Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kundrimani - குன்றிமணி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 098
₹120.00
புதினம்
பக்கம் : 240
பதிப்பு : 2
வெளியீட்டு ஆண்டு : 2010

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
"நிசும்ப சூதனி என்றவொரு சிற்பம். தஞ்சையை ஆண்ட விஜயாலய சோழன் என்ற மன்னர் செய்தது. உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் காலத்தில் பல நிவந்தங்கள் விட்டு மிகப் ப்ரசித்தமாய்  வளர்க்கப்பட்டது. அழகுதானே நாம் ஆராதிப்பது. அந்த அழகு என்ற விஷயத்துக்கு எதிப்பதமாய் கோரமான உருவமாக இருந்தது. கோரமும் மிக யதார்த்தமாக இருந்தது. ஒரு சிற்பியினுடைய எண்ணம் என்னவாக இருக்கும். எதற்காக இப்படியொரு கோர உருவத்தைத் தெய்வமாகச் சிருஷ்டித்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்க எனக்கொன்று புலப்பட்டது. எதை அழகு என்று சொல்கிறாயோ அதுவே வேறொரு ரூபமெடுத்து உன் எதிரே வந்து உன்னைப் பயமுறுத்தும். எதை உயர்வு என்று சொல்கிறாயோ அதுவே தாழ்ச்சி என்றும் மயங்க வைக்கும்." 

"போர் என்பது என்ன? ஒரு கொலைத் தொழில். ஒருவரையொருவர் வெட்டிக் கொல்வது. படுகாயப்படுத்துவது. ஊர்கள் எரிப்பது. பெண்டிரையும் குழந்தையையும் கவர்ந்து வந்து தனியே வேளம்  அமைத்து இனிமேல் நீ எனக்குச் சொந்தம் என்று உறுமுவது. ஒரு பக்கம் இதனைக் கோரரூபம் காட்டுகிற போர், அந்நியர் வந்து ஆக்ரமிக்கிற பொழுது தடுத்தி நிறுத்தி ஓடஓட விரட்டுகின்ற நல்லதும் இருக்கிறதே. இந்த உலகம் இரட்டைகளின் பிறப்பிடம். எல்லாமுமே இரண்டாக இருக்கின்ற இடம்." "மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை."

"அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்."

"உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை."
More Information
SKU Code TMN B 098
Weight in Kg 0.070000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Kundrimani - குன்றிமணி

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran