Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பர்வதமலை அதிசயங்களும் அற்புதங்களும் - பி சுவாமிநாதன் Parvathamalai Athisayangalum Arputhangalum by P.Swaminathan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Sree B 4
₹75.00

ஆன்மிகம்.

பேப்பர்பேக்/ காகித அட்டை; 

88 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதல் பதிப்பு: பிப்ரவரி 2015.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

'மகா பெரியவா மகிமை' பி சுவாமிநாதன் அவர்கள் எழுதிய பர்வதமலை அதிசயங்களும் அற்புதங்களும். 
 
என்னுரை: 
எந்த ஜன்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ, என் வாழ்க்கையில் ஏராளமான ஆலயங்களையும், ஜீவ சமாதிகளையும், புனித மலைகளையும் தரிசிக்கின்ற பேரு பெற்றேன். என்னைப் படைத்த ஆண்டவனுக்கும், என்னைப் பண்படுத்திய காஞ்சி மகா பெரியவாளுக்கும் என் அனந்தகோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இமயமலை, சதுரகிரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற புனிதமான பல மலைகளைத் தரிசித்துள்ளேன். தெய்வ தரிசனம் பெற்றுள்ளேன்.
 
பழங்காலத்தில் வாழ்ந்த மகரிஷிகளும் முனிவர்களும் அமைதி வேண்டியும், இறை தரிசனம் பெற வேண்டியும் மலைகளுக்குச் சென்று தவம் இருந்தார்கள். தங்களின் தவத்துக்கு அங்கே இடையூறு ஏதும் இருக்காது என்று அவரவர்கள் வசிப்பதற்கான குடில்களையும், ஆசிரமங்களையும் கானகத்திலேயே அமைத்துக் கொண்டார்கள். அத்தகைய தவ சீலர்களின் அருளாசியும், அருளாட்சியும் இன்னமும் பல மலைகளில் இருந்து வருகிறது.
 
புனிதமான இந்த மலைகளுக்குச் செல்லும்போது ஒரு புதிய உலகத்துள் நுழைந்த ஆனந்தம் ஏற்படுகிறது. வானுயர்ந்த மலைகள். நவநாகரிக வசதிகள் இல்லை. வேறு எந்த சிந்தனையும் இல்லை. இதனால்தான், இன்றைக்கும் அவ்வப்போது மலைகளுக்குப் பயணித்து நம்மை 'ரெஃப்ரஷ்' செய்து கொள்கிறோம். பெற முடியாத ஆனந்தத்தையும் அமைதியையும் பெறுகிறோம்.
 
பர்வதமலை - 
மிகக் குறுகிய நேரத்துக்குள் (அதிகபட்சம் இரண்டு மணி நேரம்) மலை ஏறி விடலாம். மலையின் உச்சியை அடைந்து விட்டால், கண்களுக்குத் தெரியும் இயற்கை அழகில் மயங்கிப் போய் விடுவோம். இந்த இயற்கை - இறைவன் தந்த கொடை. 
 
இன்னமும் ஏராளமான சித்த புருஷர்கள் இந்த மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இல்லாவிட்டால், இத்தனை அற்புதங்களும் அதிசயங்களும் இங்கே அரங்கேறாது. எனவேதான், ஆன்மிக அன்பர்கள் நம்பிக்கையுடன் இந்த மலை ஏறுகிறார்கள். இறை தரிசனமும் பெறுகிறார்கள்.
 
இப்பேர்ப்பட்ட பர்வதமலையைப் பற்றி 'திரிசக்தி' இதழில் நான் எழுதிய தொடர் கட்டுரைகளே தற்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது.
 
பர்வதமலை யாத்திரை, அனைவருக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் தரும்.
 
இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்.
 
அன்புடன்,
பி,சுவாமிநாதன்.
 
ஆசிரியர் குறித்து: 
ஆசிரியர் : பி. சுவாமிநாதன்
சொந்த ஊர் : திருபுரம்பியம் (கும்பகோணம் அருகில், தமிழ்நாடு); 
படிப்பு : B.Sc. (Maths)) Govt. College for men - கும்பகோணம் M.A. (Journalism) மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; 
அனுபவம் : ஆனந்த விகடன் குழுமம் (22 வருடம்) திரிசக்தி குழுமம் ( 3 வருடம்)
 
ஆன்மீகச் சொற்பொழிவாளராக :
* 'மக்கள் தொலைகாட்சி'யில் 'வாழ்விக்கும் வழிபாடு என்ற தலைப்பில் நம் ஆலயங்களின் புராதனத்தை சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.30 மணி முதல் 7.40 வரை * ' பொதிகை தொலைகாட்சி'யில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் பாரத தேசத்து மகான்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.45 மணி முதல் 8.00 வரை) தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார்.
 
பங்கேற்ற தொலைகாட்சி நிகழச்சிகள் :
ஜீ தமிழ் தொலைகாட்சி ( தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் காஞ்சி பெரியவாளின் மகிமையை சுமார் ஒன்றரை வருடம் தொடர்ந்து பேசியது ). சன் நியுஸ் (விவாதங்கள்) விஜய் (பக்தி திருவிழா) ஜெயா ( சிறப்பு விருந்தினர் ) தந்தி டிவி ( சொற்பொழிவுகள் ) ஸ்ரீ சங்கரா ( பல நேரடி ஒளிபரப்புகள் ) மெகா டிவி ....
 
ஆன்மீக எழுத்தாளாராக :
தொடர்கள் வெளியான இதழ்கள் : ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கிய பீடம் உள்ளிட்டவை. மங்கையர் மலர், ஞான ஆலயம், சூரிய கதிர் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார். தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மீக கட்டுரைகளுக்கு புத்தக வடிவம் கொடுத்து வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் ' நிறுவனம் இவற்றை வெளியிட்டு வருகிறது. எழுதிய நூல்கள் : சுமார் 40-க்கும் மேல்.
 
விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் :
* சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புத தொகுப்பு ) 
* ஆலயம் தேடுவோம் ( புராதமான - சிதிலமான அலயங்களைத் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுமுக்கு நடத்தி வைத்தது ) 
* மஹ பெரியவா ( 2 தொகுதிகள் ) 
 
மேலும் சில வெற்றி நூல்கள் : 
திருவடி சரணம் (தொகுதி 1), 
திருவடி சரணம் (தொகுதி 2), 
மகா பெரியவா தொகுதி - 2,
வைணவத்தின் பெருமையும் அடியார்கள் மகிமையும், 
பண்டரிபுரத்து மகான்கள்.
More Information
SKU Code Sree B 4
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பி சுவாமிநாதன் P.Swaminathan
Publisher Name ஸ்ரீ மீடியா வொர்க்ஸ் Sree Media Works
Write Your Own Review
You're reviewing:பர்வதமலை அதிசயங்களும் அற்புதங்களும் - பி சுவாமிநாதன் Parvathamalai Athisayangalum Arputhangalum by P.Swaminathan

Similar Category Products