Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

யானைகளின் கடைசி தேசம் - Yanaigalin Kadaisi Desam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 006
₹150.00
பயணக் கட்டுரை. 

பேப்பர்பேக்;  
184 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
அகநி வெளியீடு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சீனாவுக்கான வணிகப் பாதையில் இருப்பதால் எப்பொழுதுமே வணிக முக்கியத்துவத்துடன் இருக்கும் தென் கிழக்காசிய நாடு இந்தோனேசியா, பதினோறாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் மேலாதிக்கம் செய்த மண்ணிலேயே, 18-ஆம் நூற்றாண்டில் கூலிகளாகத் தமிழர்கள் வாழ நேர்ந்த அவலம் நிகழ்ந்த தேசம். சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையணத் தேவர் நாடு கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த நாடு. கலையெழில் நிரம்பிய இந்து, பௌத்தக் கோயில்கள் நிரம்பிய தீவு, ஒரே நேரத்தில் பெருமிதமும் துயரமும் பெருகச் செய்யும் பதினாறாயிரம் தீவுகள் கொண்ட தேசமான இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல், 'யானைகளின் கடைசி தேசம்.' இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான, டாக்டர் மு.ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள், வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன.                                                                                                                                              
எழுத்தாளர் குறிப்பு :  டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐ.ஏ.எஸ். தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்து படித்தப் பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின்மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர். இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் பத்து லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர். மாவட்டத்தில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை உதவியுடன் படியெடுத்தவர். 'திருக்குறளில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சட்டக்கூறுகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் 'முனைவர்' பட்டம் பெற்ற முதல் மாணவர். தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
More Information
SKU Code Akani B 006
Weight in Kg 0.560000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789382810452
Author Name டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப - Dr M.Rajendiran I.A.S
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:யானைகளின் கடைசி தேசம் - Yanaigalin Kadaisi Desam

Similar Category Products





Other Books by டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப - Dr M.Rajendiran I.A.S