Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Mattapalliyil Malarndha Maraiporul - Sri Mukkur Lakshmi Narasimhachariar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 434
₹200.00
ஆன்மீகம் நூல்.
 
காகித உறை/ பேப்பர்பேக்;
360 பக்கங்கள்;
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஜூலை, 2000; 
ஒன்பதாம் பதிப்பு: ஜூலை, 2016.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                      
 
மட்டபல்லியில்தான் உலக நன்மையை முன்னிட்டு ஸ்ரீ முக்கூர் சுவாமிகளால் ஸ்ரீசுவாதி நட்சத்திர மகா நரசிம்ம மகா மந்திர ஜப ஹோம மகா யக்ஞங்கள் நடந்தன. ஸ்ரீசுவாமியின் தலைமையில் ரித்விக்குகள் மந்திரங்களை உச்சரிக்க, யக்ஞத்தில் 32 விதமான பட்சணங்கள் உட்பட பல பொருள்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த பட்சணங்கள் கல்யாண சீர் பட்சணங்கள் போல் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்பார் முக்கூர் சுவாமி என்றார் சீனிவாசன். இந்த யக்ஞ குண்டம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அதன் அருகில் தற்போது பவித்ர உற்சவம் நடந்து முடிந்து மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ந்தது கண் கொள்ளாக் காட்சி. இந்த ஷேத்திரப் பெருமையினை முக்கூர் சுவாமிகள் எழுதிய ‘மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்’ என்ற புத்தகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
                                
"எண்ணிலா அருந்தவர்களான முனிவர்கள் பலர் மகிழ்ந்துறைந்தது இம்மட்டபல்லி மஹா ஷேத்திரத்தில்தான். மஹரிஷி வசிஷ்டர் மட்டபல்லி நரஹரியை வலம் வந்து வலமும், வளமும் பெற்று மகிழ்ந்தார். அத்திரி மஹரிஷியின் ஆழ்ந்த தபஸ் அவனை ஆட்கொண்டது. ப்ருகு மகரிஷியின் பெருமை மிகு பக்திக்கு க்ருஷ்ணவேணியைப் போல் பெருகி ஓடி வந்தான் நம் மட்டபல்லி நரஹரி. ஸ்ரீகெளதம மஹரிஷி இவனைப் போற்றி மகிழ்ந்தார். ஸ்ரீகாச்யப மஹரிஷி போற்றும் கனககசிபுஹரன் இவன். ஸ்ரீவத்ஸ மஹரிஷி மிகுந்த வாஸ்சல்யத்துடன் இவனது பெருமையைப் பலகாலும் பேசினார். ஸ்ரீவாதூல மஹரிஷி, ஸ்ரீஜமதக்னியின் வேள்விச் சுடரே இவன். ஸ்ரீவிஸ்வாமித்ரர் விரும்பிய விச்வநாதன் இவன். ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி மகிழ்ந்து பாடிய பரமன் இவன்” என்கிறார் முக்கூர். மட்டபல்லியில் சுயம்புவாகத் தோன்றிய நரசிம்மரை அனுபவித்து வர்ணிக்கிறார் ஸ்ரீலஷ்மி நரசிம்மாச்சாரியார்.     
 
* - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - * - *  ஸ்ரீ: 
|| ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருசிம்ஹ பரப்ரஹ்மணே நம: ||
|| ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருசிம்ஹ திவ்ய பாதுகா ஸேவக ஸ்ரீவண் சடகோப
ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹா தேசிகாய நம: ||
|| ஸ்ரீ மட்டபல்லிநாதம் ப்ரணதோஸ்மி நித்யம் நம: ||
 
முகவுரை:  
நித்யம் ப்ரவஹதி க்ருஷ்ணா 
ஸத்யம் வஹதி வாநதீ |
மல நிர்மூலநம் ஹ்யத்ர
பவிஷ்யதி ந சம்சய: ||
 
ஒவ்வொரு நாளும் கொஞ்சமும் தயக்கமின்றி ஸ்ரீ க்ருஷ்ணா  நதி ஓடிக் கொண்டே இருக்கின்றது. குறையொன்றுமில்லாதவனான ஸ்ரீ மட்டபல்லி லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனின் கருணை வெள்ளமே இந்த நதியின் நீர்ப் பேருக்கு. அவ்வாறே வானதியும் தன்னுள் ஸத்யம், தர்மம் முதலான நீரை நித்யம் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஸ்ரீ க்ருஷ்ணா நதியில் படிந்துக் குடைந்து நீராடுபவர்களுக்கு உடலிலுள்ள அழுக்குப் போய் விடுகின்றது. வாநதியில் படிந்திடுவோர்க்கு காம, க்ரோத, லோப, மோஹாதி கெட்ட குணங்கள் போய் விடுகின்றன. ஸத்யம் தர்மம் முதலான நற்பண்புகள்அமைகின்றன. ஒருவிதத்தில் ஸ்ரீ க்ருஷ்ண வேணியை விட வாநதியே சிறப்புடையது ஏனெனில் ஸ்ரீ க்ருஷ்ண வேணியிருக்கும் இடத்திற்கு நாம் சென்றால்தான் பயன்பெற முடியும். ஸ்ரீக்ருஷ்ணா நதி நம்மைத் தேடி வராது. ஆனால் வானதியோ நம்மிடம் பேரன்பு கொண்டது. இல்லங்கள்தோறும் துள்ளி ஓடி வரும். நம்மை நாடி வரும் வானதியே உயர்ந்தது. ஸ்ரீக்ருஷ்ணவேணீ தனது கரையில் எம்பெருமானைத் தாங்கி நிற்கிறது. வானதியோ ஸ்ரீ மட்டபல்லி நாதனைத் தாங்கிக் கொண்டு உலகெங்கும் சுற்றி வருகிறது. இப்படி பல்வேறு நிலைகளில் நாம் ஆராய்ந்து பார்த்தால் வானதியின் ஏற்றம் எல்லோருக்கும் நன்கு புலப்படும். 
 
இந்த வானதியின் ஸ்தாபகரான ஸ்ரீ திருநாவுக்கரசு அவர்கள் நற்பண்பும், நற்செய்கைகளும் நிரம்பிய ஓர் உத்தமர், உழைப்பால் உயர்ந்தவர், அவரது குடும்பமே ஸன்மார்கத்தில் தலைசிறந்து விளங்குகின்றது. 
 
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை 
என்னோற்றான் கொல் என்னும் சொல்.
 
என்றார் பொய்யாமொழியார். அதுபோன்று தந்தையின் பெயரை நிலைநாட்டப் பிறந்த அன்னாரது தவப்புதல்வர்கள் ஸ்ரீ சோமசுந்தரம், ஸ்ரீ ராமநாதன் ஆவார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் பெருந்தகைகள். பழகுவதற்கு இனியவர்கள். இப்படிப்பட்ட உயர்ந்த ரத்னங்களைக் காட்டித் தந்தவர் கருணைக் கடல் கல்கியின் கி.இராஜேந்திரன் அவர்கள். குறையொன்றுமில்லாத கல்கியில் குறையொன்றுமில்லாதவன் நிறம் பெறுகிறான். ஸ்ரீ கி.ராஜேந்திரனையும் காட்டித் தந்த மஹான் ஸ்ரீ அஹோபில மடத்து சிஷ்ய ரத்னம் ஸ்ரீமான் S.V.S.ராகவன் அவர்கள். இவர்கள் அனைவரையும் காட்டித் தந்த பெருமை சென்னை மாநகரிலேயே நடுநாயகமாய் நின்று அறம் வளர்க்கும் நம் ஆஸ்திக சமாஜம். இப்படிப்பட்ட எல்லோர்களுக்கும் அடியேன் கடமைப்பட்டவன்.
 
இன்று, ஸ்ரீ மட்டபல்லி நாதனான ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனையும், ஸ்ரீ மட்டபல்லியின் மஹிமையையும் "மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்" என்கிற தலைப்பின் கீழ் வானதி தாங்கிக் கொண்டு நம்மை நாடி ஓடி வருகின்றது. இதை ஒவ்வொருவரும் பெற்று இன்புற ஸ்ரீ மட்டபல்லி நாதனின் பூவார் பொன்னங்கழலிணைகளில் படிகிறேன். அடியேனது ஆசார்யரான ஸ்ரீமதழகிய சிங்கரின் திவ்ய திருவடிகளைப் போற்றுகிறேன்.
 
இதை வெளியிடும் ஸ்ரீ திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்களுக்கும் எம் பெருமான் மாலோலன் ஸர்வாபீஷ்டங்களையும் வர்ஷித்தருளுவான். வானதியும் வளரும். நற்பணி வளருட்டுமே என்றென்றும். நீங்காத செல்வம் நிறைந்திடுக நிறைந்திடுகவே!
 
- முக்கூர் லக்ஷ்மீ ந்ருசிம்ஹதாசன்.     
 
பொருளடக்கம்: 
01.நாவன்மை மிக்க நாரதரும் கருத்தொடுமித்த கந்தர்வர்களும்; 
02.மதுபுரி மாதவன்; 
03.முனிவர்கள் மகிழ்ந்துறையும் மட்டபல்லி; 
04.பன்னுகலை நால்வேதப் பொருளுணர்ந்த பரத்வாஜர்;  
05.மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறையும் சீரிய சிங்கம்;  
06.அலைகளில் அலைமகள்; 
07.பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே; 
08.;என் திருமகள் சேர் மார்பன்;  
09.அரண்ய ஸிம்ஹமும் அரணிமதநமும; 
10.பூக்கள் வழிபடும் புண்ணியன்;
11.முக்கண்ணன் போற்றும் முக்கண்ணன்; 
12.ஸ்ரீ மந்த்ர ராஜத்தில் ஸ்ரீ மட்டபல்லி நாதன்; 
13.மந்திகள் பாய்ந்திடும் கோபுரவாசல் இது; 
14.வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்; 
15.திருத்துழாய் மணங்கமழும் மட்டபல்லி; 
16.ஸ்ரீ ப்ரஹ்மாநந்த நிலயமும் ப்ரஹ்மா நுபவமும்; 
17.விண்ணிற்கும் மண்ணிற்கும் அளவுகோலாய் நிற்கும் ஸ்ரீ த்வஜஸ்தம்பம்; 
18.பக்ஷிராஜன் போற்றும் பரமன்; 
19.மாருதி மனங்கவர் மட்டபல்லி நாதன்;    
20.முரளீ மநோஹரன் மகிழும் மட்டபல்லி; 
21.சூடிக்கொடுத்த நாச்சியார் பாடிக் கொடுத்த பாமாலை; 
22.ஆழ்வார்கள் அடிபணியும் அரவிந்தலோசனன்; 
23.ஆசார்யர்கள் அனுபவிக்கும் ஆளரி; 
24.சந்தங்களில் சந்தோகர தலைவன்; 
25.யாக சாலையில் யோகாநந்தன்; 
26.இறைவன் இருக்கும் குஹை நம் இருதய குஹை; 
27.பூ மன்னு மாது பொருந்திய மார்பன்; 
28.திருவுக்கும் திருவாகிய செல்வன்;  
29.பஞ்ச மஹா க்ஷேத்ரங்களில் பஞ்சாநநன்; 
30.திருவின் கேள்வனின் திருவிளையாடல்கள்; 
31.ஸ்ரீ அஹோபில ஸ்ரீ மட்டபல்லி; 
32.மங்களாஷ்டகம் மலர்ந்த மட்டபல்லி.                              
 
ஆசிரியர் குறிப்பு : ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள். இந்த ஐந்து நரசிம்மர்களும் தம்மைக் காட்டிக்கொண்டது ஸ்ரீ உ.வே. முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் என்ற புகழ் பெற்ற நரசிம்ம உபாசகரிடம். இவர் உலக நன்மைக்காக நரசிம்மரின் அவதார தினமான சுவாதி நட்சத்திரங்களில் நூற்றியெட்டிற்கும் மேலான யக்ஞங்களை நடத்தியுள்ளார்.
 
இவற்றில் சில, பிரபல நரசிம்ம ஷேத்திரங்களான, மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம் என்ற சோளிங்கர், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், நைமிசாரண்யம், பிருந்தாவனம், ஸ்ரீ ரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
 
ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் மட்டபல்லி யக்ஞ வாடிகை சந்நிதானத்தில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியாரின் நாலடி உயரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிலாரூபம். இவர் நிகழ்த்திய நூற்றியெட்டிற்கும் மேற்பட்ட சுவாதி யக்ஞங்களில், யக்ஞ மூர்த்தியாக இருந்த லஷ்மி நரசிம்மர், இன்றும் மாதந்தோறும் சுவாதித் திருமஞ்சனம் பெற்றுக்கொண்டு அழகுறக் காட்சியளிக்கிறார்.
More Information
SKU Code VAN B 434
Weight in Kg 0.580000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Mattapalliyil Malarndha Maraiporul - Sri Mukkur Lakshmi Narasimhachariar

Similar Category Products

Other Books by முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar