Details
இந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் விவாதிக்க விரும்பவில்லை. என்ற காரணம் கூட கூற முடியவில்லை. விக்கிரமன் அன்றி வேறு எவரும் இவ்வளவு நீண்ட தொடருக்கு இப்படி ஒரு அமைதியான ஆதரவை தந்திருக்க மாட்டார்கள். அவரை இறையருள் அடுத்து நின்று காக்கும். "உன்னை அறியாதவரை உன் உணர்வுகளையும் அறிய முடியாது." "எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு."
"சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லா சலனங்களும் தவறுதான். சலனமற்றிருத்தலே உத்தமம்."
"மரணத்தைக் கண்டு பயமில்லாது இருப்பவனே சந்தோஷமான மனிதன்."
கடவுளைத் தெரிந்தவருக்கு தன்னைத் தெரியும். தன்னைத் தெரிந்தவருக்குக் கடவுள் புரியும்." அதிக தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும் சக மனிதர்களை நேசிக்கும் ஒரு 26 வயது இளைஞனின் ஆன்மாவை பற்றிய கதை.