Details
அருணகிரிநாதர் புராணம். காதற்பெருமான்' நன்றாய் வந்திருக்கின்றது. உங்களுக்கே உரித்தான ஆரம்பம். மூன்றாவது அத்தியாய முடிவில் உங்களுக்கே உரிய வார்த்தைகள் (அந்த அனுபவம் அவனை வந்து வந்து தாக்கியது.)
சம்பவக் கோவை கடவுள் மனம் எண்ணம் இவைகளை தாண்டி ஐந்துவித உடலை வெகு எளிதாய் புரிய வைத்தது. 'சும்மா இரு' என்ற இரண்டு சொல்லை உதாரணத்துடன் கையாண்ட விதம்', எனப் பலது மனதை தொட்டன. "அரசனுக்கு நாக்கு இழுத்துக் கொண்டது. அவன் வலக்கையை உயரே தூக்கி இடக்கையை நெஞ்சின் அடியே வைத்து விநோதமாய் சப்தமெழுப்பினான். சிலர் குளிர்ஜுரம் வந்ததுபோல் நடுங்கினார்கள். மறுபடியும் "அதல சேடனார் ஆட" என்று அருணகிரிநாதர் பாட கூட்டமும் அவரோடு பாடியது."