Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இராமாயணமும் இராமாவதாரமும் - டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Ramayanamum Ramavatharamum - Dr.Priya Ramachandran - Raamayanamum Raamavatharamum Raamavathaaramum Ramavathaaramum Raamavadharamum Raamavadhaaramum Ramavadharamum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 264
₹125.00
இலக்கிய திறனாய்வு நூல்.
 
 
காகித உறை/ பேப்பர்பேக்; 
160 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற்பதிப்பு: ஜூலை, 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

முகவுரை: 
 
"இதம் பவித்ரம் பாபக்னம் புண்யம் வேதைச்ர சம்மதிம் ய: படேத் ராமசரிதம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே (புண்ணியங்களை நல்கும், பாவங்களைப் போக்கும் பவித்திரமான வேதம் போன்ற இராமகாதையைக் கற்போர் அனைத்துப் பாவங்களிலிருந்தும் உய்வு பெறுவார்' - ஆதிகவி வால்மீகி.
 
"இராம என எல்லாம் மாறும், அதன் மாறு பிறிது இல்". - கவிச்சக்கரவர்த்தி கம்பன்.
 
வால்மீகி இயற்றிய "இராமாயணம்" நம் நாட்டின் தலை சிறந்த இலக்கியப் புதையலாகத் திகழ்கிறது. வால்மீகி, கவிதை எனும் பாணியைக் கண்டெடுத்த முன்னோடி. கவிதை வடிவில் இக்ஷ்வாகு மன்னர்களின் வரலாற்றுச் சான்றுகளை முதலில் பாடிய ஆதிகவி. "இராமாயணம்" என்ற காப்பியம் பத்தரை மாற்றுத் தங்கம்.
 
வால்மீகிக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றிய கம்பன் அந்தத் தங்கத்தைச் செதுக்கிச் செப்பம் செய்து, அழகிய ஆபரணமாக்கி "இராமாவதாரம்" என்ற பெயரிட்டு ஒளி மிளிரச் செய்த கவிச்சக்ரவர்தியாவார். இரு புலவர்களின் இலக்கியங்களும் அவரவர் மனதின் கருத்தைப் பேசுகின்ற ஒலிபெருக்கிகள் என்று சொல்லலாம். நவீன நடையில் என்னால் வேறென்ன சொல்ல முடியும்? 
 
வால்மீகியின் "இராமாயணம்", மானுடனாகப் பிறந்த இராமன் இறைவனாக மேலோங்கிய கதை. கம்பனின் "இராமாவதாரம்" இறைவன், மானுடனாகத் தோன்றி வாழ்ந்த கதை.
 
தமிழ் மண்ணில் தோன்றி, முக்கனிச் சாற்றினை உண்டு வளர்ந்த கம்பன், அறுபத்துமூவரின் ஆர்வப் பித்துடன்கூடிய பக்திப் பதிகங்களும், மனதைத் தொட்டிலாக்கி அதில் திருமாலைத் தாலாட்டிய ஆழ்வார்களின் அமுதப் பாசுரங்களும், நிர்க்குண பராபரத்தைப் போற்றி, மனிதன், இறைகுணங்களுடன் வாழ வழிவகுத்த குறட்பாக்களும் நிறைந்த பெருங்கடலில் மூழ்கினான். அவற்றின் கருத்தில் தோய்ந்தான். இதன் இயக்கவிளைவால், தன் காப்பியத்தில் முன்னூற்றுக்கும் மேலான திருக்குறட்பாக்களை மேற்கோளாகக் கொண்டான். "வேதமுதல் நாயகனின்" கதையாகிய இராமாவதாரத்தில் சில கதாபாத்திரங்களை மாற்றிப் படைத்தான். 
 
இரு மகாகவிகளும் தமது கதையின் நாயகனான இராமனை, உயிரினும் மேலாக நேசித்தார்கள். இராமனுக்கு வனவாசம் அளித்த தசரதனை, துணிவில்லாத மன்னனாகவும், கைகேயியைத் தீவினையின் குவிப்பாகவும் தீட்டினான், இவர்கள் மீது சீற்றம் கொண்ட வால்மீகி என்னும் கலைஞன். வால்மீகியின் தசரதனை, இராமனுக்கு வாய்மையில் நிகரான தந்தையாக உயர்த்தினான் கம்பன். ஒருமுறை இராம நாமம் உச்சரித்தாலே இன்பப்பெருக்கெடுத்தோடும். பதினாறு ஆண்டுகள் "இராம, இராம" என்று அன்புடன் அழைத்து அவனைச் சீராட்டி வளர்த்த கைகேயியை எப்படிப் பழிப்பது எனத் தயங்கினான். ஆதிகவியின் கவிதைப் போக்கை மாற்றாமல், மேற் பார்வைக்குக் கொடியவளாகவும், ஆய்ந்தால், தாயர் மூவரில் சிறந்தவளாகவும் விளங்கும் நுட்பத்துடன், கைகேயியை உருமாற்றினான் கம்பன்.
 
வால்மீகி வரைந்த பரதன், இராமனின் அன்புச் சகோதரன். அவனை "பரதாழ்வாராகப்" போற்றிய பாசுரங்களுக்கேற்ப "இராமன்" என்னும் உயிரைத் தாங்கும் உடலாகப் படைத்தான் கம்பன். 
 
சத்துருக்கனனை, மதுரகவியாழ்வாரின் சாயலோடு, எம்பெருமானின் அடியவனுக்கு அடியவனாக்கினான். 
 
ஆதிகவி புனைந்த குகன் என்ற தலைசிறந்த நண்பனை, இராமனைக் கண்டவுடன் காதல் கொண்டுவரும் அண்ணலின் நான்காம் சகோதரனாக்கினான். கண்ணப்ப நாயனாரின் நிகர்ப்பினை அளித்து, மீன் போன்று தித்திக்கும் அன்பு நிறைந்த நெஞ்சையும் கொண்ட குகப்பெருமாளாக மாற்றினான். வாழ்க்கை என்னும் நதியை இறைவனின் கருணையால் கடக்கின்றோம். அந்த இறைவனுக்கே படகோட்டியானவன், தீண்டத்தகாதவன் என்று கருதப்பட்ட வேடுவக் குகன்.
 
வான்மீகத்தில் தருமத்திற்காக வாலி படுகொலையுற்றான். உதவியற்ற உருமைக்காக, ஊர் அம்பால், அவனைக் கொன்றான் அநாதரட்சகனாகிய இராமன். கம்பனின் காப்பியத்தில் வாலி வதை இல்லை - வாலி மோட்சம்தான் உள்ளது, 
 
"இராமாயணமும் இராமாவதாரமும்" என்ற இந்த நூலில் பாத்திரப்படைப்பில் இரு புலவர்களுக்கும் இடையே நிலவும் வேறுபடைகளை ஓரளவு எடுத்துக்காட்ட முனைந்துள்ளேன். இரு காப்பியங்களும் பேரண்டம் போல் விரிந்து விளங்குபவை. அதில் திகழும் சில நட்சத்திரங்களைப் பற்றி மட்டும் இந்நூலில் எழுதியுள்ளேன். இப்பேரண்டத்தை முழுவதும் நான் அளவிட முயல்வது, கம்பன் காட்டும் பாற்கடலை அருந்த முயன்ற பூசை போலாகிவிடும். எனவே, வருங்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அண்டத்தை ஆய்ந்து, இதில் நிகழும் முதன்மைக் கோள்களைப் பற்றி எழுத முயல்வேன்.
 
- டாக்டர் பிரியா இராமச்சந்திரன்.
 
பொருளடக்கம்: 
01.அவனி காவலன் 
02.இராமாயணத்தில் தசரதன் 
03.தாயர் மூவரில் சிறந்தவர் யார்?
04.இராமாயணத்தில் தாயர் மூவரில் சிறந்தவர் யார்?
05.செம்மையின் ஆணி 
06.இராமாயணத்தில் பரதன் 
07.தீராக்காதலன் 
08.இராமாயணத்தில் குகன் 
09.இந்திரன் தனிப் புதல்வன் 
10.இராமாயணத்தில் வாலி 
11.தாரைமின்னாள் 
12.இராமாயணத்தில் தாரை 
13.இராமாவதாரத்தில் வாலி வதை வழக்கு 
14.இராமாயணத்தில் வாலி வதை வழக்கு 
15.புதுமைப் பெண்ணின் கண்ணோட்டத்தில் வாலி வழக்கு                                 
 
எழுத்தாளர் பற்றி: டாக்டர். பிரியா ராமசந்திரன், குழந்தை நல சிகிச்சை நிபுணர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையளிக்க, `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷ'னைத் தொடங்கியவர் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன். 
 
வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட அவரது நூல்கள்: 
இராமாயணமும் இராமாவதாரமும்; 
வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்; 
தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞானயோகியும்.
More Information
SKU Code VAN B 264
Weight in Kg 0.590000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Dr.Priya Ramachandran
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:இராமாயணமும் இராமாவதாரமும் - டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Ramayanamum Ramavatharamum - Dr.Priya Ramachandran - Raamayanamum Raamavatharamum Raamavathaaramum Ramavathaaramum Raamavadharamum Raamavadhaaramum Ramavadharamum

Similar Category Products