Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Alnce B 492
₹85.00
சிவகுமார் அவர்களின் உரை / கட்டுரைகள்.
பேப்பர்பேக்;
72 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் என் கண்ணின் மணிகளுக்கு, சிவக்குமார் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இளைய தலைமுறையின் எதிர்காலத்திற்கு சிவகுமார் அவர்களின் உரை. 2009-ஆகஸ்ட் 17 அன்று கோவை தியாகராயர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய இந்த உரை அதே ஆண்டு தீபாவளி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்தில் இருந்து:
"நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க. நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள். உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு சுருங்கும். சலிப்பு தட்டிடும்"
"உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம, பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள் "
"ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும். அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா உருப்படவே மாட்டான்"
"அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர். ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு சிறப்பான நாடு என".
"இந்தியாவில்107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம் இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்".
"ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது. இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான் ஆண்" .
எழுத்தாளர் பற்றி : தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற ஓவியக் கலைஞர்; எழுத்தாளர், பேச்சாளர். தனது அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறவர். சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.
| SKU Code | Alnce B 492 |
|---|---|
| Weight in Kg | 0.480000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | சிவகுமார் - Sivakumar |
| Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%





























