Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நட்சத்திர பாத பலன்களும், அஷ்டவர்க்க விளக்கமும் - புலியூர் பாலு Natchathira Paadha Palangalum, Ashtavarkka Vilakkamum by Puliyur Balu - Puliyoor Balu - Pulioor Baalu - Natchatira Padha Palankalum Ashtavarka Vilakamum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 278
₹9.00
ஜோதிட புத்தகம். 
 
காகித அட்டை (Paperback); 
48 பக்கங்கள்;
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);
முதல் பதிப்பு: டிசம்பர் 1996; 
பாரதி பதிப்பகம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஜோதிடர் மற்றும் ஜோதிட மாணவர்களுக்கான நூல். நட்சத்திர பாத பலன்களும், அஷ்டவர்க்க விளக்கமும் குறித்த  அடிப்படை மற்றும் பற்பல ஜோதிட நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
 
ஆசிரியர் கடிதம்: 

ஜோதிட நூல்கள் பல எழுதியிருக்கிறேன். எத்தனை எழுதினாலும் மாளாது. எழுதிக் கொண்டேயிருக்கலாம். முற்காலத்தில் இரண்டு மூன்று ஜோதிட நூல்களை கையில் வைத்துக் கொண்டு பிரமாதமாகப் பலன் சொன்னவர்களுமுண்டு.

அதிக நூல்களை படித்த பிறகும் சொல்ல முடியாதவர்களுமுண்டு. நான் சிறுவனாகயிருக்கும் போது ஜோதிட நூல்களாகப் பலவற்றை எழுதியவர்களையும் பார்த்து பேசியிருக்கிறேன். அவர்களெல்லாம் ஜோதிட நூல்களை எழுதுவதிலேயே பெருமை பெற்றிருந்தார்கள்.ஜோதிடம் யாருக்கும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சொல்லமாட்டார்கள்.

நூல்கள் எழுதுவதிலுள்ள பெருமை, புகழ், கௌரவம், ஜோதிடம் சொல்வதில்லையென்று உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் ஜோதிட நூல்களை எழுதி வெளியிடுவதால் அவர்களுக்கு நஷ்டமே ஏற்பட்டது என்றாலும் அவர்களது ஜோதிட நூல்கள் மிகப் பிரமாதமான கணித வகைகளைக் கொண்டது. அதை உணர்ந்தவர்கள்தான் அதன் சிறப்பை உணர முடியும். ஜோதிடம் நன்றாகச் சொல்லி அதன் மூலம் பணம் பெற்றவர்கள் நூல்களை எழுத முன்வரவில்லை.

நானும் ஜோதிடம் தெரிய வந்த நாள் முதல் நூல்களை எழுத வேண்டுமென்றுதான் எண்ணினேனே தவிர, ஜோதிடம் சொல்லிப் பணம் பண்ண வேண்டுமென்கிற எண்ணமே எனக்கிருந்ததில்லை. எழுதுவதற்கும் ஆதாரம் வேண்டுமே. இவன் நூலில் நல்ல கருத்துகளிருக்குமென்று எண்ணி பலர் வாங்க வேண்டுமானால் என் திறமை எந்தளவு என்று மற்றவர்கள் தெரிந்து வாரப் பத்திரிகையில் எழுத வேண்டும். ஜோதிட வாரப் பத்திரிகையென்றால் ராசிபலன் மட்டும் வெளியிட்டு வந்தால் பத்தாதுஅதுதான் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் வருகிறதே!

ஆகவே, உங்கள் நல்ல காலம் என்று வாரப்பத்திரிகையை ஆரம்பித்தேன். அதில் ஜோதிட கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து ராசிபலன் சாதாரணமாக எழுதி வந்தேன். பத்திரிக்கை நன்றாக விற்றுக் கொண்டு வந்தது. இப்போதும் நன்றாக விற்பனையாகிக்  கொண்டு தான் வருகிறது. துர்திருஷ்டவசமாக இந்த மாதிரி பத்திரிகைகள் பல ஒரே சமயம் தோன்றி விட்டன. அதில் தவறு ஒன்றுமில்லை. யார் வேண்டுமானாலும் நடத்தலாம்தான். ஆனால் இதில் விளம்பரமாகப் பயன் படுத்தி ஜோதிடம் சொல்வதற்கு அதிகம் நாட்டம் காட்டினார்கள். நல்ல ஜோதிட நூல்களாக எழுத வேண்டும் என்கிற என் கருத்து பாதிப்படையத் தொடங்கின. இருந்தும் எனக்கு ஜோதிடம் சொல்வதும் அதில் பணம் பண்ண வேண்டும் என்கிற நோக்கம் \இல்லாததால் ஜோதிடம் சொல்வதில்லை. பத்திரிகை நடத்துவேன். நூல்களை எழுதுவேன். என்னிடம் வராதீர்கள் என்று பலமுறை பத்திரிகையில் எழுதியும் யாரும் கேட்கவில்லை. சொல்ல ஆரம்பித்தேன். சிலருக்கு மட்டுமே. அதனால் தான் குறைந்த அளவில் சில ஜோதிட நூல்களாவது எழுத முடிந்தது. நூல்களை எழுதி, ஆராய்ச்சி என்று வந்து விட்டால், முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் ஜோதிடமே ஓர் ஆழ் கடலுக்குகொப்பானது என்று சொல்லி விடுகிறார்கள். அதைத் தோண்டத் தோண்ட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

இப்போது நமக்கு கிடைத்த முத்துக்களை எடுத்து இந்த நூலை மாலையாகத் தொடுத்து இருக்கிறேன். இதையெல்லாம் கூட ஜோதிடத்தில் ஒரு அங்கமே தவிர முடிவல்ல. பல வருடங்களுக்கு முன்னால் சென்னை ஓரியண்டல் மேனுஸ்கிரிப்ட் லைப்ரரியில் சில நாட்கள் உட்கார்ந்து பார்த்து இதில் காணப்படும் 48 பாடல்களையும் எழுதியுள்ளேன். அதற்கு உரையாசிரியராக நான் பொறுப்பேற்று இதனுடன் சில முக்கியமானவற்றையும் எழுதியுள்ளேன்.

108 நட்சத்திரப் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் துண்டு துண்டாகப் பலன்கள் கிடைத்து இருக்கிறது. நான் ஜோதிட நூல்கள் எழுதி வெகு நாட்களாகி விட்டதால் இதை எழுதி இருக்கிறேன். என் மற்ற ஜோதிட நூல்களை வெளியிடுவது போல் இதையும் பாரதி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புலியூர் பாலு 

சென்னை.

ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.   
More Information
SKU Code Bharti B 278
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு - Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் - Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:நட்சத்திர பாத பலன்களும், அஷ்டவர்க்க விளக்கமும் - புலியூர் பாலு Natchathira Paadha Palangalum, Ashtavarkka Vilakkamum by Puliyur Balu - Puliyoor Balu - Pulioor Baalu - Natchatira Padha Palankalum Ashtavarka Vilakamum

Similar Category Products