Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கேள்வி இன்று பதில் அன்று - செல்வி இரா. ருக்மணி - Kelvi Indru Bathil Andru - Kaelvi Inru Pathil Antru

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 216
₹40.00
இலக்கிய திறனாய்வு நூல்/ கம்பராமாயண நூல்.
 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font); 
காகித அட்டை/ பேப்பர்பேக்; 
132 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதல் பதிப்பு: ஏப்ரல், 2010; 
இரண்டாம் பதிப்பு: நவம்பர், 2013.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் கேள்வி இன்று பதில் அன்று, இரா . ருக்மணி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.     
 
புதுவையில் நடைபெற்ற 7-5-2010-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் இந்நூல் வெளியிடப்பெற்றது.
 
என்னுரை: 
கம்பன் என்றொரு மானுடன் தோன்றிக் கற்பனைக்கெட்டாத அற்புதம் தன்னைக் குறிகளால் காட்டிட முடியும் முயற்சியைக் கொண்டு மனிதச் சாதியை அமரச் சாதி என்றார் பாரதி.
 
அந்தக் கம்பர் பெருமானின் காவியம் ஓர் அற்புதப் படைப்பு. படிக்கப் படிக்க நா மணக்கும். கேட்கக் கேட்கச் செவி மணக்கும். நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் இனிக்கும். முப்பத்தேழு ஆண்டுகளாகப் பல சான்றோர் பெருமக்கள் வாயிலாகக் கம்பநாடன் கவிதை நயத்தைக் கேட்கவும், கேட்டுப் படிக்கவும், படித்துவிட்டு யோசிக்கவும், அந்த இனிமையையே சுவாசிக்கவும் ஆகிய பெரும்பேற்றை இறைவி எனக்கு அளித்தாள். 
 
அதோடு சிறியேனையும் கம்பரைப் பற்றி உரத்த சிந்தனையாகப் பேசவும் வைத்தாள். பேச்சு என்பது காற்று வழியாகக் காதில் புகுவது, எழுத்து என்பது கண்வழியாகக் கருத்தில் நுழைவது. பின்னது காலம்  கடந்தும் நிற்கும்; நினைக்க வைக்கும்; வைக்க வேண்டும்.
 
அடியேனுடைய பேச்சுத்திறனைப் பல வகையில் சோதித்துப் பாராட்டியதில் முதன்மையானது புதுவைக் கம்பன் கழகம். பட்டிமன்றங்களில் துணைப்பேச்சாளராக - அணித் தலைவராகக்  கவியரங்குகளில் கவிஞராக - தனியுறையாக, எழிலுரை, ஆய்வுரை - ஒப்பீட்டுரை என்று பல கோணங்களில் பேசவைத்து என் அறிவுக்குத் தீனி போட்டவர்கள் அவர்களே, வெளிநாடுகளிலும் என்னைப் பேசவைத்து என்னைப்பற்றி மற்றவர்களைப் பேசவைத்ததில் பெரும்பங்கு அவர்களுடையதே. என் அருமை அப்பா தலைவர் திரு.கோவிந்தசாமி ஐயா, என்னைக் கண்டித்தும் கொண்டாடியும் வழிநடத்தும் அருமை அண்ணா திரு.கல்யாணசுந்தரம் ஆகியோருடன், திலகவதியாருக்குக் கிடைத்த மருள்நீக்கியார் போல எனக்குப் பாசத்தையும், பரிவையும் கொட்டித் தருகின்ற என் அருமைத் தம்பி முருகேசன் அவர்கள் ஆகியோர் இறைவி எனக்குத் தந்த பொக்கிஷங்கள்.
 
"சிந்தனைகளை அதிலுள்ள புதுமைகளைக் காற்றோடு போகவிடாமல் காகிதத்தில் வடித்துக் கொடு' என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூண்டிவிட்டும் அசையாத கல்லாக இருந்த இடத்திலேயே இருந்தேன். சென்ற ஆண்டு திருச்சி ஐயப்பன் சங்கத்தினரோடு ஜோதிர்லிங்க யாத்திரை போகும் பேரு கிடைத்தது. அந்தப் புனிதப் பயணத்தின்போது ஐயப்பன் சங்கச் செயலர் - பலாப்பழம் போலக் கண்டிப்பும் கனிவும் நிறைந்த திரு.கனகசபாபதியவர்கள் நூல் எழுதச்சொல்லி அதுவரை சொன்னதுபோல அல்லாமல் இவ்வாண்டு கண்டிப்பாக எழுதுவதாகப் பிரமாணம் செய்யச் சொன்னது மட்டுமல்லாமல் அதை உறுதிமொழியாக எழுதித் தரவும் சொன்னார்.
 
என்னையும் ஓர் எழுத்தாளராக்க வித்தூன்றிய அன்புச்சகோதரர் திரு.கனகசபாபதிக்கு முதல் நன்றி. அந்த விதை முளைக்க முக்கியக் காரணம், என்னுடைய வளர்ச்சியைக் கண்டு மனப்பூர்வமாக மகிழுகின்ற வேலூர் கம்பன் கழகத் தலைவரும் என் முத்தண்ணாவுமான திரு.S.N.குப்புசாமி முதலியார் அவர்களே. விதை முளைத்துவிட்டது, அது தழைத்துப் படர வேண்டுமே! வழக்கம்போல என்னுடைய பேச்சைப் பலருக்குப் இனம் காட்டிய திரு.முருகேசன் அவர்களே இந்த எழுத்தாளர் என்ற என்னுடைய புதுமுகத்தையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இனம் காட்டியுள்ளார். அந்தப் பயிரை வேலியிட்டு வண்ணமயமாகப் படரச் செய்தவர் திரு.வானதி திருநாவுக்கரசு ஐயா அவர்கள். அவர்களை ஏற்றிவைத்த லட்சதீபத்திலே இந்த நூலும் ஒரு அகல்விளக்கு. இவர்களின் அன்பையும் ஆதரவையும் பார்க்கின்றபோது 'இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்று உருகத்தான் என்னால் முடிகிறது. இனி எழுத்துப்பயிர் பூத்துக் காய்த்துக் கனிய வேண்டும். அதற்கு எல்லாமாக எனக்கு என்றென்றும் துணையிருக்கும் இறைவிதான் அருள் புரிய வேண்டும்.
 
இந்த முற்றாத மழலையை, பெற்றோராகப் பார்த்து வாழ்த்த வேண்டுமென்று வாசகப் பெருமக்களை வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
புதுச்சேரி கம்பன் கழகத்தினருக்கும், வானதி பதிப்பக உரிமையாளர் மேன்மைமிகு திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
 
கேள்வி இன்று 
பதில் அன்று 
 
அன்புடன் 
இரா.ருக்மணி,
சேலம்.
 
உள்ளடக்கம்:
 
கேள்வி இன்று பதில் அன்று 
கேள்விகளைத் தொடங்குவோம் 
பதில்களைப் பெறுவோம் 
கேள்வி 1
கேள்வி 2
கேள்வி 3
கேள்வி 4
கேள்வி 5
கேள்வி 6
கேள்வி 7
கேள்வி 8
கேள்வி 9
 
ஆசிரியர் குறித்து:  செல்வி இரா . ருக்மணி, M.A, M.A, M.A, M.A, B.Ed.,சேலத்தைச் சோ்ந்த பிரபல ஆன்மிகப் பேச்சாளா்.  
 
இவா், தமிழ் மீது கொண்ட பற்றினால் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தாா். தனது ஆசிரியப் பணியை ஓராசிரியா் பள்ளியில் துவங்கி உதவித் தலைமை ஆசிரியராகப் பதவி உயா்வு பெற்று, ‘நல்லாசிரியா் விருதும்’ பெற்று ஓய்வு பெற்றவா்.
 
தனது 22-ஆவது வயதில் சமயப் பேச்சாளராக அறிமுகமாகி, அனைவரையும் கவா்ந்தவா். செஞ்சொற்கொண்டல், பாரத மணி, சொல்லின் செல்வி போன்ற பட்டங்களும், பொற்றாமரை, மெகா மகளிா் போன்ற விருதுகளையும் தாய்த்தமிழ் தொண்டின் பயனாகப் பெற்றவா்.
 
குறிப்பெதுவும் இன்றி காப்பியப் பாடல்களை மழையெனப் பொழிபவர். இவர் கி.வா.ஜ, திருமுருக கிருபானந்த வாரியார், சா.கணேசன்  மற்றும் பல பெரியாரால் பாராட்டப்பெற்றவர்.
 
அவரது தமிழ் மொழியின் மீதான காதல் அவரை வேறு எவர் மீதும் காதல் கொள்ள வைக்காமல் கன்னியாகவே தமிழ்த் தொண்டு செய்ய வைத்தது.   
 
இறுதி மூச்சுவரை ஆன்மீகத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பிரான்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மலேசியா போன்ற மேலை நாடுகளிலும் சமயம் மற்றும் இலக்கியம் தொண்டாற்றியவர். 
 
செல்வி இரா. ருக்மணி  அம்மாள் (84) பிப். 2, 2020 அன்று காலமானார்.
More Information
SKU Code VAN B 216
Weight in Kg 0.480000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name செல்வி இரா. ருக்மணி - R. Rukmini
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கேள்வி இன்று பதில் அன்று - செல்வி இரா. ருக்மணி - Kelvi Indru Bathil Andru - Kaelvi Inru Pathil Antru

Similar Category Products





Other Books by செல்வி இரா. ருக்மணி - R. Rukmini