Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பேசும் பரம்பொருள் (பாகம் 2) - மருத்துவர் சுதா சேஷய்யன் Pesum Paramporul (Paagam 2)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 515
₹350.00
ஆன்மீகம் நூல். 
 
முதற் பதிப்பு: டிசம்பர், 2018; 
கெட்டியான அட்டை; 
480 பக்கங்கள்; 
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் பேசும் பரம்பொருள் (பாகம் 2), மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.      
 
"ஆலயம் செல்வது சாலவும் நன்று" என்றதொரு முதுமொழி தமிழில் உண்டு. அந்த விரிபொருளை எளிமையாக சுருங்கச் சொல்ல வேண்டுமானால், "ஆயிரங்கோடி நன்மைகள் அதனாலுண்டு" என்று சொல்லலாம். எல்லா மதங்களும் இறைவனைத் தேடும் வழிகளையே எடுத்துச் சொல்கின்றன என்றாலும், ஹிந்து மதம் காட்டும் நன்னெறிகள், வழிபாட்டு முறைகள் மிகவும் உன்னதமானவை.
 
நமது வழிபாட்டு முறைகளை வாழ்வின் செயல்பாட்டு முறைகளில் இரண்டறக் கலக்கச் செய்த நமது முன்னோர்களின் மகோன்னதப் பார்வையினை அணுகி, நுணுகிப் பார்த்திருக்கும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் , "பேசும் பரம்பொருள்" என்றே அதனை வழங்கியிருக்கிறார். இந்நூல் இதுவரை பேசாத, பேசமுடியாத பேருண்மைகளைப் பேசுகிறது. பரம்பொருள் நம்மிடம் பேசும் என்பதையும், பரம்பொருளிடம் நாம் பேசமுடியும் என்பதையும் மெய்யாக உணர்த்துகின்ற மெய்மை நூலாக இது அமையும் என்கின்ற நம்பிக்கையுடன் இதனை வாசகர்முன் வைக்கின்றோம்.           
                                            
பொருளடக்கம்: 
01.விநாயகர் வழிபாடு; 
02.விநாயகனே வினைதீர்ப்பவனே;  
03.தாயே தயாபரி;  
04.எங்கெங்கு காணினும் சக்தி;  
05.அம்பிகையைச் சரண்புகுந்தால்;  
06.நலம் தரும் நவராத்திரி;  
07.மலைமகள் வணக்கம்; 
08.அலைமகள் வணக்கம்; 
09.கலைமகள் வணக்கம்; 
10.அம்மன் வழிபாடு - ஓர் அறிவியல் பார்வை;  
11.காஞ்சி காமாக்ஷி;  
12.நமச்சிவாய வாழ்க !; 
13.ஆரூர் அழகர்;  
14.பசுபதி - கோவிந்தன்;  
15.மீனாக்ஷி சுந்தரேசத் திருக்கல்யாணம்;  
16.சேவலும் மயிலும் போற்றி;  
17.ஆறுமுகமான பொருள்;  
18.பத்ரம் புஷ்பம் பலம் தோயம்;  
19.அன்பும் பக்தியும்;  
20.கடவுளுக்கு எது பிடிக்கும் ?; 
21.தர்ம ஸம் ஸ்தாபனார்த்தாய;  
22.அன்பு ஆசானாக்கும்;  
23.காரேய் கருணை ராமாநுஜர்;  
24.தாமாய திருமேனி;  
25.சரணாகதி கத்யம்;  
26.அனுபூதி காட்டிய ஆன்மீக குரு;  
27.பூஜ்யாய ராகவேந்திராய;  
28.மகத்துவ மகளிர்; 
29.பெருமை மிக்க பெண்டிர்;  
30.ஆன்மீக உலகில் ஓர் அக்கையார்;  
31.ஆன்ம வெளிச்ச விழா;  
32.திருமகள் திருவிழா;  
33.கஜேந்திர மோக்ஷம்;  
34.பீஷ்மப் பிதாமகர்;  
35.இருட்டில் வெளிச்சம்;  
36.தெய்வீக வாஹனங்கள்;  
37.சந்தானக் குரவர்;  
38.நந்திகேச்வரர் திருமணம்;  
39.பஞ்சபூதங்கள் முதல் பஞ்சேந்திரியங்கள் வரை;  
40.மனமும் சினமும் அடங்கினால்;  
41.வாழ்வாங்கு வாழ்பவர்;  
42.ஆய கலைகள் 66; 
43.ஞானக் கிளி;  
44.நெருப்பில் பூத்த மலர்;  
45.கம்பரிடம் கற்போம்;  
46.அணிலுக்கும் ஆசை;  
47.ராமன் எதனை ராமனடி !; 
48.பக்தி வழியும் ராமகதையும்;  
49.சூரியபுத்திரனும் சூரியச் சீடனும்;  
50.பதினாறும் பெற்று;  
51.வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணைநாதர்.
 
புத்தக விமர்சனம்:-
'பேசும் பரம்பொருள்' - இந்த நூலின் உட்புகுந்து வாசிக்க வாசிக்க இது வானதி பதிப்பகத்தின் 'தெய்வத்தின் குரல்' என்ற நூலின் தொடர்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நூலைப் படிக்க படிக்க இது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாகத் திகழ்வதை உணர முடிகிறது !
 
- நீதியரசர் எம்.கற்பகவிநாயகம்
முன்னாள் தலைமை நீதியரசர், ஜார்கண்ட் மாநிலம்.
                                                             x-x-x-x
 
டாக்டர் சுதா சேஷய்யனின் இந்த கட்டுரைகளைப் படித்து முடித்தபின் எனக்குத் தோன்றிய சிந்தனை என்னவென்றால் கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்திற்குப் பின், மத நம்பிக்கைகளின் பின்னணியிலுள்ள வாழ்வியல் சிந்தனைகளையும், அறிவியல் உண்மைகளையும் எடுத்துக் காட்டும் மாபெரும் முயற்சி இக்கட்டுரைகள் என்பதுதான். எனவே, உடற்பிணி மருத்துவத்தோடு, டாக்டர் சுதா சேஷய்யன் ஆன்மிகப் பிணி மருத்துவத்திலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
-நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், 
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கான ஹைதராபாத் உயர்நீதிமன்றம்.
                                                             x-x-x-x
 
ஒவ்வொரு தெய்வத்தின் தோற்றத்தையும், நமது பாரத நாடு எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் விரிவாகவும், வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கதை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
 
விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும்,தோப்புக்கரணம் என்பதன் பொருளையும், விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன் என்ற பெயர் எப்படி வந்தது, இடது கொம்பை விநாயகர் தானே ஒடித்து எழுத்தாணியாக்கிய சம்பவத்தையும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவிதத்தில் அழகுற விளக்கியுள்ளார்.
 
இதேபோல வீரம், துணிச்சலுக்கு அதிபதியான துர்க்கை (மலைமகள்), செல்வத்துக்கு அதிபதியான லெட்சுமி (அலைமகள்), கல்விக்கு அதிபதியான சரஸ்வதி (கலைமகள்) ஆகிய மூன்று தெய்வங்களையும் வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைச் சுவைபட எழுதியுள்ளார்.
 
அதுமட்டுமல்லாமல், அம்மன் வழிபாட்டை அறிவியல்பூர்வமாக தெளிவுபட விளக்கியுள்ளார். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாயார, மனமார வாழ்த்துவது நமது மரபு, பண்பாடு. பதினாறு கிடைத்தால் பெருவாழ்வு என்று புரிகிறதே தவிர, அவை என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
 
பதினாறும் பெற்று பெருவாழ்வு என்றால் பதினாறு குழந்தைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்றுதான் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். கல்வி, தனம், அறிவு, நோயின்மை உள்ளிட்ட 16 பேறுகளை என்ன என்று தெளிவுபட உதாரணங்களுடன் விளக்கி நமக்குப் புரிய வைக்கிறார். மதநம்பிக்கையின் பின்னணியில் உள்ள வாழ்வியல் சிந்தனைகளையும், அறிவியல் உண்மைகளையும் எடுத்துச்சொல்லும் முயற்சியில் நூலாசிரியர் சுதா சேஷய்யன் வெற்றிபெற்றுள்ளார். மொத்தத்தில் ஆன்மிகம்,
 
அறிவியல், தெய்வீகம் ஆகிய மூன்றையும் ஒன்றுடன்
ஒன்றை தொடர்புபடுத்தி எளிமையாக எடுத்துச்சொல்லி வாசகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். ஆன்மிகத் தேடலில் நாட்டமுள்ள இளைஞர்கள், பெண்களுக்கு இந்த நூல் ஓர் ஆன்மிகக் களஞ்சியம் என்று சொன்னால் அது மிகையாகாது.”,
 
நன்றி: தினமணி, 4/2/19.
                                                             x-x-x-x
 
ஆசிரியர் குறித்து: தமிழகத்தில் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளராகவும், கைதேர்ந்த மருத்துவராகவும், அனைவராலும் அறியப்பட்டவர் டாக்டர் சுதா சேஷய்யன். இவர், சிவில் சர்ஜன் பொறுப்பை தன்னுடைய 30-வது வயதிலேயே பெற்று, பின்னர் மருத்துவ பேராசிரியராக 30 வருடங்கள் அனுபவம் பெற்றவர் . 
 
மனித உடற்கூறியல் தொடர்பான ’Gray’s Anatomy’ என்கிற பிரபலமான புத்தகத்தை வெளியிட்ட, சர்வதேச ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவராக இடம் பெற்றிருந்தார். இவர்  சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள, மனித உடற்கூறியல் துறையின் இயக்குநராகவும், பேராசிரியையாகவும் பணியாற்றி, பின்னர் அக் கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.  
 
தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணியாற்றிய இவர், சிறந்த நிர்வாகி என்ற விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் எழுதிய மருத்துவ அறிவியல் மற்றும் உடற்கூறியல் தொடர்பான கட்டுரைகள், பல்கலைக்கழகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன.திப்பகத்தால் வெளியிடப்பட்டது.
More Information
SKU Code VAN B 515
Weight in Kg 0.700000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name மருத்துவர் சுதா சேஷய்யன் - Dr.Sudha Seshayyan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:பேசும் பரம்பொருள் (பாகம் 2) - மருத்துவர் சுதா சேஷய்யன் Pesum Paramporul (Paagam 2)

Similar Category Products





Other Books by மருத்துவர் சுதா சேஷய்யன் - Dr.Sudha Seshayyan