Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள்முருகன் - Poonachi Alladhu Oru Vellattin Kathai - PerumalMurugan - Punachi Punaachi Poonachy Poonaachi Allathu Vellaattin Kadhai Kathay Kadhay Perumal Murugan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 177
₹175.00

புதினம்/ நாவல்.

காகித உறை/ பேப்பர்பேக்;

144 பக்கங்கள்;

முதல் பதிப்பு: டிசம்பர் 2016;

ஏழாம் பதிப்பு: நவம்பர் 2020;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சினை தராத அப்பிராணி ஆடு. ஆட்டில் இரண்டு வகை. வெள்ளாடு, செம்மறி. சுறுசுறுப்பானது வெள்ளாடு. கதையில் ஓட்டம் இருக்க வேண்டும். அதற்கு லாயக்கு வெள்ளாடுதான். இரண்டாண்டுகளுக்குப் பின் இவ்விதமாக உருவான எனது பத்தாவது நாவல் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.

’Writer, Poet, Critic Perumal Murugan’s first novel after his self imposed break, following the moral policing and assault on him and his works. Perumal Murugan says the assault imposed a fear to write, to write about men or gods or demons. So he chose to write about animals for now. And of the five animals men know intimately, dog and cat are for poetry, cow and pig can’t be written about, hence that is remaining in only the Goat. Goat being a harmless animal is filled with an enthusiasm. That enthusiasm is translated into flow of the narrative. Thus born the tenth novel of Perumal murugan, the story of a goat or Poonaacchi.

எழுத்தாளர் பற்றி : பெருமாள்முருகன் (பி. 1966) ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றித் தற்போது அரசு கல்லூரி முதல்வராக உள்ளார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

More Information
SKU Code Kch B 177
Weight in Kg 0.550000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789352440856
Author Name பெருமாள்முருகன் - PerumalMurugan
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள்முருகன் - Poonachi Alladhu Oru Vellattin Kathai - PerumalMurugan - Punachi Punaachi Poonachy Poonaachi Allathu Vellaattin Kadhai Kathay Kadhay Perumal Murugan

Similar Category Products





Other Books by பெருமாள்முருகன் - PerumalMurugan