Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

விடம்பனம் - சீனிவாசன் நடராஜன் - Vidampanam - Srinivasan Natarajan - Vidambanam Vidambhanam Vitambanam Vidampanum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 179
₹450.00

புதினம்/ நாவல்.

காகித உறை/ பேப்பர்பேக்;

389 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இதுவரை நாவல் கலையின் சாத்தியங்கள் என்று பொதுவாக அறியப்பட்ட அனைத்தையும் ‘விடம்பனம்’ உட்கொண்டிருக்கிறது. அதேசமயம் மேற்சொன்ன முன் முயற்சிகள் எல்லாவற்றையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் பிரதி இரக்கமற்று ஏளனம் செய்கிறது. அவற்றைப் பகடிக்குள்ளாக்குகிறது. நிலைபெற்றுவிட்ட வடிவத்தைக் குரூரமாக நையாண்டிக்குள்ளாக்குவதன் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தையே தனது வடிவமாகக் கொள்கிறது. இந்தச் சுதந்திரத்தை உள்ளடக்கத்தில் மேலும் காத்திரமானதாகக் கையாளுகிறது ‘விடம்பனம்’. நிலைபெற்ற மதிப்பீடுகளை, அழகியலை, வரலாற்றை, தனிமனிதச் சிந்தனைகளைப் பகடி செய்கிறது. கட்சி அரசியலை, கலை விசாரங்களை, சாதியப் பெருமிதங்களை, சீர்திருத்தப் போக்குகளை, பண்பாட்டுப் பெருமைகளைத் தலைகீழாகக் கவிழ்க்கிறது. ஒருவகையில் நம்மைச் சூழ இருக்கும் எல்லாவற்றின் மீதுமான விமர்சனமே ‘விடம்பனம்’.

ஆசிரியர் குறித்து: சீனிவாசன் நடராஜன் (பி. 1972) கீழத் தஞ்சை நகரமான ராஜமன்னார்குடியில் பிறந்தவர். மதராஸ் கலைப் பள்ளியில் பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். பொது மேலாண்மையியலில் முதுகலை, எம்ஃபில் பட்டங்களும் பெற்றிருக்கிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் ‘சித்தாந்த ரத்தினம்‘ பட்டமும் வழங்கப் பெற்றவர். மெய்ப்பொருள் சிற்றிதழை நடத்தினார். அதே பெயரிலான பதிப்பகம் வாயிலாக நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். கணையாழி மாத இதழின் இணை ஆசிரியராகவும் இருந்தார். ‘ஆத்மாநாம் அறக்கட்டளை’யின் நிறுவனர். ஓவியராக, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றவர். மின்னஞ்சல்: arunsriindia@gmail.com.

More Information
SKU Code Kch B 179
Weight in Kg 0.840000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789352440559
Author Name சீனிவாசன் நடராஜன் - Srinivasan Natarajan
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:விடம்பனம் - சீனிவாசன் நடராஜன் - Vidampanam - Srinivasan Natarajan - Vidambanam Vidambhanam Vitambanam Vidampanum

Similar Category Products





Other Books by சீனிவாசன் நடராஜன் - Srinivasan Natarajan