Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

என்றாவது ஒரு நாள் - சுஜாதா - Yendravathu Oru Naal - Sujatha - Endravathu Oru Naal - Endravadhu Oru Nal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 165
₹60.00
மர்ம நாவல் / மர்ம புதினம் . 
 
காகித அட்டை/ பேப்பர்பேக்;  
128 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஜனவரி, 1981;  
ஆறாம் பதிப்பு: ஆகஸ்ட், 2014.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
சுஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறிக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது. 
 
பதிப்புரை:
மிகச் சிறந்த எழுத்தாளர்  - திரு. சுஜாதா அவர்களின் தலைசிறந்த எழுத்தோவியங்களில் ஒன்றான 'என்றாவது ஒரு நாள்' என்னும் இந்நூலில் ஒரே ஒரு கருத்தை மையமாக வைத்து ஆயிரம் கதைகள் உருவாக்கப்படுகின்ற நேரத்தில் ஆயிரம் கருத்துக்கள் இழையோட ஒரு அற்புதமான கதையைக் தந்திருக்கிறார் திரு.சுஜாதா.
 
கண்ணெதிரே நாம் தினமும் சந்திக்கின்ற சம்பவங்கள் நெஞ்சை நெகிழவைக்கும் கதை வடிவம் பெற்றிருக்கின்றன.
 
யதார்த்தங்கள் கதை வடிவம் பெறும்போது எளிதாக இதயத்தை அள்ளிக் கொள்கின்றன.
 
'என்றாவது ஒரு நாள்' கதையைப் படிக்கின்ற போது - நாமும் அந்தக் கதையில் ஒரு பாத்திரமாக மாறி அவர்களுடனேயே இருப்பதுபோல ஒன்றிவிட முடிகிறது.
 
பாத்திரங்கள் - சம்பவங்கள் - கதை எல்லாமே சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
 
குற்றங்கள் யாரால் பிறக்கின்றன?
 
குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள்? என்பனவற்றை எளியநடையில், ஆனால், அழுத்தமான சம்பவங்களால் சுட்டிக்காட்டி அவைகட்குப் பரிகாரம் காண வேண்டும் என்கிற வருத்தத்துடிப்பு படிப்பவர்கட்கு ஏற்படும் வகையில் திரு.சுஜாதா அற்புதமாக உருவாக்கியுள்ள 'என்றாவது ஒருநாள்' கதையினை விசா பப்ளிகேஷன்ஸ் தன் முத்திரை வெளியீடுகளில் ஒன்றாகப் பெருமையுடன் வெளியிட்டு மகிழ்கிறது.
 
- விசா பப்ளிகேஷன்ஸ்.
 
எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன்)
 
தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக்  கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக  ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன. 
More Information
SKU Code TMN B 165
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சுஜாதா Sujatha
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:என்றாவது ஒரு நாள் - சுஜாதா - Yendravathu Oru Naal - Sujatha - Endravathu Oru Naal - Endravadhu Oru Nal

Similar Category Products