கடலைப் புகுத்தியுள்ள திறம் கண்டேன்.

விநாயகப் பெருமானின் அருளால், "விநாயகர் அகவல் ஞானவிளக்கம்" என்ற ஆய்வு நூலை உருவாக்கி அவருடைய பாதங்களில் பணிவோடு சமர்ப்பித்து வணங்கி நிற்கின்றேன்.

விநாயகர் அகவலைக் கற்போம்; ஞான மார்க்கத்தை அறிவோம்; வாழ்வாங்கு வாழ்வோம்; மரணத்தை வெல்வோம்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ள அன்னை முனைவர் திருமதி வெ.கனக சுந்தரம் அவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருள் பெருகிடப் பிரார்த்திக்கின்றேன்.

இந்நூலை அழகிய முறையில் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அர்ப்பணிக்கும் வானதி பெரியவர் திரு.ஏ.திருநாவுக்கரசு செட்டியார் அவர்களுக்கும், இளையவர் திரு.இராமநாதன் செட்டியார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். வானதியின் புகழ் உலகெங்கும் நின்று நிலைத்திட விநாயகரின் பொற்பாதங்களை வணங்குகின்றேன்.

முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் 
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே 
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே 
தற்பரனே நின்தாள் சரண். 
                   - திருஅருட்பா 1/4, சிவநேச வெண்பா 
                                                        
                                                                          இங்ஙனம்,
                                                                          பா.கமலக்கண்ணன்.

16, கிழக்குத் தெரு,
பழைய சாரம்,
பாண்டிச்சேரி - 605 013
Ph. 0413 2248046
email:
kamalakkannan1932@gmail.com
www.ramalingaperumanar.com
youtube: bakamalakkannan 


                             பொருளடக்கம்:
1.விநாயகரைப் பற்றி அபிதான சிந்தாமணி;  
2.விநாயகரைப் பற்றி சித்தர்கள்;  
3.விநாயகரைப் பற்றி இராமலிங்கப் பெருமானார்;  
4.விநாயகர் அகவல் மூலம்;  
5.விநாயகர் அகவல் ஞான விளக்கம்.


ஆசிரியர் குறித்துதிரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.

More Information
SKU Code VAN B 386
Weight in Kg 0.400000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:விநாயகர் அகவல் ஞானவிளக்கம் - பா.கமலக்கண்ணன் - Vinayagar Agaval Gnanavilakkam

Similar Category Products





Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan