கல்லுக்குள் ஈரம் (தேசிய நீரோட்ட நாவல்) - ர.சு.நல்லபெருமாள் - Kallukkul Eeram (Dhesiya Neerotta Novel)
Store Review (4)
Book Type:
Hardbound
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
VAN B 007
₹450.00
புதினம் / நாவல்.
கடின அட்டை /Hardbound;
முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1969;
எட்டாம் பதிப்பு: செப்டம்பர் 2021.
720 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font).
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்.
கல்கி வெள்ளிவிழா போட்டியில் ரூபாய் 7500 பரிசு பெற்ற நாவல்.
விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் மிகுந்த-தலைவர்களை இணைத்த, காந்தீயத்திற்குத் தலைமை தரும் அருமையது. அஹிம்சைக்கும் தீவிரவாதத்திற்கும் நடக்கும் போராட்டத்தை வெகு அழகாக சித்தரிக்கும் கதை. இந்த நூல் கல்லுக்குள் ஈரம், ர.சு. நல்லபெருமாள் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டது.
என்னை இழுக்காதீர்கள்
கதை படிக்க விரும்பும் உங்களுக்குக் குறுக்கே இப்படி ஒரு பகுதியை எழுத முனைந்ததற்கு மன்னிக்கவும். இங்கே, இப்புத்தகம் பற்றிய தத்துவ விளக்கத்தையோ அல்லது இப்புத்தகம் பிறந்த வரலாற்றையோ கூற வரவில்லை. இந்தக் கதை 'கல்கி'யில் தொடராக வந்துகொண்டிருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான வாசகர்களிடமிருந்து கதைக்குள் பொதிந்து கிடக்கும் தத்துவங்கள் பற்றிப் பலவிதப் பாணியில் விமர்சனங்கள் எனக்கு வந்துகொண்டிருந்தன. இருபது அன்பர்களிடமிருந்து, கதையில் ஒரு பாத்திரம் மரணமடைந்ததற்காக, வசவுகளும் வந்தன !
இந்நாவலில் ஏதாவது தத்துவம் புதைந்திருந்தால், இதைப் படிக்கும் நீங்களே அதைப் புரிந்து கொள்ளுங்கள். புரியவில்லை என்றால், இதில் தத்துவம் ஏதும் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது தத்துவம் இதில் இருப்பதாக நீங்கள் கருதினால், அப்படி ஒரு தத்துவத்தை மையமாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டிருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். இவையெல்லாம் உங்கள் ரஸனையையும், உங்கள் கற்பனாசக்தியையும் மட்டுமே பொறுத்த விஷயம். இதில் என்னையும் இழுத்துப் போட்டு ஆணி வேறு அக்கு வேறாகப் பிய்த்து எடுத்துவிடாதீர்கள். மனத்தில் தோன்றியதைக் கதையாக எழுதிவிட்டேன். ஒரு குழந்தையைப் பெறுவதுபோல், பெற்ற குழந்தை, சோடை போகாமல் ரூ.7500 பரிசையும் 'கல்கி'யிடமிருந்து பெற்றுவிட்டது. இது, காலத்தால் சாகாமல் இருக்குமானால், பெற்றவன் என்ற முறையில் நானும், உங்களிடையே பிறந்துவிட்டதால் நீங்களும் பெருமிதமடையலாம்.
இக்கதை "கல்கி'யில் தொடராக வெளிவந்த போது, வாராவாரம் ஸஸ்பென்ஸும், ரஸனையும் கொடுப்பதற்காக மூலக்கதையில் அமைந்திருந்த அத்தியாய முறையைப் பிரித்து, பத்திரிகையின் போக்கில் அச்சிட்டார்கள். ஆகையால், மூலக் கதையில் இருந்த சில பகுதிகளும் எடுக்கப்பட்டிருந்தன.
இப்புத்தகத்தில் அந்தக் குறைகளையெல்லாம் நீக்கி, மூலத்தில் உள்ளதைப் போன்றே அத்தியாய ஒழுங்கை அமைத்திருக்கிறேன். நீக்கப்பட்ட சில வரிகளில் மிகவும் முக்கியம் என்று நான் கருதியவற்றையும் இதில் சேர்த்துள்ளேன்.
இக்கதையை நல்ல முறையில் புத்தகமாக அச்சிட்டு வெளியிடும் வானதி பதிப்பகத்தின் அதிபர், திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கு என் நன்றி.
இக்கதை "கல்கி'யில் தொடராக வெளிவந்த போது, வாராவாரம் ஸஸ்பென்ஸும், ரஸனையும் கொடுப்பதற்காக மூலக்கதையில் அமைந்திருந்த அத்தியாய முறையைப் பிரித்து, பத்திரிகையின் போக்கில் அச்சிட்டார்கள். ஆகையால், மூலக் கதையில் இருந்த சில பகுதிகளும் எடுக்கப்பட்டிருந்தன.
இப்புத்தகத்தில் அந்தக் குறைகளையெல்லாம் நீக்கி, மூலத்தில் உள்ளதைப் போன்றே அத்தியாய ஒழுங்கை அமைத்திருக்கிறேன். நீக்கப்பட்ட சில வரிகளில் மிகவும் முக்கியம் என்று நான் கருதியவற்றையும் இதில் சேர்த்துள்ளேன்.
இக்கதையை நல்ல முறையில் புத்தகமாக அச்சிட்டு வெளியிடும் வானதி பதிப்பகத்தின் அதிபர், திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கு என் நன்றி.
இந்நூலை வாங்கிப் படிக்க முனைந்திருக்கும் உங்களுக்கும் என் நன்றி.
பாளையங்கோட்டை, ர.சு.நல்லபெருமாள்.
21-4-1969
எழுத்தாளர் பற்றி : ர.சு.நல்லபெருமாள் ஒரு முதுபெரும் தமிழ் எழுத்தாளர். சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான தமிழக அரசின் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்ற இவர், அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், ல.ச. ராமாமிருதம் போன்ற எழுத்தாளர்களின் எழுத்து காலகட்டத்தை சேர்ந்தவர்.
| SKU Code | VAN B 007 |
|---|---|
| Weight in Kg | 1.150000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | ர.சு.நல்லபெருமாள் - Ra.Su.Nallaperumal |
| Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%
























