Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஆன்மீகப் பாதையில் -ஸ்வாமி குருபரானந்த - Aanmeega Paadhaiyil... - Swami Guruparananda - Anmiga Padhayil - Anmika Padayil - Anmeeka Padhail - Aanmiga Paathayil - Anmiha Pathayil - Aanmiga Pathaiyil

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 470
₹70.00
ஆன்மீகம் நூல். 
 
காகித உறை / பேப்பர்பேக்; 
136 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: டிசம்பர், 2004; 
ஆறாம் பதிப்பு: ஜூன், 2018.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் ஆன்மீகப் பாதையில்…, சுவாமி குருபரானந்தா அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                  
 
பொருளடக்கம்: 
முகவுரை 
1.ஆன்மீகம் 
2.அஹிம்ஸா 
3.வாய்மை 
4.யாருக்கு விடுதலை                                             
 
முகவுரை :  
ஆன்மீகப் பாதையில் அடி எடுத்து வைப்பவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நூல் இது.
 
முயற்சியின்றி எதையும் நாம் சாதிக்க இயலாது. அந்த முயற்சி முறையானதாகவும் இருக்க வேண்டும். ஓர் இடத்தை அடைய 'பயணம்' என்ற முயற்சியை மேற்கொள்பவர் சரியான திசையிலும் சரியான பாதையிலும் பயணம் செய்வது முறையான முயற்சி. அவ்விதம் சரியான பாதையில் பயணம் செய்ய வேண்டுமெனில் அப்பாதையை பற்றிய அறிவு தேவைப்படுகிறது.
 
ஆன்மீகப் பாதையை பற்றிய அறிவை நாம் அதை நன்கு அறிந்த குருவிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும். கேட்கப்பட்ட கருத்தே இங்கு புத்தக வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆன்மீகம் என்ற சொல்லை நாம் சரியாக புரிந்துகொள்ளும் பொருட்டு அதன் சரியான அர்த்தமும் ஆன்மீகப் பயிற்சியின் சுருக்குமான விளக்கமும் ஆன்மீகம் என்ற தலைப்பில் இங்கு முதலில் விளக்கப்பட்டுள்ளது.
 
நம்மை பண்படுத்துதல் ஆன்மீகத்தின் அச்சாணி ஆவதால் ஆன்மீக ஸாதகர்கள் முக்கியமாகக்  கடைப்பிடிக்க வேண்டிய பண்பான அஹிம்ஸை இங்கு இரண்டாவதாக விளக்கப்பட்டுள்ளது.
 
அஹிம்ஸையைப் போன்று வாய்மையும் ஒரு முக்கிய பண்பாகிறது. எனவே வாய்மையைப் பற்றிய விளக்கம் மூன்றாவது தலைப்பாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. வாய்மையைப் பின்பற்றி வாழ முடியாது என்ற தவறான கருத்து நிலவக் காரணம் அறியாமை. வாய்மையின் உண்மையான தன்மையை அறியும்போது, இதுவும் நம்மால் பின்பற்றக்கூடிய பண்பே என்பது நமக்குத் தெளிவாகும்.
 
மனதைப் பண்படுத்துவதுடன் ஆன்மீகப் பயணம் நிறைவு பெறுவதில்லை. பண்பட்ட, தூய்மையான மனதுடன் ஆத்ம விசாரத்தை மேற்கொண்டு 'ஆத்மா' அல்லது 'நான்' என்ற சொல்லுக்கான உண்மையான பொருளை உணரும் போதுதான் நம்முடைய ஆன்மீகப் பயணம் நிறைவு பெறுகிறது. ஆகவே, நான்காவதாக உபநிஷத் மந்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு யாருக்கு விடுதலை, என்ற தலைப்பில் ஆத்ம விசாரம் செய்யப்படுகிறது. 
 
நம் மனதைத் தூய்மைப்படுத்தும் ஸாதனைகள் யோக அப்யாசம் எனவும், நான் என்ற சொல்லின் சரியான அறிவை அடைய மேற்கொள்ளும் விசாரம் ஞான அப்யாசம் என்றும் கூறப்படுகின்றன. யோக அப்யாசம், ஞான அப்யாசம் ஆகிய இந்த இரண்டு பாதைகளில் செல்லும் பயணமே ஆன்மீகப் பயணம் ஆகும்.
 
அடி எடுத்து வையுங்கள் 
ஆன்மீகப் பாதையில் ...
 
எழுத்தாளர் பற்றி : ஸ்வாமி குருபரானந்த மரபு நெறிப்படி அத்வைத வேதாந்த சாத்திரங்களை கற்பிக்கும் ஆசிரியர். இவர் சுவாமி பரமார்த்தனந்த சரசுவதியின் சீடர். தம் குருநாதரிடம் முறைப்படி வேதாந்த சாத்திரங்களைப் பயின்றவர். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களிடம் துறவற தீட்சை பெற்றவர். சுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.வேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் பூர்ணாலயம் என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.
More Information
SKU Code VAN B 470
Weight in Kg 0.460000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஸ்வாமி குருபரானந்த - Swami Guruparananda
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:ஆன்மீகப் பாதையில் -ஸ்வாமி குருபரானந்த - Aanmeega Paadhaiyil... - Swami Guruparananda - Anmiga Padhayil - Anmika Padayil - Anmeeka Padhail - Aanmiga Paathayil - Anmiha Pathayil - Aanmiga Pathaiyil

Similar Category Products