Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
VAN B 514
₹300.00
ஆன்மீகம் நூல்.
முதற் பதிப்பு: டிசம்பர், 2016;
கெட்டியான அட்டை / ஹார்ட்பௌண்ட்;
432 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் பேசும் பரம்பொருள், மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
"ஆலயம் செல்வது சாலவும் நன்று" என்றதொரு முதுமொழி தமிழில் உண்டு. அந்த விரிபொருளை எளிமையாக சுருங்கச் சொல்ல வேண்டுமானால், "ஆயிரங்கோடி நன்மைகள் அதனாலுண்டு" என்று சொல்லலாம். எல்லா மதங்களும் இறைவனைத் தேடும் வழிகளையே எடுத்துச் சொல்கின்றன என்றாலும், ஹிந்து மதம் காட்டும் நன்னெறிகள், வழிபாட்டு முறைகள் மிகவும் உன்னதமானவை.
நமது வழிபாட்டு முறைகளை வாழ்வின் செயல்பாட்டு முறைகளில் இரண்டறக் கலக்கச் செய்த நமது முன்னோர்களின் மகோன்னதப் பார்வையினை அணுகி, நுணுகிப் பார்த்திருக்கும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் , "பேசும் பரம்பொருள்" என்றே அதனை வழங்கியிருக்கிறார். இந்நூல் இதுவரை பேசாத, பேசமுடியாத பேருண்மைகளைப் பேசுகிறது. பரம்பொருள் நம்மிடம் பேசும் என்பதையும், பரம்பொருளிடம் நாம் பேசமுடியும் என்பதையும் மெய்யாக உணர்த்துகின்ற மெய்மை நூலாக இது அமையும் என்கின்ற நம்பிக்கையுடன் இதனை வாசகர்முன் வைக்கின்றோம்.
வாழ்த்துரை:
டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களின் பல தெய்வீக சொற்பொழிவுகளை நான் கேட்டிருக்கிறேன். அவற்றின் அமுத ருசியைப் பருகி, ஆனந்தத்தில் திளைத்துள்ளேன். அவரது விஷய ஞானம், சொல்லாற்றல், உரையில் பொதிந்திருக்கும் நம் வேத கால மகரிஷிகளின் விஞ்ஞான, அறிவியல் திறன், தெய்வீகம், ஆன்மிக உணர்வு ஆகியவற்றைக் கண்டு பிரமித்திருக்கிறேன்.
ஆதலால், இந்நூலின் அச்சகப் பிரதியைப் படித்த பொது, அள்ள அள்ளக் குறையாத, அறிவுச் சுரங்கமாக அது திகழ்வதைக் கண்டு நான் வியப்படையவில்லை.
எப்போதெல்லாம் டாக்டர் சுதா சேஷய்யனின் சொற்பொழிவுகளைக் கேட்டேனோ, அப்போதெல்லாம் என் மனக்கண் முன், மா மன்னர் ஜனகரின் சபையில் மகரிஷிகள் வசிஷ்டர், விஷ்வாமித்திரர், ஜாபாலி, சதானந்தர் ஆகியோருடன் சரிசமமாக வாதாடிய கார்கி, ஸ்த்ரீ தர்மத்தின் உயர்வை உலகறியச் செய்த அநசூயை (மகரிஷி அத்திரியின் பத்தினி); மன உறுதியுடன், மகரிஷி யாக்ஞ வல்கியரிடமிருந்து சுக்கில யஜுர் வேதத்தைக் கற்றறிந்த மைத்ரேயி; கன்னிகைகளின் கடமைகளை எடுத்துக் கூறிய சுகன்யை (மகரிஷி ச்யவனரின் பத்தினி )போன்ற பெண் இரத்தினங்கள் என் மனக்கண் முன் நிற்பர்.
'பேசும் பரம்பொருள்' புத்தகத்தின் மூலம், நமது வேத கால மகரிஷிகளே பேசுகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
சாதாரண மக்களும் எதிரில் புரிந்து கொள்ளும்படி, ஆசிரியர் தனக்கே உரித்தான மிகவும் எளிய நடையில், பல அற்புத விஷயங்களைத் தக்க ஆதாரத்துடன் விளக்கியிருப்பது பாராட்டுதலுக்கு உரியது. அனைத்து விஷயங்களிலும் அவரது ஆழ்ந்த புலமை தெரிகிறது.
உதாரணமாக, நம் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் "மகர சங்கராந்தி"யின் போது நிகழும் "போகி"ப் பண்டிகை, பஞ்சாபில் "லோஹ்ரி" என கொண்டாடப்படுவதை விவரித்துள்ளார் ஆசிரியர்.
"காயத்ரி" மஹா மந்திரத்தின் உயர்வை ஆசிரியர் விளக்கியுள்ள பாங்கு, அவருக்கு வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உள்ள புலமை வெளிப்படுகிறது. மேல்நாட்டு மேதையும், விஞ்ஞானியுமான ஜே.பி.எஸ்.ஹால்டேன், காயத்ரி மந்திரத்தின் பெருமையையும், தெய்வீகத்தையும் கூறியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் சுதா சேஷய்யன்.
ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார ரகஸ்யத்தை எடுத்துச் சொல்லும் "யாதவாசல மஹாத்மியம்" பற்றியும், அது பற்றிய ஆய்வாளர்களின் கருத்தையும் தெரிவித்திருப்பது ஆசிரியரின் ஆராய்ச்சித் திறனை எடுத்துக்காட்டுகிறது.
சுமார் 400க்கும் அதிகமாகப் பக்கங்களைக் கொண்ட அறிவுக் களஞ்சியம் "பேசும் பரம்பொருள்" என்ற இந்நூல், ஒவ்வொருவரும், முக்கியமாக நம் இளைஞர்களும், பெண்களும் படித்துப் பயன்பெற வேண்டிய பொக்கிஷம் இது.
தாஸன்,
ஏ.எம்.ராஜகோபாலன்,
ஆஸ்தான வித்வான்,
ஸ்ரீமத் அஹோபில மடம்.
பொருளடக்கம்:
01.பேசும் பரம்பொருள்;
02.சஷ்டி விரத மாட்சி;
03.கார்த்திகையின் சிறப்பு;
04.பைரவர் பெருமையும் வழிபாடும்;
05.மார்கழியின் மேன்மை;
06.விசேஷமான ஏகாதசி;
07.ஆருத்ரா தரிசனம்;
08.விரல் நுனியில் மஹாலஷ்மி வாசம்;
09.ஆலய நமஸ்காரம் -சில வழிமுறைகள்;
10.தைப்பொங்கல் திருநாளும் சித்திரை ஆண்டுப் பிறப்பும்;
11.தைப்பூசச் சிறப்பு;
12.அனுபவ அறிவும் துளசியின் பெருமையும்;
13.தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாடு;
14.கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?;
15.மஹாமகச் சிறப்பு;
16.சண்டிகேச்வரர் வரலாறு;
17.மஹாசிவராத்திரி மஹிமை;
18.காரடையான் நோன்பும் கதையான கதைகளும்;
19.ஒற்றுமையை வளர்க்கும் 'ஹோலிப் பண்டிகை';
20.விரதத்தின் பெருமை;
21.கோவில் மரங்களும் கோடைத் தீர்வும்;
22.நவராத்திரிகள் பல !;
23.பூஜைகளில் பெண்கள் மணி அடிக்கலாமா ?;
24.தெய்வங்கள், நம்பிக்கைகள்;
25.வல்லபாசார்யர் அவதார மகிமை;
26.ஆதிசங்கரரும், ராமானுஜரும்;
27.ஏகாதசி வழிபாடு;
28.கோவிலுக்குச் செல்வதும் வீட்டில் வழிபடுவதும் - சில சந்தேகங்கள்;
29.வைகாசி விசேஷங்கள்;
30.கோவில் மரங்களை வீடுகளில் வளர்க்கலாமா ?;
31.கோவிலுக்குப் போனால்தான் பக்தியா ?;
32.காயத்ரி மந்திரம்;
33.தெய்வ வடிவங்கள்;
34.கருடாழ்வாரின் சிறப்புகள்;
35.ஆனித் திருமஞ்சனம் தரிசிப்போம்;
36.குரு பூர்ணிமையின் மஹிமை;
37.சாதுர்மாஸ்ய விரதத்தின் பெருமை;
38.ஆடி மாத விசேஷம்;
39.குரு பெயர்ச்சி;
40.நாக பஞ்சமி;
41.பகவான் - பக்தர் உறவு;
42.வெண்ணெய் திருடிய கண்ணன்;
43.ஸ்தல புராணக் கதைகள்;
44.பலிபீடம் எதற்காக ?;
45.மஹாலய பக்ஷம்;
46.வேதாந்த தேசிகர்;
47.நலம் தரும் நவராத்திரி;
48.ஸ்ரீமத்வாசார்யர்;
49.சரத் பௌர்ணமி;
50.முதலாழ்வார்கள்;
51.காந்திமதியின் தவம்;
52.உப்பிலியப்பன்;
53.தேவ தீபாவளி;
54.அறிவும் அன்பும்;
55.மாங்காடு காமாக்ஷி அம்மன்;
56.பிரார்த்தனை, நேர்த்திக்கடன்;
57.தத்தாத்ரேயரின் ஜெயந்தி.
புத்தக விமர்சனம்:-
இந்து மதப் பண்டிகைகளையும் சடங்குகளையும் எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் துக்ளக் வார இதழில் எழுதி பிரமிக்க வைத்தார் சுதா. அவற்றின் தொகுப்பே இந்நூல். துருவன், நசிகேதஸுக்குப் பிறகு கேள்விகள் கேட்க ஆள் இல்லையே தவிர கேள்விகள் இல்லாமல் இல்லை. சஷ்டி விரத மாட்சி, கார்த்திகையின் சிறப்பு, பைரவர் பெருமையும் வழிபாடும், மார்கழியின் மேன்மை, மகாமகச் சிறப்பு, மகா சிவராத்திரி மகிமை, ஏகாதசி வழிபாடு, பிரார்த்தனை, நேர்த்திக் கடன் என்று ஆகமங்களின்படி விளக்கியிருக்கிறார். - இந்து தமிழ் திசை.
ஆசிரியர் குறித்து: தமிழகத்தில் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளராகவும், கைதேர்ந்த மருத்துவராகவும், அனைவராலும் அறியப்பட்டவர் டாக்டர் சுதா சேஷய்யன். இவர், சிவில் சர்ஜன் பொறுப்பை தன்னுடைய 30-வது வயதிலேயே பெற்று, பின்னர் மருத்துவ பேராசிரியராக 30 வருடங்கள் அனுபவம் பெற்றவர் .
மனித உடற்கூறியல் தொடர்பான ’Gray’s Anatomy’ என்கிற பிரபலமான புத்தகத்தை வெளியிட்ட, சர்வதேச ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவராக இடம் பெற்றிருந்தார். இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள, மனித உடற்கூறியல் துறையின் இயக்குநராகவும், பேராசிரியையாகவும் பணியாற்றி, பின்னர் அக் கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணியாற்றிய இவர், சிறந்த நிர்வாகி என்ற விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் எழுதிய மருத்துவ அறிவியல் மற்றும் உடற்கூறியல் தொடர்பான கட்டுரைகள், பல்கலைக்கழகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன.
SKU Code | VAN B 514 |
---|---|
Weight in Kg | 0.690000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | மருத்துவர் சுதா சேஷய்யன் - Dr.Sudha Seshayyan |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹140.00
Save: 20.00 Discount: 12.50%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%