Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஆண்மைக்குறைவு, விந்து நோய், மலடு, மூல நோய் நீக்கும் யோகாசனங்கள் - ஆசனா இரா.ஆண்டியப்பன் Aanmaikuraivu, Vindhu Noi, Maladu, Moola Noi Neekum Yogasanangal by Asana R Aandiappan - Yoga for infertility, impotence (Tamil)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 220
₹60.00
யோகாசனம் புத்தகம்.
 
படிக்கக்கூடிய எழுத்துரு; 
காகித அட்டை; 
150 பக்கங்கள்; 
முதல் பதிப்பு:  Apr 2001; 
மூன்றாம் பதிப்பு: மார்ச் 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஆசிரியர் உரை: 
நான் இந்த யோகாசனக் கலையை உடல் நலம் பேணும் நோக்கத்துடனேயே பயின்றேன். 30 ஆண்டுகளுக்கு முன் எனது குருநாதர் பெங்களூர் சுந்தரம் அவர்கள் தமிழகத்தில் உள்ள பெருநகரங்களுக்கு வந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு இக்கலையைப் பயிற்றுவிக்கப்  பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.
 
அவர்கள், நெல்லை சந்திப்பு இந்துக் கல்லூரியில் பல  நாட்கள் தங்கி இக்கலை பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதுமுதல் இக்கலை மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. 
 
எனது குருநாதர் எழுதிய  யோகாசனப் புத்தகங்களைப் படித்து பயின்றதோடு யோகாசன சம்பந்தமான இந்திய மொழியில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி அதில் உள்ள யோகாசனங்களையும் பயின்றேன்.
 
இந்தியாவில் யோகாசனங்களை பற்றி, நடைபெறும் பல மாநாடுகளில் என்னை அழைத்து கௌரவித்த பின்புதான் இக்கலை பற்றி வெளிநாட்டினர் கொண்டிருக்கும் ஆர்வமும் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதும் தெரிய வந்தது. பஞ்சாபில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள், யாவரும் யோகாசனம் பயின்றவர்களாக இருக்கிறார்கள், அலோபதி டாக்டர்கள் அனைவரும் யோகாசனம் தெரிந்தவர்களாக இருப்பதோடு நோயாளிகளுக்கு யோகாசனப் பயிற்சியை அவ்வப்போது பயிலச் சொல்கிறார்கள்.
 
பம்பாய், டில்லி, பஞ்சாப், பீகார் போன்ற இடங்களில் யோகாசனக் கல்லூரிகள் அரசின் ஆதரவில் நடைபெற்று வருவதோடு மேனாட்டு டாக்டர்கள் நம் நாட்டு வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்களை இலகுவான ஆசனங்கள் மூலம் நீக்கிக் காட்டியதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
 
ஒவ்வொரு ஆசனம் செய்யும் போதும் மனித உடலில் ரத்த ஓட்டம், நாடி நரம்பு மண்டலம் வேலை செய்யும் விதம் இவைகளை பல மின்சார நூதனக் கருவிகள் மூலம் பார்ப்பவர்களுக்கு விளக்கிக் காட்டுவதால் வெளிநாட்டினருக்கு இக்கலை மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு வெளிநாட்டினர் பலர் இந்தியா வந்து இக்கலையை பயின்று செல்கின்றனர்.
 
வடநாட்டு பல்கலைக் கழகங்களில் யோகாசனக் கலையை தனிப்பாடமாக வைத்து பி.ஏ., எம்.ஏ., போன்ற பட்டங்கள் கொடுக்கிறார்கள். பம்பாய் நடிகர் பயிற்சிப் பள்ளியில் யோகாசனம் கட்டாய பாடமாக்கப்பட்டு தினமும் இக்கலையைப் பயிற்றுவிக்க ஆதரவு கொடுத்து பல மாகாணங்களுக்கு கோடிக் கணக்கில் மானியம் வழங்கி வருகிறார்கள்.
 
இவற்றை எல்லாம் பலமுறை வடநாடு சென்று பார்த்த பின்பு தமிழகத்தில் எப்படியும் இக்கலையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் திடமாக ஏற்பட்டது. எனது முயற்சிகளுக்கு பெருத்த ஆதரவும் ஊக்கமும் கொடுத்த ஸ்ரீராம் பாப்புலர் அதிபர் திரு.சுந்தரம் பிள்ளை அவர்கள், மாநில ஆளுநர் திரு.கே.கே.ஷா அவர்கள், மதுரை காந்தி நினைவு நிதி தலைவர் திரு.அருணாசலம் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திரு.கே.மாதவசர்மா. திரு.சண்முகசிகாமணி. திரு.துரைராஜ், திரு.சுந்தரம் அவர்கள், இந்திய மருத்துவக் கல்லூரி முதல்வர் திரு.குருசிரோன்மணி ஆகியோருக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன். T.V.S.நிறுவனத்தார்கள் குறிப்பாக மதுரை நிர்வாக இயக்குனர் திரு.S.ராமச்சந்திரன் அவர்களின் ஆதரவும் கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்பும் என்னை மேலும் இக்கலை வளர்ச்சியில் மிக உற்சாகமாக ஈடுபட செய்ததை என்றும் மறக்க இயலாது.
 
மேலும் தமிழக அன்பர்கள் இக்கலையின் அருமையை உணர்ந்து எனது முயற்சிக்குப் பெருத்த ஆதரவு நல்கி வருவதைக் கருத்தில் கொண்டு எனது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று முழு நேரமும் இக்கலை வளர்ச்சிக்குப் பாடுபட முற்பட்டுள்ளேன்.
 
பல்வேறு நோய்க்கு பல்வேறு ஆசனங்கள் செய்வதால் நோய்கள் முற்றிலும் குணமாகுவதை அனுபவரீதியாக உணர்ந்ததால் நோய்களை யோகாசனங்கள் மூலம் நீக்குவதற்கான  புத்தகங்கள் எழுதி முடித்துள்ளேன். தமிழக மக்கள் இப்புத்தகத்திற்கு ஆதரவு நல்கி பல்வேறு நோய்கள் நீங்கப் பெற்று "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் பேற்றினை அடைந்து சுகம் பெறுவார்களாக !
 
                                                                                இப்படிக்கு 
                                                                               இரா.ஆண்டியப்பன்,
                                                                               யோகாசன ஆசிரியர்.
 
 
                                                    அணிந்துரையிலிருந்து :   
 
நீரிழிவு என்பது நாளடைவாக அன்ன இரசமானது அப்பருவ நிலையுடன் இரத்தத்தில் கலந்து ஏழு உடற்கட்டுகளையும் போஷிக்காமல் உடலாய் உறுக்கிவிடக் கூடிய கொடிய நோயாகும். பித்தளத்தில் ஏற்படும் இந்நோயினை ஆசனங்களின் மூலமாக, படிப்படியாக வேரறுத்து உடலையும் உயிரையும் பற்றிய பயங்களைப் போக்கி தன்னிலையில் வைக்க முடியும் என திரு.ஆண்டியப்பன் உறுதிப்படுத்த முயன்றிருப்பது போற்றுதற்குரியது. அதுமட்டுமல்லாமல் நீரிழிவு நோய்க்குத் துணையாக வரக்கூடிய தொடர் நோய்களான நினைவு இழத்தல், ஆண் தன்மை இழத்தல் ஆகியவற்றிற்கும் அனுபவ அடிப்படையில் ஆசனப் பயிற்சிகளை குறிப்பாக மலச்சிக்கலுக்கு சலபாசனம், கக்குவான் போன்ற நுரையீரல் பிணிகளுக்கு மத்ச்யாசனம், தாது இழப்பு, மூலம் நீங்க யோக முத்திரை, குருதி அழுத்தம் நீங்க சவாசனம், ஆஸ்துமா நோய் நீங்க சர்வாங்காசனம், உசர்ட்டாசனம், நாடிசுத்தி எனக் குறிப்பிட்டுச் சொல்வது அரிய முயற்சி. சிறப்பாக சவாசனத்தின் மூலமாக மிகுந்த குருதி அழுத்தத்தைக் குறையச் செய்வது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.
 
சொல்ல வேண்டிய செய்திகளை நீட்டி முழக்கி படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்பட்டு விடாமல் படித்தவர், பாமரர், ஆடவர், பெண்டிர் அனைவரும் உணர்ந்து கையாளுகின்ற வகையில் எளிய நடையில், இரத்தின சுருக்கமாகச் சொல்லியிருப்பது மற்றொரு சிறப்பு. இலாப நட்டக் கணக்கு போடாமல் நமது நாடு, நமது பண்பாடு, நமது கலை வளர வேண்டும் என்கிற பொது நோக்கு எந்த ஒரு இலட்சியத்திற்கும் வெற்றி தேடித் தந்திடும். அதைப்போல் தாம் பெட்ரா இன்பம் பெறுக இவ்வையகம் என நமது பண்பாட்டின் ஒரு நிலையாக அமைந்திருக்கின்ற "ஆசனங்களை" மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து இந்தக் கலையை வளர்க்கின்ற திரு.ஆண்டியப்பனுடைய முயற்சியை சித்தர் கலையைப் பேணி வளர்க்கும் தமிழக அரசின் இந்தியமுறை மருத்துவ இயக்குநர்  என்கிற உரிமை உணர்வோடு வாழ்த்துகிறேன்.
 
இந்நூலை படிக்க முனைபவர்கள் இதன் பயனை, வெளி நாட்டார் கையாண்ட அளவுக்காவது உணர்ந்து ஆசனங்களைப் பற்றி விரிவாக அறிந்து அனுபவத்தில் கொள்ள ஆவல் கொள்ளுவது உறுதி. அதனை ஆசிரியருடைய இதர நூற்களும் பயிற்சி முறைகளும் நிறைவு செய்யும் எனக் கருதுகிறேன்.
 
பொதுமக்களும் சித்த மருத்துவ இளநிலைப் பட்டதாரிகளும் முதுநிலை பட்டதாரிகளும் திரு ஆண்டியப்பன் போன்றோருடைய தொண்டினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.
 
                                   வளர்க சித்தர் கலை!
                                  
                                                                    பேராசிரியர் Dr.பொன் குருசிரோன்மணி
                                                                    B.A.G.C.J.M, 
                                                                    இயக்குநர்,
                                                                    தமிழக அரசின் இந்திய முறை மருத்துவம்,
                                                                    சென்னை.
 
 
                                                    பொருளடக்கம்: 
1.அணிந்துரை;  
2.ஆசிரியர் உரை;  
3.ஆண்மைக் குறைவும், ஆண்மை இல்லாமையும்;  
4.விந்து நோய்;  
5.யோக சிகிச்சைத் திட்டம் & உணவு;  
6.மலட்டுத்தனம்;  
7.சிகிச்சை திட்டம் & உணவு; 
8.பெண்ணின் தீட்டுக் கோளாறுக்கான யோக சிகிச்சை திட்டங்கள்;  
9.மூலநோய்;  
10.ஆசனத் திட்டம் & உணவு;  
11.யோகாசனப் பயிற்சிக்கு முன் கவனிக்கப்பட  வேண்டியவைகள்;  
12.பத்மாசனம்;  
13.யோக முத்ரா;  
14.சலபாசனம்;  
15.தனூராசனம்;  
16.மயூராசனம்;  
17.அர்த்த மத்ச்யேந்திராசனம்;  
18.பச்சிமோத்தாசனம்;  
19.விபரீதகரணி;  
20.சர்வாங்காசனம்; 
21.மச்சாசனம்;  
22.அர்த்த சிரசாசனம்;  
23.சிரசாசனம்; 
24.நின்றபாத ஆசனம்;  
25.நாடி சுத்தி, பிராணாயாமம்;  
26.ஹலாசனம்;  
27.உட்டியானா;  
28.நௌலி;  
29.சர்வாங்க அஸ்வினிமுத்ரா;  
30.சிரசாசன அஸ்வினி முத்ரா;  
31.அஸ்வினி முத்ரா - பலகையில்; 
32.சவாசனம்;  
33.தாது விருத்திக்கான மருந்துகள்;  
34.ஆண்மை அதிகரிக்க யோகாசனமே சிறந்த வழி;  
35.பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு; 
36.குடி, புகை பழக்கம் நிறுத்த யோகா சிகிச்சை;  
37.ஆண்மைக் குறைவு பற்றி முக்கிய குறிப்புகள்;  
38.ஆண்மைக் குறைவிற்கு காரணம் - அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு;  
39.ஆண்மைக் குறைவு - பத்திரிகை செய்தி;  
40.மருந்தே இல்லாத இயற்கை மருத்துவ மகிமை.  
 
Best Selling Book : Yoga for Venereal, Piles and Impotence.
 
Yoga Therapy for Venereal Diseases; 
Yoga Therapy for Impotence; 
Yoga Therapy for Piles; 
Asanas and Pranayamas that help address and cure the above diseases; 
Weekly yoga practice routine program chart for all the above mentioned diseases.
Yogic Diet chart plan for above mentioned diseases. 
 
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பன் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.
 
Read more at: https://yourstory.com/tamil/60fbb5d40e-yoga-gives-peace-of-body-and-mind-the-list-of-training-centers-
More Information
SKU Code Bharti B 220
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Asana R Aandiappan ஆசனா இரா.ஆண்டியப்பன்
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:ஆண்மைக்குறைவு, விந்து நோய், மலடு, மூல நோய் நீக்கும் யோகாசனங்கள் - ஆசனா இரா.ஆண்டியப்பன் Aanmaikuraivu, Vindhu Noi, Maladu, Moola Noi Neekum Yogasanangal by Asana R Aandiappan - Yoga for infertility, impotence (Tamil)

Similar Category Products