கன்னிகா - தொ.மு.சிதம்பர ரகுநாதன் - Kannika - T.M.Chidambara Ragunathan - Kannikha Kanniga Kannigha Gannika Ghannika Ghannikha
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
புதினம்/குறுநாவல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
168 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
நாளுக்கு ஒரு புதுமை - நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளைத் தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சமூகமும் தன் வரையறை களால் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதும் எனப் பெரும் போராட்டத்தின் களமாக நிற்கிறாள் கமலா. பெண்ணுடலையும் அதன் ரகசிய வேட்கைகளையும் இயற்கைக்குப் புறம்பான அறிவோடு இந்தியச் சமூகம் எதிர் கொள்ளப் பார்க்கிறது. ஆன்மிக உணர்வு களையும் துணைக்கழைக்கிறது. இவற்றின் வழியாக காதலை உடல் இச்சைக்கு அப்பால் நிறுத்திப் பார்க்க வும் ஆத்ம ஒட்டுறவை நந்தாச் சுடராக அணையாது காக்கவும் விரும்புவதாக ஒரு கன்னி தன் காதல் உணர்வை வெல்லப் பார்க்கிறாள்; சமூக உள்ளுணர்வுகளோடு ஒத்திசைய லாம் என்பது அவளின் கற்பனை. இந்தக் கற்பனை காலத்தைக் கடந்து செல்லப் பார்க்கிறது. ஆனால் அந்தக் கற்பனை வெல்லுமா? உடலியலை உளவியல் ரீதியான தன்மையில் அணுகுகிற இந்த நாவல், ஒரு புதிய உலகைத் திறக்கிறது. தமிழில் இதுவரை அறியப்படாத முயற்சியில் எழுதப்பட்டிருக்கிறது ‘கன்னிகா’. களந்தை பீர்முகம்மது.
எழுத்தாளர் குறிப்பு : தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். தமிழ்நாட்டின் முக்கியமான இடதுசாரி அறிவாளரான தொ.மு.சி. ரகுநாதன் நெல்லையில் பிறந்து வளர்ந்தவர். நெல்லை இந்துக் கல்லூரியில் இடைநிலைவரை படித்த ரகுநாதன், 1942இல் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறைப்பட்டதால் படிப்பு தடைப்பட்டது. தினமணி (1944 - 45), சக்தி (1948 - 52) ஆசிரியர் குழுவிலும், முல்லை (1946 - 47) ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழின் முதல் இடதுசாரி இலக்கிய இதழ் இவர் நடத்திய சாந்தி (1954 - 56). முழுநேர எழுத்தாளராக வாழ்ந்த இவர் சென்னையில் சோவியத் செய்தித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி (1967 - 88) ஓய்வு பெற்று, நெல்லைக்கு மீண்டும் குடிபெயர்ந்து அங்கேயே மறைந்தார். சிறுகதை, நாவல், விமரிசனம், (திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில்) கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் முனைப்பாகச் செயல்பட்ட ரகுநாதன், ஆராய்ச்சித் துறையில் ஆழமாகத் தடம் பதித்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது. தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். அவருடைய எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டும், ‘புதுமைப்பித்தன் வரலாறு’ எழுதியும் தமிழ் இலக்கிய உலகத்தில் புதுமைப்பித்தனின் இடத்தை நிலைநாட்டியவர். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. ‘பஞ்சும் பசியும்’ (1953) தமிழின் முதல் முற்போக்கு நாவல் என்ற பெருமைக்கு உரியது. ‘இலக்கிய விமரிசனம்’ (1948) சிறு நூலாயினும் தமிழ்த் திறனாய்வியலின் முன்னோடியாகும். பாரதியிடம் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த ரகுநாதன் எழுதிய ஆராய்ச்சி நூல்கள் பாரதியியலில் புதிய பாதையைக் காட்டியவையாகும். ‘சாகித்திய அகாதமி’ (1983) பரிசு பெற்றவர். திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
SKU Code | Kch B 247 |
---|---|
Weight in Kg | 0.570000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9789386820273 |
Author Name | ரகுநாதன் @ தொ.மு. சிதம்பர ரகுநாதன்- Ragunathan @ T. M. Chidambara Ragunathan |
Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%