Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சங்கர பொக்கிஷம் / Sankara Pokkisham

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 023
₹40.00
ஆன்மீகம்-Spiritual; 
பக்கங்கள்-Pages :  80; 
முதற் பதிப்பு:ஜூலை 1987; 
பதின்மூன்றாம் பதிப்பு: ஏப்ரல், 2015.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இளம்  பிரயாத்தினரிடையே கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் வளர்த்து, மரண காலம் வரை அவர்களை உயர்ந்தவர்களாக வாழச் செய்ய நம்முடைய மூதாதையர் எடுத்துக் கொண்ட முயற்சி, கொஞ்ச நஞ்சமல்ல.

அக்காலங்களில் குருபக்தியினாலும் குருகுல வாசத்தினாலும் அறம் நிறைந்த அந்தணர்களாய், மானிட ஜாதியின் எல்லாப் பிரிவினரும் திகழ்ந்தார்கள்.

பஞ்சமா பாதகங்கள் குறைவாய் இருந்தன.

சூழ்நிலை, நிர்பந்தங்களினால் ஒருவன் தவறு செய்தாலும், அந்தத் தவறுக்காக வருந்தும் சுபாவமுடையவனாக இருந்தான்.

குருவையே கல்லாலடிக்கும் குணக்கேடோ, இளம் பருவத்திலேயே சோம்பேறித்தனமோ அவனிடத்தில் இல்லை.

நிரந்தரமான மேன்மைக்கு ஒரு அஸ்திவாரத்தை குரு பக்தியும், குருகுல வாசமும் அவனுக்கு அமைத்து தந்தன.

அந்த நாளைய சமுதாயம் ஓர் இளைஞனை ஐந்து வயதிலேயே நன்றாக வளைத்து வந்தது. அதனால் ஐம்பதிலும் அவன் வளைந்தான்.

ஆடு மாடுகளைக்கூட இளம் பிராயத்திலேயே பழக்கத் தொடங்கினால் அற்புதமாகப் பழக்கிவிட முடியும்.

இந்தக் குருகுல வாசம் பற்றி 'அர்த்தமுள்ள இந்துமதம்' ஒன்பதாம் பாகம் 'ஞானத்தைத் தேடி' என்ற நூலில் நான் ஓரளவுக்குக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால் காஞ்சிப் பெரியவர்கள் அளவுக்கு அதை நான் விவரித்துவிட முடியாது.

நானும் மூன்றாண்டுகளுக்குமேல் குருகுல வசம் செய்து முன்னேறியவன்தான் என்றாலும், அதைவிடக் கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர், காஞ்சிப் பெரியவர்.

திட்டவட்டமாக அவர் தெரிவிக்கும் சில கருத்துகள் இன்றைய இளைஞனுக்கு உதவ வேண்டும்.

பள்ளிப் படிப்போ, கல்லூரிப் படிப்போ, வெறும் யந்திரச் சுழற்சியாகாது.

வீடு கட்டும்போது தோண்டப்படுகிற வாணம் போலவும், கட்டப்படுகிற அடிப்படை போலவும் அது அமைய வேண்டும்.

உவமை நயத்தோடு, அதனைப் பின்வருமாறு காஞ்சிப் பெரியவர்கள் சித்தரித்ததை இங்கே முதல் பகுதியாகக் கொடுத்திருக்கிறேன்.   

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார். சம்சாரியின் அனுபவ ஆற்றலைவிட, ஞானியின் சிந்தனை ஆற்றல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு அவரது உரைகள் உதாரணங்கள். 

இன்றைய இளைஞனோ, பெரியவர்களோ அறியாத, பல்வேறு விஷயங்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில சொற்களை நாம் பேச்சு வழக்கில் கையாளுகிறோம். ஆனால் அவற்றின் பொருளை முழுக்க உணர்ந்து கொண்டிருப்பதில்லை. அந்தச் சொற்கள் பலவற்றுக்கான விளக்கத்தை இந்த நூலில் காணலாம். 

காஞ்சி பெரியவரின் வாக்கு, லட்சோப லட்சம் மக்களிடையே பரவ வேண்டும் என்ற முயற்சியின் விலையே இச்சிறு நூல்.

அன்புடன் கண்ணதாசன். 

நூலாசிரியர் பற்றி: கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 023
Weight in Kg 0.020000
Book Type Paperback
Brand Bookwomb
ISBN No. 9788184020458
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:சங்கர பொக்கிஷம் / Sankara Pokkisham

Similar Category Products