Ariviyal Thamizh (Urai Nadai - Prose) Tamizhaga Arasu Parisu Petra Nool by Dr. V C Kuzhanthaisamy அறிவியல் தமிழ் (உரைநடை) (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்) - Dr. வா. சே. குழந்தைசாமி
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
Bharti B 61
₹75.00
முதல் பதிப்பு: டிசம்பர் 1985;
திருத்திய ஆறாம் பதிப்பு: ஜூன் 2001;
189 பக்கங்கள்.FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are Inclusive of Tax.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
ஓர் இனம், தலைமுறை தலைமுறையாகக் கண்ட வளர்ச்சிகளின் சாரம் முழுவதையும், வரும் தலைமுறைக்குத் தனது மொழியின் வாயிலாகத்தான் விட்டுச் செல்கிறது. தற்காலம் வரையிலான அறிவு வளர்ச்சி முழுமையையும் தன்னுள் கொண்டு, நாளைய தலைமுறைக்கு அதை வழங்கும் ஆற்றல் ஓர் இனத்தவரின் மொழிக்கு இல்லையெனின் அந்த நாகரிகம் வளர்ச்சி குன்றி, வாழ்விழந்து விடும். நாள்தோறும் மிகுகின்ற வேகத்துடன் வளரும் கல்வியறிவை, நம் மொழியின் துணையாலல்லது, மற்றொரு மொழியின் துணை கொண்டு, நாமும் பெற்று அதன் வழியே நமது அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்கிறோம். இதன் விளைவுகள் நமது நாகரிகமும் பண்பாடும் நசிவதற்குக் காரணமாகி விடலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது கடமையாகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வியறிவுத் துறைகளில் நூல்களை உருவாக்குவதென்பது தமிழில் ஒரு புதிய இலக்கியத் துறையைப் படைப்பதற்கு ஒப்பாகும். எனவே அதற்கென ஒரு நடை, ஒரு பாரம்பரியம் உருவாக வேண்டும். பல நூல்கள், பல வல்லுநர்களால் எழுதப்பட்ட பின்னர்தான் ஒரு துறையில் இலக்கியம் உருப்பெறுகிறது. அறிவியல் தமிழ் ஆக்கம் ஒரு நெடிய பயணம். இதில் நாம் காடும் தாண்ட வேண்டியிருக்கும்; கடலும் தாண்ட வேண்டியிருக்கும்; கால் நடைப் பயணமும் தேவை; கப்பலும் தேவை. வழிக்கேற்ற வாகனத்தை நாம் ஏற்க, உருவாக்க நமது மொழிக் கொள்கை இடந்தர வேண்டும்.
அறிவியல் தமிழ் ஆக்க முயற்சிகளில், நம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகளின் பரிமாணங்களை விவரிப்பதே நாம் மேற்கொண்ட முயற்சி. முடிந்த முடிவாகவோ, இதுதான் சரி என்ற எண்ணத்துடனோ நாம் எதையும் கூறவில்லை.
திறந்த உள்ளத்தோடும்,
ஊனும் உயிரும் ஊடுருவி நிற்கும் உண்மையோடும்;
ஊசி செய்யும் சிறு தொழிலின் நுட்பம் கூற
ஒருகோடி நூல் வேண்டும் தமிழில்; இந்தக்
காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர்
கண்டுள்ள கலைகளெலாம் தமிழில், எண்ணிப்
பேசிமகிழ் நிலைவேண்டும்..
என்னும் ஆசையுடனும்.
......இற்றை
உலகுடன் இயைந்து நின்று
வாழவும்; நமது மக்கள்
வளரும் தகுந்த பாதை
சூழவும், புதியன ஏற்கத்
துணியவும்...
வேண்டும் என்ற கொள்கையுடனும்
தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி சமைத்த தில்லை ...
தானாக எம்மொழியும் வளர்ந்த தில்லை
-----------------------------
வளர்வதர் கெதிரதான மரபுகள் சுமந்த மக்கள்
உளரெனும் பெருமை தோற்பர், உயர்வுகள் தோற்பர்
என்ற கவலையுடனும்,
'தேக்கம்' யாவதும் தீர்ந்து, நாளை நாம்
ஆக்கம் யாவும் அடைகுவம்
என்ற நம்பிக்கையுடனும், சில கருத்துக்களை கூறியிருக்கிறோம். சொல்ல நினைத்தவற்றைக் காய்தல், உவத்தல் இன்றிச் சொல்ல முயன்றிருக்கிறோம்.
பதிப்புரை:-
இந்நூலில் தமிழின் பழமை, இன்றைய நிலை, எதிர்காலத் தேவை ஆகியவற்றை பரந்த பார்வையுடனும், ஆழ்ந்த கருத்துடனும், தொலை நோக்குடனும் அணுகியிருக்கிறார்கள். வளரும் உலகில் அசாதாரண வேகத்தில் ஏற்படும் மாற்றங்கட்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்ப மாற்றங்களை நாம் தமிழில் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தகுந்த காரணங்களுடனும், சிந்தனையாளர் ஏற்கும் வகையிலும் விலக்கியிருக்கிறார்கள். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அறிஞர் பெருமக்களை ஆழ்ந்து சிந்திக்கச் செய்வன என்பதில் ஐயமில்லை.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமது அணிந்துரையில் கூறியிருப்பது போல 'அறிவியல் தமிழ்' எனும் இந்நூல் தமிழ் வளர்ச்சி வரலாற்றில் ஒரு புதிய வேகத்தை உருவாக்கும் என நம்புவோமாக.
ஆசிரியரை பற்றி: 1947ஆம் ஆண்டிலிருந்து கவிதை படைக்கத் தொடங்கி, 1948ஆம் ஆண்டில் 'பொன்னி' இதழின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாவலர் குலோத்துங்கன் (வா.செ. குழந்தைசாமி) கடந்த அறுபத்து மூன்றாண்டாண்டுகளாக இடைவிடாமல் தம் கவிதைப் பணியை ஆற்றிவருகிறார்.
டாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர். நீர் வளத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
இவர் பொறியியல் துறையில், ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக, நிர்வாகியாகப் பணி புரிந்து வந்தவர் எனினும், பொதுவாக இலக்கியத்தில், குறிப்பாகத் தமிழில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர். `குலோத்துங்கன்` என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதுபவர். இதுவரை இவரது தமிழ்ப் படைப்புகள் பத்து கவிதைத் தொகுப்புகளாகவும், தமிழில் பன்னிரெண்டு உரைநடை நூல்களாகவும் ஆங்கிலத்தில் ஆறு உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. மேலும் நீரியல், நீர்வளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வி தொடர்பாக மேலும் பொதுத் தலைப்புகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அறிவியலுக்கும், கல்விக்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் 1992-இல் இவருக்கு, தேசிய கௌரவமான `பத்மஸ்ரீ` விருதும் அறிவியல் - தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும் இவர் செய்த சேவை படைத்த சாதனை களுக்காக 2002-இல் தேசிய கௌரவமான `பத்ம பூஷண்` விருதும் அளித்துச் சிறப்பித்தார்.
'குலோத்துங்கன் கவிதைகள்', 'வளர்க தமிழ்', 'வாயில் திறக்கட்டும்', 'விண் சமைப்போர் வருக', 'கதவுகள் காப்பதில்லை', 'விதியே விதியே தமிழச் சாதியை...?', 'அணையாத் தீபம்' என்னும் ஏழு தொகுப் புகளாக வெவ்வேறு காலப்பகுதிகளில் வெளிவந்த இத்தொகுப்புகளில் அடங்கிய கவிதைகளும், இதழ் களில் அவ்வப்போது வெளிவந்த கவிதைகளும் ஒரே தொகுப்பாக (2002) வெளியிடப்பட்டன. 1947ஆம் ஆண்டிலிருந்து கவிதை படைக்கத் தொடங்கி, 1948ஆம் ஆண்டில் 'பொன்னி' இதழின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாவலர் குலோத் துங்கன் (வா.செ. குழந்தைசாமி) இவருடைய கவிதைகள் அனைத்தும் கொண்ட தொகுப்பு ஒன்று. 'குலோத்துங்கன் கவிதைகள்' என்ற தலைப்பில் 704 பக்கங்களில் 2002-இல் வெளிவந்துள்ளது.
SKU Code | Bharti B 61 |
---|---|
Weight in Kg | 0.100000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | Kulothungan @ Dr.Kuzhanthaisamy குலோத்துங்கன் @ Dr. வா.செ. குழந்தைசாமி |
Publisher Name | Bharathi Pathippagam பாரதி பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹140.00
Save: 20.00 Discount: 12.50%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%