Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கலைஞரின் கவிதைகள் - கலைஞர் மு.கருணாநிதி - Kalaignarin Kavithaigal - Kalaingnar Mu.Karunanidhi - Kavithaighal Kavidhaigal Kavidhaighal Kavithaikal Kavidhaikal Kalaingarin

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 471
₹350.00

கவிதைகள். 

கடின அட்டை/ ஹார்ட்பௌண்ட்;

450 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

ஐந்தாம் பதிப்பு: செப்டம்பர் 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

என்னுரை: 

1946 ஆம் ஆண்டு முதல் நான் எழுதிய கவிதைகளையும், கவியரங்குகளுக்குத் தலைமையேற்றுப் பாடிய கவிதைகளையும் தமிழ்க்கனி பதிப்பகத்தினர் அழகுறத் தொகுத்துப் படைத்துள்ளனர்.

"கவிதையல்ல" என்ற தலைப்பிலேதான் தொடக்கத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். கவிதை இலக்கணத்திற்குள் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. 1967-ஆம் ஆண்டு அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு அந்தப் பணியில் ஏற்பட்ட களைப்பினைப் போக்குவதற்குக் கவியரங்குகலே எனக்கு இளைப்பாறும் இன்நிழற் சோலைகளாயின. 

ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால்தான் கவியரங்கத் தலைமைக்கு அழைப்பு வந்தன என்றில்லாமல், அந்தப் பொறுப்பில் இல்லாத நேரத்திலும் அந்த வாய்ப்புகள் கிட்டின. ஆட்சியில் இருந்தபோது நடந்த கவியரங்கிற்குப் பறந்தோடி வந்த கவிப்பறவைகளில் சில; அதன் பிறகு அந்த குலத்து அறுநீர்ப் பறவைகளாகி விட்டபோதிலும் கொட்டியும் ஆம்பலுமாய் ஒட்டியிருந்து தமிழ்க்குலப் பெருமை காத்தன சில கவிக் குயில்கள்! இரு சாரர்க்கும் நன்றி.

கற்பனைகள், உணர்ச்சி பெற்றுக் கவிதைச் சொற்களாகப் பாய்ந்திடும்போது இலக்கணக் கட்டுப்பாடு எனும் கடிவாளத்தை என்னால் பயன்படுத்த முடியவில்லை. அது என் பலவீனம்தான்!

எனினும், பலம் வாய்ந்த கவிதைக் குதிரைகளின் பாய்ச்சலுக்கு உங்கள் பாராட்டுக் கிடைக்குமென்று நம்புகின்றேன்.

மேலும் மேலும் புதுக்கவிதைகள் பலவற்றை இணைத்து இந்த நான்காம் பதிப்பைத் தருகின்ற தமிழ்க்கனிப் பதிப்பகத்தாருக்கும், வெளியிடுகின்ற பாரதி பதிப்பகத்தாருக்கும் நன்றி.

அன்புள்ள, 

மு.கருணாநிதி.

இதனுள்: 

01.இதயத்தைத் தந்திடு அண்ணா!; 

02.இனமான ஏந்தல்கள்;  

தென்னவன் காதை;  

இந்திரஜித்;  

இரணியன்;  

வாளி மன்னன்; 

03.கவியரங்கக் கவிதைகள்;  

விடுதலை வீரர்கள்;  

ஐம்புலன்;  

பிலவங்க ஆண்டு;  

காதலா - வீரமா ?; 

அருமறையில் அறுவர்;   

புதிய பாதை;  

உடைமைகள் பத்து;  

நீர்க் குடும்பம்; 

பாரதிதாசன்;  

பாரதியார்;  

பொங்கல் திருநாள்;  

வாழ்வெனும் பாதையில்;  

கணக்கு;  

நேரு கண்ட ஜனநாயகம்;  

நன்றி, நன்றி!; 

வெள்ளி விழா;  

அண்ணன் இருக்கின்றார்; 

அண்ணன் ஒரு கவியரங்கம்; 

தமிழ் வளர வழிநடைப் பயணம்;  

வையம் தழைக்க;  

தந்தை பெரியார்;  

அகத்துறைப் படைப்புகள்;  

பொங்கல் விழா;  

சிலப்பதிகார விருந்து;  

அண்ணா வழியில்;  

நடந்திடுவேன் நமது அய்யா, அண்ணா வழியில்;  

முப்பெரும் விழாக் கவியரங்கம் தலைமைக் கவிதை; 

மாறிவரும் ஊரினிலே;  

சமுதாயப் பார்வைகள்...!; 

கலைவாணர் அரங்கக் கவியரங்கம்;  

"சித்திரைத் திருநாள்" தலைமைக் கவிதை; 

எழுத்துக்கள் - எண்ணங்கள் மும்மூன்று;  

"அறிஞர் அண்ணா வழியில்"; 

04.கண்ணீர்த் துளிகள்; 

பன்னீர்ச் செல்வமே;  

கலைத்தாயின் தலைச்செல்வன்; 

உன் நிழலாக அசைகின்றோம்;  

வாழ்க ஜீவா !; 

மறைந்த மாவீரன்;  

என் இனிய நண்பா! ஏன் பிரிந்தாய்?;  

05.மலர்த் தோட்டம்;  

இன்றைக்கு உன்றன் பிறந்தநாள்;  

அவன் பிறந்தநாள் என ஒன்றில்லை!; 

அருமருந்தே! அன்பழக உடன் பிறப்பே!; 

பகுத்தறிவுப் பாண்டியனார்;  

நியாயத் தராசு;  

ஏற்பாரோ?; 

புயல் என அறிக;  

கேட்டதுண்டோ?;  

வருணமா? மரணமா?; 

தோல்வி எப்பொழுது?; 

இன்னுமா கூச்சல்?; 

பச்சைக்கிளி;  

கற்பனை ஊற்று; 

வானமே பொழிக நீ!;  

கவிதையில் ஒரு மடல்;  

அவர் உணர்வாரோ! யார் அறிவார்?; 

போர் வாளாய்ச் சுழலட்டும்!;  

இன்னும் யார் - யார் பெயர்கள் வரவில்லை;  

ஒரு சொட்டுத் தேன்;  

விதையாய் முளைத்து விழுதுகள் விடட்டும்;  

சூரியனைப் பனிக்கட்டி என்கின்றார்!; 

நடையை நிறுத்தாதே!; 

பாமரர் நிறைந்த பட்டிக்காடு;  

கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு;  

என்ன தேசமடா இது?;  

முகமூடி கிழித்தெறிவோம் வாரீர்!;  

பதில் என்ன? பகிர்ந்திடுக!;  

கா, கா, கா!;  

பகலவனாய்க் கிழக்கில் உதித்திடுவோம்; 

திசைதிருப்பல் நியாயம்தானா?;  

நடந்துமுடிந்ததம்மா; ஒரு நகைச்சுவை நாடகம்!; 

சில நாடுகள் இருக்கின்றன; 

உன் காலணியை வாழ்த்துகிறாய். 

 

இதயத்தைத் தந்திடு அண்ணா 

(9.2.69 அன்று சென்னை வானொலியில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலி.)

பூவிதழின் மென்மையினும் மென்மையான 

புனித உள்ளம்-அன்பு உள்ளம்-

அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர் 

மலர் இதழ்கள் தமிழ் பேசும்-

மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்- 

விழிமலர்கள் வேலாகும், வாளாகும் 

தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால்!

 

கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது; 

கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை!

அம்மலரே எதிரிகளை மன்னித்து 

நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்!

மக்களாட்சி மலர் குலுங்க 

சமதர்மப்பூ மணக்க 

தாய்மொழி தமிழே வாழ்வுப் பொழிலாக 

ஆடிவரும் தென்றல்,  

 ..............................................

ஆசிரியர் பற்றி: முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

More Information
SKU Code Bharti B 471
Weight in Kg 0.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கலைஞர் மு.கருணாநிதி - Kalaingnar Mu.Karunanidhi
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கலைஞரின் கவிதைகள் - கலைஞர் மு.கருணாநிதி - Kalaignarin Kavithaigal - Kalaingnar Mu.Karunanidhi - Kavithaighal Kavidhaigal Kavidhaighal Kavithaikal Kavidhaikal Kalaingarin

Similar Category Products