கம்பனும் கண்ணதாசனும் - பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமநாதன் - Kambanum Kannathasanum
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
VAN B 076
₹45.00
இலக்கிய திறனாய்வு நூல்.
காகித அட்டை (Paperback);
மொழி: தமிழ்;
136 பக்கங்கள்;
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);
முதல் பதிப்பு: செப்டம்பர் 1992;
நான்காம் பதிப்பு: ஜூன் 2011.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் கம்பனும் கண்ணதாசனும், பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமநாதன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
" வாசலிது "
"நான் பிறந்த (செட்டி) நாட்டுக்கு எந்த நாடு பெரியது? இங்கே பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது." இந்த மண்ணின் மைந்தர் கவியரசர் கண்ணதாசன். மாட்டு வண்டி போகாத குக்கிராமமும் இவரது பாட்டு வண்டியைப் பார்த்திருக்கும், கேட்டிருக்கும்.
கால் நூற்றாண்டுக் காலத் தமிழிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெறத் தகுதி பெற்றவர் கண்ணதாசன். பல கவியரங்குகளில் அவர் தலைமையில் பங்கு பெற்றுப் பாராட்டும் வாழ்த்தும் பெற்றவள் நான். 'செட்டி நாட்டில் ஒரு செண்பகப் பூ' என்று அந்த மனோரஞ்சித மலர் என்னைப் பாராட்டியது 'நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்".
கண்மூடித் திறக்கும் முன் பன்னூறு பாடல் தரவல்ல மகாகவிஞன் கண்ணதாசன். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது பாடல்களை இடம் பார்த்து இராமாயண, மகாபாரத, கந்த புராணத் தொடர் சொற்பொழிவுகளில் பாடி மகிழ்ந்தவள் நான்.
அவரது பாடல்களில் திறனாய்வு (Ph.D பட்டத்துக்கு) செய்ய அனுமதியும் பெற்றவள். அவரது கவிதைக் கோயிலுக்கு, சிங்காரத் தமிழ் மாளிகைக்கு எவ்வளவோ வாசல்கள் பலரும் கட்டியிருக்கலாம். இந்த வாசலிலும் சற்று நுழைந்து, சந்தனப் பொதிகைத் தென்தமிழ் கமழும் கவியரசர் பாடல் மணத்தைச் சற்று அனுபவிக்க அழைக்கிறோம்.
தமிழுக்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கம் 'வானதி' எங்கள் தேவகோட்டயைச் சேர்ந்த அண்ணனிவர். பதிப்புச் செம்மல். அவருக்கும் கவியரசருக்கும் நெருங்கிய நட்பும், பாசப் பிணைப்பும் இருந்தது. அந்த உறவும் உரிமையும் கொண்டு இந்த வாசலை வானதி திருநாவுக்கரசு அண்ணா வளமாக்கித் தந்துள்ளார். உள்ளே வாருங்கள் ! நான் திருப்புன்கூர் நந்தியாக வழிவிட்டு அனுப்புகிறேன்.
'நான் அவன் பேரைத் தினம் பாடும் குயிலல்லவா!
என் பாடல் அவன் தந்த மொழியல்லவா!
சரசுவதி இராமநாதன்
பள்ளத்தூர் 20-8-92.
பதிப்புரை:
பேராசிரியை டாக்டர் சரசுவதி இராமநாதன் கம்பனை நன்கு கற்றவர். கண்ணதாசனையும் கற்றவர். இலக்கியச் சொற்பொழிவு ஆற்றும்போது இசையோடு பாடி மக்கள் நெஞ்சத்திலே கவிஞர்களின் பாடல்களைப் பதிப்பதிலும் வல்லவர். இத்தகைய சிறப்புக்கள் பல பெற்ற பேராசிரியை கம்பனையும் கண்ணதாசனையும் இணைத்துப் பார்த்து அவர்கள் கவிதை நயத்தை ஒப்புநோக்கி எழுதிய நூலே கம்பனும் கண்ணதாசனும். இந்நூல் திறனாய்வுக் கலைக்கு ஒளி சேர்க்கும் நூலாகத் திகழ்கிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடல்கள் கவியரசு கண்ணதாசனை எவ்வளவு பாதித்திருகின்றன, அந்த பாதிப்பினால் தமிழ் மக்களுக்கு எத்தகைய பாடல்கள் கிடைத்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டி அதற்கு ஆதாரமாகக் கண்ணதாசன் அவர்களின் பாடல்களை எல்லாம் விளக்கமுடன் தந்து வாசகர்களுக்குத் தேனினுமினிய இலக்கிய விருந்தளித்துள்ளார் டாக்டர் சரசுவதி இராமநாதன்.
கம்பனின் கவிச்சுவையை மட்டுமல்லாது, ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களோடும் கவியரசரின் பாடல்களை ஒப்புநோக்கி அலசுகிறார்.
மகாகவி பாரதியார் கவிதைகளோடும் கண்ணதாசனின் கவிதைகளை ஒப்புநோக்கி, புதியதோர் சமுதாயத்தைப் படைக்க இருவருமே ஆசை கொண்டனர் என்பதை விரிவாக எழுதுகிறார்.
இந்நூலை மிகப் பெருமையுடன் வானதி பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளேன். இதற்கு அனுமதியளித்துள்ள பேராசிரியை டாக்டர் சரசுவதி இராமநாதனுக்கு நன்றி. நூலை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த நேரு அச்சகத்தாருக்கு நன்றி. நூலை வரவேற்கும் வாசகர்களுக்கு நன்றி.
அன்புள்ள,
ஏ.திருநாவுக்கரசு
வானதி பதிப்பகம்.
எழுத்தாளர் பற்றி: தேவகோட்டையில், சுதந்திர தாகம் உள்ள குடும்பத்தில் பிறந்து 9 வயது முதல் கம்பன் கழகத்தில் பாடி, 22 வயது முதல் (50 ஆண்டுகளாய்) கம்பராமாயண உரையாற்றி வரும் நற்றமிழ்ச் சொல்லரசி. கம்பனைக் குறித்தும், பிற இலக்கியங்கள் குறித்தும் பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளவர். 16 நூல்களின் ஆசிரியர் இவர். கம்பன் குறித்த 5 நூல்கள் எழுதியுள்ளவர். இவர் பங்கு பெறாத கம்பன் கழகமே இல்லை எனலாம். வாரியாருக்கு அடுத்து இசையுடன் இராமாயணத் தொடர் உரையாற்றும் ஒரே பெண்மணி (இவர். முத்தமிழரசி இவர். தமிழகத்தின் 5 முதல்வர்கள் கேரள, புதுவை, கோவா முதல்வர்கள் பாராட்டிய பெருமைக்குரியவர். கணவர் இராமநாதனும் சிறந்த பேச்சாளர்.
| SKU Code | VAN B 076 |
|---|---|
| Weight in Kg | 0.520000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமநாதன் - Professor.Dr. Saraswathy Ramanathan |
| Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%



























