Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும் - டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Vaali Vadhai Aadhikaviyum Kambakaviyum - Dr.Priya Ramachandran - Vali Vathai Athikaviyum Kampakaviyum - Adhikaaviyum Kambakaaviyum - Adhikaaviyam Kambakaaviyam - Adhikaaviyam Kampakaaviyam - A

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 265
₹70.00
இலக்கிய திறனாய்வு நூல்.
 
காகித உறை/ பேப்பர்பேக்; 
112 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற்பதிப்பு: டிசம்பர் 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

முன்னுரை: 

"பூஜ்யந்தம் இராம இராமேதி மதுரம் மதுராட்சரம் 

ஆரோக்கிய கவிதாசாரம் வந்தே வால்மீகி கோகிலம்"

  - ஆதிகவி வால்மீகி.

சமீபத்தில் "இராமாயணமும் இராமவதாரமும்" என்ற எனது முதல் நூல் வெளியிடப்பட்டது. அந்த நூல் வெளியிட்டு விழாவில் முன்னிலை வகித்தார் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள். அவர் ஆற்றிய சொற்பொழிவில் வாலியைப் பற்றிப் பேசும்பொழுது, வாலி வதை என்றென்றும் ஒரு தீரா வழக்காகவே இருக்குமென்றும், அவ்வாறு அக்கதையில் கம்பன் பல முடிச்சுகளை வைத்திருக்கிறான் என்றும் கூறினார். அச்சொற்கள் என் ஆர்வத்தைத் தூண்டின. என் முதல் நூலில் வாலி என்னும் கதாபாத்திரத்தின் படைப்பில் ஆதிகவி வால்மீகிக்கும், மகாகவி கம்பனுக்குமிடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி எழுதியிருந்தேன். வாலிவதை வழக்கு என்ற பகுதியைக் கேள்வியும், பதிலுமாகக் கையாண்டிருந்தேன்.

இப்பகுதியில், ஆதிகவி, இராமனின் தெய்வத்தன்மை என்னும் மேலாடையை நீக்கி மானுடனான இராமன் வாலியை மறைந்திருந்து வதைத்தமைக்கான தக்க விளக்கம் அளித்துள்ளாரென்றும், அதே வழக்கில் இராமனைப் பரம்பொருளாகத் தோற்றிய கம்பகவியும், வாலி வதைக்கு தக்க விளக்கம் அளித்தாரென்றும் எழுதியிருந்தேன். 

இந்தப் பகுதியை பற்றி சிந்திக்கும்பொழுதும், எழுதும் பொழுதும் கம்பனில் நான் எந்த முடிச்சுகளையும் காணவில்லை. கம்பவாரிதியின் உரையாடலைக் கேட்டபிறகு மீண்டும் கதையை ஒருமுறை படித்தேன், சிந்தித்தேன். முதலில் ஆதிகவியின் நூலை மீண்டும் படித்தேன். எனது புதிய பார்வைக்குப் பல முடிச்சுகள் தென்பட்டன. பிறகு கம்பனில் இப்பகுதியைப் படித்தேன். அந்த முடிச்சுகள் ஒவ்வொன்றையும் கம்பகவி அவிழ்த்து விட்டாரென்று உணர்ந்தேன்! வியந்தேன்! உற்சாகத்துடன் கம்பவாரிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

"ஐயா! நீங்கள் கூறிய முடிச்சுகள் அனைத்தும் ஆதிகவியுடையவை. அவற்றை மிக நுட்பமாக அவிழ்த்தான் கம்பன்" என்றேன்.

உடனே அவர் இதைப் பற்றி "வாலி வதையில் ஆதிகவியும், கம்பகவியும்" என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதச் சொன்னார். ஒரு நூல் எழுதும் அளவிற்கு என்னிடம் கருத்து இல்லை. இதைக் கட்டுரையாக எழுதலாமென்று எண்ணினேன். இந்தத் தீரா வழக்கைப் பற்றிய என் கண்ணோட்டம் சரியானதா என்று அறிய விரும்பினேன். இராமகதை என்ற பேராழியில் நான் கண்டெடுத்த முத்தைப் போல் எண்ணிலா முத்துக்களை கண்டெடுத்தவர் தேசியமணி புதுவை இரா.இராமசாமி அவர்கள். அவரை வானதி பதிப்பகத்தில் சந்தித்தேன். அப்பதிப்பகத்தின் உரிமையாளர் திரு இராமநாதன் அவர்கள் என் வருகையைப் பற்றியும், வாலியைப் பற்றி கலந்தாராய வேண்டுமென்ற எனது விருப்பத்தைப் பற்றியும் அவரிடம் முன்னமே கூறியிருந்தார். திரு.இராமசாமி ஐயா, வாலி வதையைப் பற்றிய பல நூல்களை எடுத்து வந்தது மட்டுமல்லாமல், அவற்றில் சர்ச்சைக்குரிய பகுதிகளைக் குறித்து வைத்திருந்தார். இந்த வழக்கில் எனது கண்ணோட்டத்தை அவருக்கு எடுத்துரைத்தேன். கம்பவாரிதி கூறியது போல் அவரும் இதை நூலாகவே எழுத வேண்டுமென்று வலியுறுத்தினார். இப்படித்தான் இந்த நூல் பிறந்தது !

வாலிவதையைப் பல மாபெரும் தமிழ் மேதைகள் கையாண்டுள்ளனர். அவர்களின் நூல்களைப் படித்து, அவர்கள் கூறிய கருத்தில் தோய்ந்தேன். "கம்பனது வாலி மகோன்னத பாத்திரம்" என்று தமது நூலைத் துவங்குகிறார் பேராசிரியர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள். 'சிறியன சிந்தியாதான்" என்ற இவரது நூல், வாலியென்ற கதாபாத்திரத்திற்கு ஒரு புகழுரையாகத் திகழ்கிறது. வாலியின் குணநலன்களையும், நுண்ணறிவையும் பாராட்டியும், இராமன்"   அவனை ஒளிந்து நின்று வதைத்ததால், "சூரியன் மரபுக்கும் ஒரு தொல்மறு" விளைந்ததென்று முடிவு கண்டுள்ளார். வாலியின் ஒரே ஒரு குற்றம், இலங்கை வேந்தனோடு கொண்ட நட்பேயாகும். தீர்க்கதரிசியான இராமன், இவர்களது உறவு, இராம இராவணப் போருக்கு ஊறு விளைக்கத்தக்கது என்று உணர்ந்து வாலியை வதைத்தான் என்றும் தீர்வு கண்டார்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களை அறியாதவர் ஒருவரும் இந்தத் தமிழ் மண்ணில் இரார். வாலியைக் கொன்றது நீதியா? அநீதியா? என்ற கட்டுரையில் அவரும் "சிறியன சிந்தியாதான்" என்று கம்பன் வாலியைப் போற்றியதற்குக் காரணம் கண்டார். சக்தியைப் பிரிந்தால் சிவனில்லை. அதுபோல் சீதையைப் பிரிந்தால் இராமன் இல்லை. சீதையைப் பிரிந்த துயரால் இராமன், "அறத்திறன் அழியச் செய்யான்" திகைத்துப்போய் இந்த மாபெரும் தவற்றைச் செய்தான். "என்னை ஏன் விலங்கு போல் மறைந்திருந்து வதைத்தாய்?" என்ற கேள்விக்கு இராமன் மௌனம் பாலித்தான். தனது குற்றத்தை உணர்ந்ததே இந்த மௌனத்திற்குக் காரணம். இதை அறிந்த வாலி, சொற்போருக்கு முற்றுப்புள்ளி வைத்தான் என்ற முடிவுக்கு அடிக்கல் நாட்டுகிறது இவரது கட்டுரை.

அறிஞர் பெருமகன் அ.ச.ஞானசம்பந்தன், "கம்பன் - கலை", "இராவணன் - மாட்சியும், வீழ்ச்சியும்"எனப் பல நூல்களை எழுதி, கம்பனைக் கற்ற மேதைகளில் தனக்கென ஒரு தனியிடம் வகுத்தவர். அவர் "கம்பன் கண்ட விழுப்பொருள்கள்" என்றொரு கட்டுரையை எழுதினார். இராமன் மறைந்து நின்று அம்பு எய்தினான் என்ற செயலின் அதர்மத்தை விழுப்பொருளாகக் கொண்ட வாலி, இராமன் தன் வினாக்களுக்கு அளித்த விடையினால் நல்லறிவும், ஞானத் தெளிவும் பெற்றான்.

முன்னரே இராமனை தாரையிடம் பறைசாற்றிய வாலி இராமபானத்தை நெஞ்சில் ஏற்றான். இராமனின் உபதேசத்தை மனத்தில் ஏற்றான். "கவிக்குலத்து அரசன் அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்." அவனது முந்தைய விழுப்பொருள்கள் சிறியனவாகிவிட்டன. எனவே அச்சிறு கோட்டிற்கும் கீழே மோட்சமார்க்கம் என்ற பெரிய கோட்டை மனதில் வரைந்து, "சிரியன சிந்தியாதான்" வாலி, தனது பழைய விழுப்பொருள்களை மறந்தான் என்று வாலியை இறை நிலைக்கு உயர்த்தினார், ஆ.ச.ஞா. அவர்கள்.

நீதிபதி கனம் மு.மு.இஸ்மாயில் அவர்கள் "கம்பன் கண்ட இராமன்" என்ற நூலை 1976ஆம் ஆண்டு படைத்தார். கம்பனைக் கற்ற மாமேதைகளில் ஒருவரான இவர், சென்னையில் முதன்முதலாக கம்பன் கழகத்தை அமைத்தார். அதுமட்டுமல்லாமல், தமிழ் மொழியில் தோன்றிய மாபெரும் காப்பியங்களுள் கம்பனின், "இராமவதாரம்" முதலிடம் பெற வேண்டும் என்றும் வாதித்தார்.

"வாலி வதையும், தீக்குளிப்பும்" என்றொரு அத்தியாயம் இவர் நூலில் இடம்பெறுகிறது. சுக்ரீவனுக்கு அபயம் நல்கிய இராமன் வாலியிடம் நேர்ப் போர் செய்திருந்தால், இராமனின் பாதி பலத்தை வாலி பெற்றிருப்பான். இந்த வரத்தின் காரணத்தால் அவனை மறைந்து நின்று அம்பு ஏவுதலே சுக்ரீவனுக்கு அளித்த வாக்கைக் காக்க இராமனுக்கு ஒரே மார்க்கம். தனது தவறை உணர்ந்த இராமன், இதைப் பற்றிச் சிந்தித்துப் பின்னர் வருந்தினான் என்று பிரதிபலித்தார் திரு.இஸ்மாயில். 

புலவர் கீரன், தமது சொற்பொழிவில் குரங்கு வாலி, மனித வாலி, தெய்வ வாலி என்று வாலியின் இயல்பைப் படம்பிடித்துக் காட்டுகிறார். விலங்கை மனிதனாக்கி, அம்மனிதனை தெய்வமாக்கலாம் என்பதற்கு கம்பன் வாலியை எடுத்துக்காட்டாக்குகிறார் என்பதே அவரது கூற்று.

மறைந்த இம்மாமேதைகளின் படைப்பிலக்கியங்களின் சொல்லாற்றல், பொருள்நயம், சிந்தனைத்திறன் ஆகியவற்றைக் கண்டு மலைப்புடன் நான் அவர்களைத் தலைவணங்குகிறேன். காலங்களின் வரம்பைக் கடந்து வந்த இவர்களின் சிந்தைகள் எனது சிந்தனைக்கு வடிவமைத்தன என்று தாழ்மையுடன் ஒப்புக் கொள்கிறேன். நூலை எழுதுவதற்கு முன்னர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன் அவர்கள் எழுதிய "கம்பராமாயணம் - மூலமும், உரையும்" என்ற நூலின் கிட்கிந்தா காண்டத்தைப் படித்தேன். படிக்கப் படிக்க மனத்தில் கருத்துக்கள் எழுந்தன. இவையே இந்த நூலாக வடிவம் பெற்றுள்ளன. 

இந்நூலின் திறவுகோலை உங்களிடம் அளிக்குமுன், இந்நூல் பிறந்ததற்கு காரணமான கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும், தேசியமணி திரு.இராமசாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பவாரிதி துரோணாச்சாரியார் என்றால் நான் ஏகலைவன், அவர் எனது நூலுக்கு அணிந்துரை எழுதியது இறைவன் எனக்களித்த மாபெரும் பேரு.

இந்த நூலைப் படித்து, தனது கருத்தையும் தெரிவித்து, பிழைகளைத் திருத்திய பத்மஸ்ரீ முனைவர் அவ்வை நடராசன் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இவரது தமிழார்வமே இந்த நூலுக்கு உரம் நல்கியது.

 

 

 

 

*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

"வாலிக்கு மரணதண்டனை அளித்து அவனை விலங்குபோல் வேட்டையாடிக் கொன்ற தனது காவிய நாயகன் அறம் தவறவில்லை. வால்மீகி என்ற சிற்பியின் உள்ளெண்ணத்திற்கேற்ப இராமனின் கதாபாத்திரம் வடிவம் பெற்றது

வாலி வதைப் பகுதி, பிறன்மனை நயந்தவன், கிளையோடும் அழிவான் என்ற அறம் வழுவாச் சிந்தனையை இராமகாதையின் மகுட வாசகத்தை, நிலைநாட்டியது. வாலி வதைக் காட்சியை நம் மனக்கண் முன் சொற்களால் வரைந்த ஆதிகவி, இதில் எந்தவொரு சிக்கலையும் முடிச்சையும் காணவில்லை." 

"கம்பன் ஒரு சூத்திரம் படைத்தான். அவனது காப்பியத்தில் வாலி வதையைப் படித்தால் பல கேள்விகள் எழும். ஆதிகவியின் காப்பியத்தில் வாலி வதைப் பகுதியை உள்வாங்கிய பிறகு கம்பனைப் படித்தால் அனைத்துக் கேள்விகளும் விடையாக மாறும். வினாவுக்கு எதிராக வந்த வினாவே விடையாகும்."

- பிரியா இராமச்சந்திரன். 

புத்தக விமர்சனம்: 

"இந்நூலில் வால்மீகி வாலி வதையில் இடும் ஆறு முடிச்சுக்களை இனங்காட்டி, கம்பன் அம்முடிச்சுக்களை இலகுவாய் அவிழ்க்கும் அதிசயத்தையும், நிறுவிக் காட்டுகிறார் பிரியா இராமச்சந்திரன். 

"கம்பனின் வாலி வதையைத் திரும்பத் திரும்பப் படிக்க கற்றோர் தம் ஆழத்திற்கேற்ப அது அகன்று விண்கடந்து விரியும் அதிசயத்தை, அற்புதமாய் எடுத்துச் சொல்லித் தன் நூலை முடிக்கிறார்."

- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.

இந்த நூல் வாலிவதை ஆதிகவியும் கம்பகவியும் டாக்டர். பிரியா ராமசந்திரன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம்  இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில்  நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.   
 
எழுத்தாளர் பற்றி: டாக்டர். பிரியா ராமசந்திரன், குழந்தை நல சிகிச்சை நிபுணர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையளிக்க, `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷ'னைத் தொடங்கியவர் டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.
 
வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட அவரது நூல்கள்: 
இராமாயணமும் இராமாவதாரமும்; 
வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்; 
தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞானயோகியும்.
More Information
SKU Code VAN B 265
Weight in Kg 0.490000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Dr.Priya Ramachandran
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும் - டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Vaali Vadhai Aadhikaviyum Kambakaviyum - Dr.Priya Ramachandran - Vali Vathai Athikaviyum Kampakaviyum - Adhikaaviyum Kambakaaviyum - Adhikaaviyam Kambakaaviyam - Adhikaaviyam Kampakaaviyam - A

Similar Category Products