Details
இருண்ட மனத்தோடு அந்நூலைப் பிரித்துப் படித்தபடியே வந்தேன். அந்தக் கதையில் இடம்பெற்றிருந்த இளைஞன் நானேதான். முன்னொருநாள் அவன் பாலகுமாரனாகவும் இருந்திருக்க வேண்டும். கவிதை எழுதுகிறான். தீராக்காதலோடு தன்னைச் சீராட்டும் ஒருத்தியை என்செய்வதென்று தெரியாமல் தவிக்கிறான். வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது, எப்படி எதிர்கொள்வது, என்ன செய்யவேண்டும் என்று அல்லாடுகிறான். கதையைப் படிக்கப் படிக்க என்னை அழுத்திய எடைகள் அனைத்தையும் அடையாளங்கண்டேன். அவற்றை என்ன செய்வது என்று தெரிந்துவிட்டது. எதிர்காலம் என்பது முடிவில்லாத வாய்ப்புகளைக்கொண்டது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. என் பதற்றங்கள் அனைத்தும் நீங்கின. - vikatan thadam.