Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - Thi.Janakiraman Kurunovelkal - T.Janakiraman - Kurunaavalgal Kurunovelkal Kurunavalgal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 248
₹375.00

புதினம்/ குறுநாவல்.

காகித உறை/ பேப்பர்பேக்;

336 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள். நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவை அவரது குறுநாவல்கள். சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல். ஆண், பெண் உறவின் சிக்கலை, மனக் கோணலை, பரிதவிப்பை, ஆன்மீகப் பதற்றத்தை, நிறைவை, கச்சிதமான வடிவத்தில் மனதை ஈர்க்கும் நடையில் இந்த நீள் கதைகள் முன்வைக்கின்றன.

எழுத்தாளர் பற்றி : தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

More Information
SKU Code Kch B 248
Weight in Kg 0.770000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789386820136
Author Name தி. ஜானகிராமன் - Thi. Janakiraman - T.Janakiraman
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - Thi.Janakiraman Kurunovelkal - T.Janakiraman - Kurunaavalgal Kurunovelkal Kurunavalgal

Similar Category Products