தமிழர் வரலாறு - தேவநேயப் பாவாணர் - Thamizh Varalaru - Devaneya Pavanar - Tamilar Varalaaru - Dhevaneya Paavaanar - Thamilar Varalaroo - Devanaeya Pawanar
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
தமிழ் இலக்கியம் / தேவநேயர் ஆக்கிய நூல் / பண்டைத் தமிழர் பண்பாடும்.
காகித அட்டை/ பேப்பர்பேக்;
314 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
பதிப்பு: ஆண்டு 2022.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
தமிழர் வரலாறு என்னும் இந்நூல் தேவநேயப் பாவாணர் ஆக்கிய நூல் ஆகும்.
முன்னுரை:
1. ஞாலமுந்திய நிலை:-
ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம் மாநிலம். 'பூமி' என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று. தென்சொல்லெனினும் தமிழ்ச் சொல்லெனினும் ஒக்கும்.
ஞாலநிலப்பாகம் இன்றுள்ளவாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்றுதொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana), அங்காரம் (Angara), பாலதிக்கம் (Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒருசில தீவுகளாகவும் பகுந்திருந்தது. காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலியாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும்பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ்ப் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென்பகுதியையும், அமசோனியம் தென்னமெரிக்காவையும் தம்முட் கொண்டிருந்தன. அரபிக் கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை. இந்துமாவாரியின் பெரும் பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியொடு சேர்ந்திருந்தது. அதனால், பனிமலைத்தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது.
2. எழுதீவுகள்:-
ஒரு காலத்தில் ஞாலநிலப்பகுதி ஏழு கண்டங்களாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. அவை ஒன்றினொன்று தீர்ந்திருந்தமை யால் தீவுகள் எனப்பட்டன (தீர்வு-தீவு). அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும் (தீவு-தீவம்).
ஆசிரியர் குறிப்பு: தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.
"தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி"யென வழக்காடியவர். "கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது" என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
SKU Code | Bharti B 467 |
---|---|
Weight in Kg | 0.400000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | தேவநேயப் பாவாணர் Devaneya Pavanar |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippakam |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%