Details
பதினோறு கதைகளை படித்து முடிக்கும் போது ஒரு சராசரி ஆண், பெண்ணின் உணர்வுகளை இதைவிட தெளிவாக வேறு யாராலும் சொல்ல முடியாது என்று நினைத்தேன் வெளிப்புறத் தோற்றங்களை மட்டுமே கண்டு அடுத்த கட்ட நகர்விற்கு ஆயத்தமாகும் நம்மால் அகத்தின் அழுக்குகளையும், கோரங்களையும் கண்டுகொண்டபின் அடுத்த அடி வைக்க மனமின்றி அப்படியே நின்றுவிடும் மனநிலையை உணர முடிந்தது மனிதர்களில்தான் எத்தனை வண்ணங்கள், எத்தனை வடிவங்கள்?
"சகாதேவன் சிரித்தான். அவன் ஞானி. என்னைக் கொன்றது அர்ஜுனனின் பானங்கள் இல்லை. என் தான தர்மம் என்னைக் கொன்றது. என் தரும பலன்களை தானமாக வாங்கிக் கொண்ட கண்ணனிடம் கேள். நான் எவராலும் கொல்ல முடியாதவன் என்று உனக்குச் சொல்வான் "