Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஜாதகம் பார்ப்பது எப்படி? - புலியூர் பாலு - Jaathagam Paarpadhu Eppadi? by Puliyur Balu - Puliyoor Balu - Pulioor Baalu - Jathagam Parpadhu Epadi - Jaatagam Paarpathu Eppati - Jaadhagam Parpathu Eppade - Jadhagam Paarpathu Eppadi - Jaadagam Parpadu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 277
₹20.00
ஜோதிட கட்டுரைகள்/ ஜோதிட நூல்.
 
காகித அட்டை / பேப்பர்பேக்;
64 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
படிக்கக்கூடிய எழுத்துரு; 
முதல் பதிப்பு: செப்டம்பர் 1990;
ஐந்தாம் பதிப்பு: ஜூலை 2011. 
 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஜோதிட மும்மணிகள்!
அந்த நாள் முதல்... இந்த நாள் வரை ஜோதிடம்!!
பிரச்னை ஆரூடம்!!!
 
ஜோதிடர் மற்றும் ஜோதிட மாணவர்களுக்கான நூல்.  ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம்  பற்பல ஜோதிட நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
 
பதிப்புரை: 
ஜாதகம் பார்ப்பது எப்படி எனும் இந்நூலில் கலியுகம் தோன்றியது முதல் இந்நாள்வரை ஜோதிடத்தின் நிலையையும், ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஆருடமாக பழங்கள் சொல்வதெப்படி என்பது பற்றியும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் ஜாதகத்திற்கு சுலபமாக பலன் சொல்லும் வழியையும் இந்நூலில் சுருக்கமாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். 
 
ஆசிரியர் கடிதம்: 
அன்புடைய வாசக நேயர்களே!
 
இந்த நூலை நீங்கள் படிக்கத் தொடங்கும் முன் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 30 ஆண்டுகளாக ஜோதிடத் துறையில் நான் ஈடுபட்டிருந்தாலும் 17, 18 ஆண்டுகளாகத்தான் நல்ல காலம் பத்திரிகையின் மூலம் தமிழ்நாட்டில் பல அபிமானிகளுக்கும் அன்பர்களுக்கும் அறிமுகமானேன். பல ஜோதிடப் பத்திரிகைகள் திடீரென்று தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றன. நமது பத்திரிகை மட்டுமே ஜோதிட உலகில் இன்றும் மேலான இடத்திலிருந்து வருகிறது என்று சொன்னால், ஜோதிடம் நன்கு கற்றறிந்த மேதைகளும் ஓரளவு தெரிந்தவர்களும் மற்றும் ஜோதிட அபிமானிகளும் என்னைப் புகழ்ந்து பாராட்டி நமது "உங்கள் நல்ல காலம்" பத்திரிகையைத் தொடர்ந்து ஆதரித்து வந்ததே காரணமாகும்.
 
ஒரு ஜோதிடரின் வேலை ஜாதகம் பார்த்து பலன் சொல்வதோடு நிற்பதில்லை. ஜோதிடத்தில் அவரது ஆராய்ச்சி பல கோணங்களில் பளிச்சிட வேண்டும்.
 
எந்த ஒரு கலையும் ஒரு குறிப்பிட்ட அளவோட'நிற்பதில்லை. ஜோதிடமும் ஓர் ஆழ்கடலுக்கு ஒப்பானது என்று கூறுகிறார்கள். எனவே யாரும் கரைகாணாத அளவிற்கு ஒவ்வொரு கலையும் இருந்து கொண்டிருக்கிறது. சொல்லப் போனால் கலைமகளே இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்று சான்றோர்கள் கூறுவார்கள். மற்றும் "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு" என்ற பழமொழியும் நிலவி வருகிறது.
 
இவற்றைப் பார்க்கும் பொது ஜோதிடரின் பணி தான் ஜோதிடம் சொல்வதோடல்லாமல் பலருக்குத் தெரியும் வண்ணம் தெரிந்த அளவாவது நூல்களை வெளியிட வேண்டும். மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து கொண்டே போனால் ஜோதிடக் கலையிலும் பல முத்துக்களை நாம் தோண்டி எடுக்கலாம். எனவே ஜோதிடர்கள் ஓரளவுடன் நிறுத்திக் கொள்ளாமல் இக்கலை பலருக்கும் பயன்படும் வண்ணம் நூல்களையும் வெளியிட வேண்டும்.
 
அந்த அடிப்படையில்தான் நமது பத்திரிகை தொடர்ந்து நடந்து கொண்டுவரும் நேரத்திலேயே நம்மால் முடிந்த அளவு நமக்குத் தெரிந்த வரையில் இதுவரை சுமார் 20 நூல்களை வெளியிட்டுள்ளோம். அவற்றில் ஆரம்பகாலத்தில் நாம் வெளியிட்ட நூல்கள் இப்போது கிடைப்பதில்லை.
 
பாரதி பதிப்பகத்தாரும் நமது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்நூல்களையெல்லாம் ஜோதிடம் தெரியாதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளவும், தெரிந்தவர்கள் இன்னும் நூலைப் படித்து அபி விருத்தி அடையவும் எழுதியிருக்கின்றோம். நாம் எழுதிய நூல்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கடல் கடந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
 
இப்போது எழுதிய இந்த ஜோதிட மும்மணிகள் அடங்கிய நூல் எந்தவித கணிதமுறையையும் புகுத்தாமல் ஜாதகத்தைப் பார்த்து சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் வகையில் பலன்களைத் தொகுத்திருக்கின்றோம். ஜாதகம் இல்லாதவர்களுக்கும் 'பிரச்னா ரூடம்' மூலமாகக் குறிப்பிட்ட பலன்களைச் சொல்லும் முறையை விளக்கியிருக்கின்றோம். மேலும் கலியுகம் தோன்றியது முதல் சமீப காலம் வரையில் ஜோதிடத்தைக் கையாண்டவர்கள் யார்யாரெனவும் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.
 
இராமாயணக் கதையிலே இலங்கைக்குப் பாலம்போட எல்லாம் கற்களைக் கொண்டு கொட்டி வந்தார்களென்றும், அந்த சமயத்தில் ஒரு சிறிய அணிலானது தெய்வ வடிவான இராமருக்குச் செய்யும் தொண்டாக நினைத்துத் தன்னாலான சிறு பொடிக் கற்களைக் கொண்டுபோய் அணைகட்ட போட்டது எனப் புராணிகர்கள் வர்ணிப்பார்கள். அதுபோல, ஆழ்கடலுக்கொப்பான ஜோதிடத்துக்கு நம்மாலான சிறிய தொண்டுகளை, இம்மாதிரியான நூல்களை வெளியிட்டுக் கொண்டு வருவதின் மூலம் செய்துவருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
 
- புலியூர் பாலு.
 
ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.   
More Information
SKU Code Bharti B 277
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு - Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் - Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஜாதகம் பார்ப்பது எப்படி? - புலியூர் பாலு - Jaathagam Paarpadhu Eppadi? by Puliyur Balu - Puliyoor Balu - Pulioor Baalu - Jathagam Parpadhu Epadi - Jaatagam Paarpathu Eppati - Jaadhagam Parpathu Eppade - Jadhagam Paarpathu Eppadi - Jaadagam Parpadu

Similar Category Products