Details
அத்திப் பூ எப்பொழுது பூக்கும் என்று யாருக்கும் தெரியாது பூத்த சில நிமிடங்களிலே காயாகிவிடும் பின் மெல்ல கனியாகும் அப்படிதான் இந்த கதையின் நாயகன் நாயகி இருவருக்கும் ஏற்படும் அபூர்வமான நிமிடங்கள் அத்திப் பூ நிமிடத்தை போல அற்புதமானது.
வாழறதுக்குன்னு ஆசைப்படறது ரொம்ப பெரிய சந்தோஷம். தொடர்ந்து வாழறது ரொம்ப பெரிய சந்தோஷம். ஊர் சுத்த, ஊர் சுத்த வாழறதுக்கு ஆசை வரும். எல்லாரையும் அணைச்சுக்கிட்டு போக ஆசை வரும். ஜாதி, மதம் தாண்டி ஒண்ணா இருக்க ஆசை வரும். ஒரே இடத்துல உட்கார்ந்துக்கிட்டிருந்தோம்னா அடுத்தவங்களுடைய வாழ்க்கையைப் பத்தி அக்கறையில்லாத போகும். அடடே இவ்வளவு அழகான சர்ச்சா அடடே இத்தனை அழகான சிலையா. அடடே... இவ்வளவு அழகான தாஜ்மகாலா அப்படின்ற பொது இங்க எல்லார் வாழ்க்கையும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு புரியும். பயணம் செய்யாதவன் தான் சண்டை போடறான். அடுத்த ஊரை எட்டிப் பார்க்காதவன்தான் தன் ஊர் ரொம்ப அற்புதம்கறான்.
ஊர் சுத்த, ஊர் சுத்த எல்லா இடத்துலயும் மனுஷாளுக்கு ஒரே மாதிரிதான் வாழ்க்கைன்னு நல்லா தெரிஞ்சிடும் இல்ல. அதனாலதான் நான் சுத்தறேன். இதைத்தான் நான் என் புஸ்தகத்துல சொல்லப்போறேன். ஊர் சுத்துங்கய்யா. எல்லாரும் ஊர் சுத்துங்க. உள்ளம் விரியும். உள்ளம் விரிஞ்சா நல்ல குணம் மேலோங்கும் அப்படின்னு தான் நான் எழுதப்போறேன். உள்ளம் விரிஞ்சு நல்ல மனம் மேலோங்கும் அப்படின்னு எழுதப்போறேன். நல்ல மனம் மேலோங்கினா தீவிரவாதம் காணாதபோகும்னு சொல்லப் போறேன்.