Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஜோதிட பாடம் பாகம் 3 - புலியூர் பாலு Jothida Paadam Paagam 3 by Puliyur Balu - Jotida Padam Pagam 3 - Puliyoor Balu - Jodhida Paatam Paagham - Pulioor Baalu - Jodhida Patam Pagham

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 271
₹70.00

ஜோதிட நூல்.

காகித அட்டை; 

176 பக்கங்கள்; 

படிக்கக்கூடிய எழுத்துரு; 

முதல் பதிப்பு: அக்டோபர் 1988; 

ஆறாம் பதிப்பு: ஜனவரி 2018.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

முன்னுரை: வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் கோள்களுக்கும் பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கும் ஏற்படும் தொடர்பு எத்தகையது என விளக்குவது ஜோதிட சாஸ்திரமாகும்.
 
முற்கால முனிவர்கள் உலக நன்மையைக் கருதி, முன்கூட்டியே சில நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றிற்கு தகுந்தாற்போல் இயங்க வேண்டும் என்ற காரணத்தால், கோள்களால் ஏற்படும் பலன்களை அறிய முற்பட்டார்கள். அத்தகைய முனிவர்கள் பதினெட்டு பேர்களாகும். பதினெட்டு பேர்களும் இந்தியாவிலேயே தோன்றியவர்கள் அல்ல. வேறு நாட்டில் தோன்றிய முனிவர்களும் இருந்திருக்கிறார்கள்.
 
ஜோதிடத்திற்கு ஆதாரமாக வான சாஸ்திரம் பயன்பட்டது. அந்த வான சாஸ்திரமும் விஞ்ஞான அடிப்படையானதுதான். மகான்கள் அடிப்படையானதுதான். மகான்கள், வானசாஸ்திரத்தை சித்தாந்தம் என்றும், ஜோதிடத்தை கணிதம் என்றும் இரண்டு வகையாகப் பிரித்து கையாண்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால் வந்தவர் வராகமிகிரர் ஆவார். இவர் வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் இரண்டையும் இயற்றியவராவார். பொதுவாக அக்கால ஜோதிடர்களுக்கு வானசாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் இரண்டுமே தெரிந்திருக்கும். எனவேதான் அவர்களால் கிரக பலன்களை துல்லியமாக எடுத்துக் கூற முடிந்தது.
 
அப்படியானால், இக்கால ஜோதிடர்களுக்கு வான சாஸ்திரம் தெரியாதென்பதால் கிரக பலன்களை துல்லியமாக கூற முடியாது என்பது அர்த்தமா?
 
இது உண்மை என்றால், இக்கால வான சாஸ்திரிகளுக்கு ஏன் ஜோதிடம் தெரியவில்லை என்று யாரும் கேட்கமாட்டார்களா? ஏனெனில் வான சாஸ்திரம் தனியாகவும் ஜோதிட சாஸ்திரம் தனியாகவும் இப்பொழுது இயங்கி வருகிறது.
 
இக்கால ஜோதிடர்களும், கணித வகைகளை மெருகுபடுத்திக் காட்டுகிறார்கள் என்பது வாஸ்தவம்தான். ஒரு கிரகத்தின் தன்மையை பலன் ஏற்படுத்தி அறியவேண்டுமானால் அந்த கிரகத்தின் தன்மையை இருபத்திநான்கு வகையில் அலசி ஆராய்ந்து பார்த்துதான் பலன் சொல்லவேண்டும். அப்படி பார்ப்பதற்கு கணிதம் நன்றாக வழிவகுத்து கொடுக்கிறது. இவ்வளவு கணிதம் செய்த பிறகும் ஜோதிடர்கள் ராசி சக்கரம், அம்ச சக்கரம் இவைகளைக் கொண்டே பலன் சொல்லி வருவதைப் பார்க்கின்றோம்.
 
"உங்கள் நல்ல காலம்" என்னும் ஜோதிட வாரப் பத்திரிகையை ஆரம்பித்து மற்ற எல்லா ஜோதிடப் பத்திரிகைகளையும் வீழ்த்தி வீர நடை போட்டு பவனி வந்ததை ஜோதிட அன்பர்கள் நன்கு அறிவார்கள். 
 
கணித முறைப்படி லக்ன ஸ்புடம், கிரக ஸ்புடம், படிவ ஸ்புடம் முதலியவற்றை எப்படி செய்வதென்று நாம் ஏற்கெனவே ஜோதிட பாடம் முதல் பக்கத்தில் விளக்கியுள்ளோம். ஜோதிட பாடம் இரண்டாம் பாகம் "லக்ன பலன்" என்ற தலைப்பில் நாம் எழுதி வெளிவந்துள்ளது. ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் அவர்களின் நடை, உடை, பாவனை, குணம், செய்கை, குடும்ப நிலை, பொருளாதார நிலை, தொழில் அபிவிருத்தி முதலியவற்றை துல்லியமாக எடுத்துக் காட்டும் நூல் இது. இப்போது ஜோதிட பாடம் மூன்றாம் பாகம் என்னும் இந்த நூலிலிருந்து ஒரு ஜாதகத்தில் கிரகங்கள், ஆதிபத்திய ரீதியாகவும், நைசர்கிரக ரீதியாகவும், எந்தெந்த இடத்தில இருந்தால் எப்படிப்பட்ட பலனை வழங்கும் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம். நாம் எழுதியுள்ள ஜோதிட பால பாடம் முதல் இந்த மூன்று பாகங்களையும் வாங்கிப் படிப்பவர்கள் ஜாதகப் பலனை நன்றாகவே சொல்ல முடியும்.
 
இந்நூலை வெளியிடும் பாரதி பதிப்பகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
- புலியூர் பாலு. 
 
ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.
More Information
SKU Code Bharti B 271
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு - Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஜோதிட பாடம் பாகம் 3 - புலியூர் பாலு Jothida Paadam Paagam 3 by Puliyur Balu - Jotida Padam Pagam 3 - Puliyoor Balu - Jodhida Paatam Paagham - Pulioor Baalu - Jodhida Patam Pagham

Similar Category Products