மனவாசம் - கவிஞர் கண்ணதாசன் - Manavasam - Kavignar Kannadasan - Tamil
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
KP B 045
₹230.00
சுயசரிதை - Autobiography.
புத்தக உரை: காகித அட்டை (Paperback);
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);
மொழி: தமிழ்;
பக்கங்கள்: 240;
முதற் பதிப்பு: செப்டம்பர் 2010
பதினான்காம் பதிப்பு: டிசம்பர் 2019
கண்ணதாசன் பதிப்பகம்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பதுக்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.
வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை.
உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன். மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா? "சுயசரிதம்' எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை. கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன்.
இந்த மனவாசம் 1961 - ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதில் கடந்த காலத்தைப் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன்.
நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல். நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன்.
என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக்கொண்ட பிறகு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.
இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால்... எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்....?
அன்பன்,
கண்ணதாசன்
30.10.1980
முன்னுரை:
1961ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாளோடு 'வனவாசம்' முடிகிறது. அடுத்த நாளிலிருந்து கவிஞர் பெருமகனின் 'மனவாசம்' ஆரம்பமாகிறது.
அறிந்தோ அறியாமலோ ஏற்றுக்கொண்டது வனவாசம்.
தெளிவோடும், பரந்த நோக்கோடும், தேசிய ஆவேசத்தோடும் விரும்பி ஏற்றுக்கொண்டது மனவாசம்.
சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட பொருள் இழப்புகளையும், அதனால் தோன்றிய மன காயங்களையும் சுய விமர்சனம் செய்து கவிஞர் கவிஞர் சுய சரிதை எழுதியுள்ளார்.
அவரின் உடல்நிலை காரணமாக இரண்டுமுறை தொடர்ந்து நின்றுபோன மனவாசம் மூன்றாம் முறையும் நின்றுவிடக் கூடாது என்று கவிஞர் நினைத்தார்.
பூம்புனலாய் சந்த ஒழுங்கோடு நடந்து வந்த மனவாசம் முடியாத கதையாகிவிட்டது.
கல்கி இதழில் 'மனவாசம்' வெளிவந்தபோது பல்லாயிரக் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தது.
ஒருவரது முடியாது நிற்கும் எழுத்துக்கள் ]நூல் வடிவில் வருவது தமிழகப் பாதிப்புத் துறையில் காணமுடியாத ஒன்று. அந்த வகையில் கவிஞரது 'மனவாசம்' தான் முதலிடம் பெறுகிறது.
-இராம கண்ணப்பன்
05.05.1988,
சென்னை
ஆசிரியர் குறித்து:- கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
SKU Code | KP B 045 |
---|---|
Weight in Kg | 0.070000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9788184026153 |
Author Name | Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன் |
Publisher Name | Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%