Details
சோழர் காலத்தில் வேளாள வீரன் ஒருவன் மயிலை பகுதியில் தலைவனாகிறான். இதை மக்களின் கதையாக எழுதி இருக்கிறார்.
"பொன்னி கூட்டம் பிளந்து வந்து அவர்க்கு அருகே நின்று கை கூப்பி வணங்கினாள். வாழ்க இளவரசர் வாழ்க தேசம் வாழ்க மாமன்னர் வாழ்க தமிழ் மொழி வாழ்க இறைப்பற்று என்று கூவினாள். இளவரசர் அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார். மிக சிறிய பெண்ணாக இருப்பாள் என்று நினைத்தேன். வேளாளர்களில் அதுதானே வழக்கம். பூப்படைவதற்கு முன்பே திருமணம் செய்து விடுவீர்களல்லவா ஆனால் இந்தப் பெண் சற்று பெரியவளாக இருக்கிறாளே.
"ஆமாம். சற்று செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோம். நல்ல மணமகனுக்காக காத்திருக்கிறோம்" பொன்னியின் அப்பா சொல்ல.... "நல்ல மணமகன் கிடைத்து விட்டானல்லவா" என்று இளவரசர் திரும்பி பொன்னியைப் பார்த்து கேட்க, பொன்னி "ஆம்" என்று சொன்னாள்.
ஆமென்று சொல்கிறாய். இவனை நல்ல மணமகன் என்று உனக்கு யார் சொன்னார்கள், நீயாக அறிந்து கொண்டாயா, அல்லது எவரேனும் சொன்னார்களா? "