Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
புதினம்/ குறுநாவல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
88 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறன் அற்றவர்கள். சென்னையில் எழுபதுகளில் இருந்திருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் சித்திரத்தை அசோகமித்திரன் தரும் விதத்தில் அந்தக் குடும்பம் நமது அக்கறைக்குரிய குடும்பமாக மாறிவிடுகிறது. இறுக்கமும் அவஸ்தையும் பதற்றமும் நிரம்பிய இந்தக் குடும்பத்தினரின் அன்றாட வாழ்வின் சித்திரங்களை அசோகமித்திரன் தருகிறார். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். மணல் உங்களுக்குப் பதில் சொல்லாது. மணலைத் தோண்டிப் பார்த்து அறிந்துகொள்ளலாம். அரவிந்தன்.
எழுத்தாளர் குறிப்பு : அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். ஜ. தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
| SKU Code | Kch B 239 |
|---|---|
| Weight in Kg | 0.510000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| ISBN No. | 9789386820075 |
| Author Name | அசோகமித்திரன் - Ashokamitran |
| Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%




























