அசோகமித்திரன் குறுநாவல்கள் - Ashokamitran Kurunovelkal - Kurunaavalgal Kurunovelkal Kurunavalgal
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
புதினம்/ குறுநாவல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
623 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?.. கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன். அவரது கதை மாந்தர்களைப்போல் அவரது மொழியும் அலங்காரமற்றது; ஆனால் பிரகாசமும் நுட்பமும் கொண்டது. ஒரு கதையை, அரசியலை, வாழ்க்கையைச் சொல்லும்போது சாமானியனின் குரலையே விவரிப்பு மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார்.
அசோகமித்திரனுக்குத் தீர்க்கமான அரசியல் பிடிபாடுகள் உண்டு; அவரது கதை மாந்தர்களும் அதைப் பேசுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடத்தில் அரசியல் நிகழ்த்தக்கூடிய பாதிப்பாகவே கதை மாந்தர்களுக்கு இடையில் அது பகிரப்படுகிறது. பெருநகரக் குடித்தன வீட்டின் பகலிருட்டைப் போன்ற துயரம் அசோகமித்திரன் கதைகளில் கவிகிறது. நடுத்தர வர்க்கத்தினரின் விழுமியங்களுக்கும் மற்ற இரு பிரிவினரின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையிலான முரண்களையும் அவரது கதைகள் சித்திரிக்கின்றன. இந்த முரண்களால் எழும் சாமானியனின் தாழ்வுமனப்பான்மையையும் கையாலாகாத்தனத்தையும் பகடியாகக் கடக்கிறார். இது அசோகமித்திரன் மொழியின் விஷேசமான பண்பு. ஒரு நாளைப்போல் மாறாத மற்றொரு நாளுக்காகக் காத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பாடுகள்தாம் அசோகமித்திரனின் இந்தக் குறுநாவல்கள். மண்குதிரை.
Asokamitran is one of the greatest living tamil writers. His stories portray a time passed through the eyes of a middle class life. These novelettes also has the same everyday humans as their heart. Like his characters, his language is also one rare of embellishments; but adorned with nuances and a brightness. He choses the common person's voice to say a story, or politics or life. He has strong political opinions, so does his characters. But as the way politics interferes in the everday life of a middle class person. Ashokamitran's stories have a melancholy similar to the apartment life of the cities. Middle class life and their contradictions with the classes above and below are portrayed in his stories. The inability of a common person in face of this contradictions is crossed with a satire. Asokamitran's novelettes are voices from a time passed, that still have relevance and appeal to readers.
எழுத்தாளர் பற்றி : அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
SKU Code | Kch B 249 |
---|---|
Weight in Kg | 1.540000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9789352440863 |
Author Name | அசோகமித்திரன் - Ashokamitran |
Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%