Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
TMN B 234
₹70.00
கட்டுரைத் தொடர்.
காகித அட்டை/ பேப்பர்பேக்;
64 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: செப்டம்பர், 2001;
ஆறாம் பதிப்பு: மார்ச், 2020.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
ஜீனோம் என்னும் இக்கட்டுரைத் தொடர் 'ஜூனியர் விகடன்' இதழில் வெளிவந்தது. அறிவியலை எளிமையாகத் தமிழில் எழுதும் முயற்சியில் என் உற்சாகம் குறைவதே இல்லை.
ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் திருமகள் நிலையத்தாருக்கும் அட்டையை சிறப்பாக வரைந்த திரு. நாணா அவர்களுக்கும் என் நன்றி.
- சுஜாதா.
'ஜீனோம்' என்னும் இந்தப் புத்தகம் மனித இனத்தின் பிறப்பணுவின் அமைப்பைக் கண்டறிந்த சாகசக் கதையையும், மனித குணங்கள் நம் மரபணுவில் எப்படிப் பொதிந்திருக்கின்றன என்பதையும், ஒரு கதைபோல் சுவையாகச் சொல்கிறது. இந்தப் புத்தகம் அறிவியலை எளிதாகச் சொல்ல தமிழ் மொழியில் தடையில்லை என்பதை மறுபடியும் நிருபித்துக் காட்டுகிறது.
டிஎன்ஏ என்னும் மரபணுவின் க்ரோமோசோம்களில் சிக்கலான கூட்டணுவில் ஆயிரமாயிரம் பிறப்புச் செய்திகள் பொதிந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. உலகின் பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஒத்துழைத்து நடத்திய Human Genome Project-ன் முதல் முடிவுகளிலேயே கிடைத்த ஆச்சரியங்களை வருணிக்கிறது இந்தப் புத்தகம்.
சுஜாதா ஒரு கணிப்பொறித்துறை சார்ந்த இன்ஜினியரும் எழுத்தாளருமாவார். இதுவரை அறிவியல் சார்ந்த இருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கடவுள் இருக்கிறாரா' என்னும் நூல் இவரது அண்மைக் காலத்து அறிவியல் நூல்.
எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன் )
தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக் கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன.
SKU Code | TMN B 234 |
---|---|
Weight in Kg | 0.010000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | சுஜாதா Sujatha |
Publisher Name | திருமகள் நிலையம் Thirumagal Nilayam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%