Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மதில்கள் - பஷீர் - வைக்கம் முகம்மது பஷீர் - Mathilkal - Basheer - Mathilgal Madhilgal Madhilkal சுகுமாரன் Sukumaran Vaikom Muhammad Basheer

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 238
₹90.00

மொழிபெயர்ப்பு நாவல்/புதினம்; மூலம்: மலையாளம்.

காகித உறை/ பேப்பர்பேக்;

72 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழன் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன். 'மதில்கள்' நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியைக் கூறும் பழவின ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறுநாவல் 1962 -63 இல் வைக்கம் முகம்மது பஷீர் அவர்களால் எழுதப்பட்டது.

1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பஷீர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சக கைதி நாராயணி மேல் அவருக்கு ஏற்பட்ட காதலும், சிறை அனுபவங்களும் தான் இந்த குறுநாவலாக வடிவெடுத்திருக்கிறது. பஷீர் சிறைக்குள் காய்கறித் தோட்டம் போடுவதும் , ரோஜா பூக்கள் வளர்ப்பதும், மரங்களில் விளையாடும் அணில்களை ரசிப்பதும் மிகவும் இயல்பாக இருக்கிறது. அதேபோல் சிறைச்சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் பெண்கள் பகுதியிலிருந்து வரும் "பெண்ணின் மணமும்" அவரை ஈர்க்கிறது. பெண்ணிற்கு மணம் இருப்பதையும், அதை தமது நுட்பமான மனத்தால் அறிந்துகொள்ள முடியும் என்பதையும் பஷீர் உணர்ந்திருக்கிறார். இவருக்கும், நாராயணிக்கும் இடையே சிறைக்குள் இருக்கும் நீண்ட நெடிய மதில்கள். அதற்கு உயிரூட்டி இருக்கிறார் பஷீர். சிறைச்சாலைக்குள் தேநீர் போடுவது, தோட்டவேலை செய்வது மற்றும் ஜெயலரின் தில்லுமுல்லுகள் என்று சாதாரணமாக நகரும் நாவல், நாராயணி வந்த பிறகு நம்மை வேறு தளத்திற்கு அழைத்துச் செய்கிறது. மதிலுக்கு இருபுறமும் நின்று கொண்டு அவர்கள் பேசும் சரசம் நமக்கு விரசத்தைத் தரவில்லை; ரசிக்கவே முடிகிறது. இப்படியாக வளரும் காதல், அவர்களை சந்திக்கத் தூண்டுகிறது. ஆகவே, ஒரு வியாழக்கிழமை சிறைச்சாலைக்குள் இருக்கும் மருத்துவனையில் சந்திக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். அடையாளங்களை பரிமாறிக் கொள்கிறார்கள், நாராயணி தனது வலது கன்னத்தில் மச்சம் இருக்கும் என்று கூறுகிறாள். பஷீரின் கைகளில் சிவப்பு ரோஜாப்பூ. பஷீர் கனவுகளில் மிதக்கிறார். ஆனால், புதன்கிழமை மதியம் ஜெயிலர் அனியன் வருகிறார். அவர் கையில் ரோஜாப்பூக்கள். ஆம்! பஷீருக்கு விடுதலை. அந்த தருணத்தை பஷீர் இப்படி எழுதியிருக்கிறார்," நான் நடுங்கிப் போனேன். என்னுடைய கண்கள் காணாமற் போயின, காதுகள் கேட்காமற் போயின, மொத்தத்தில் ஒரு திணறல். எனக்கு எதுவும் புரியவில்லை". மகிழ்ச்சி தரவேண்டிய அத்தருணம் பெரும் துக்கத்தைத் தருகிறது. பஷீர் தமது ரோஜாத்தோட்டத்திற்கு வருகிறார். ஒரு சிவப்பு ரோஜாவைப் பறித்து முத்தமிட்டபடி பார்க்கிறார். ஜெயிலர் அவரின் லாக்கப் கதவை பூட்டுகிறார். பஷீர், தமது மனக்கதவைப் பூட்டுகிறார். ஒரு மனிதனின் உணர்வோடு கலந்துவிட்ட காதலானது மகத்துவமானது. அக்காதல் வெற்றி பெறும் பொழுது அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருகிறது; மாறாக, தோல்வியுறும் போது அழியாத காயத்தைத் தருகிறது. அது அவன் மரணிக்கும் வரை உடன் பயணிக்கும் வடுவாகவே இருக்கிறது பஷீர் தமது காதலை இந்த நாவல் மூலம் அப்படியே நம் மனதிற்குள் பதிவேற்றுகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அவர் போற்றப்படுவதற்கான அடையாளத்தை நாம் இந்த நாவலில் காணலாம். இந்த மதிலுக்கு உயிர் இருக்கிறது. பஷீர் அந்த மதிலையும் நாராயணியையும் தமது இறுதி காலம் வரை சுமந்து திரிந்திருப்பார்.

எழுத்தாளர் குறிப்பு : வைக்கம் முகம்மது பஷீர் (1908 - 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: சுகுமாரன் (பி: 1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

More Information
SKU Code Kch B 238
Weight in Kg 0.490000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788189945565
Author Name பஷீர் @ வைக்கம் முகம்மது பஷீர் - Basheer @ Vaikom Muhammad Basheer. மலையாளத்திலிருந்து தமிழில்: சுகுமாரன் Malayalam to Tamil Translator: Sukumaran
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:மதில்கள் - பஷீர் - வைக்கம் முகம்மது பஷீர் - Mathilkal - Basheer - Mathilgal Madhilgal Madhilkal சுகுமாரன் Sukumaran Vaikom Muhammad Basheer

Similar Category Products





Other Books by பஷீர் @ வைக்கம் முகம்மது பஷீர் - Basheer @ Vaikom Muhammad Basheer. மலையாளத்திலிருந்து தமிழில்: சுகுமாரன் Malayalam to Tamil Translator: Sukumaran