Details
"ஜனனமும், மரணமும், நல்லதும், கெட்டதும், உயர்வும், தாழ்வும் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் வந்து, வாழ்க்கையை உலுக்குவது பற்றி யாராவது சொல்லித் தரவேண்டுமா?
என்ன இது, என்ன வாழ்க்கை என்று கேள்வி வரின் அதற்கு யாராவது பதில் சொல்ல வேண்டாமா?
தந்தையும், தாயும் போதுமா? குருகுலக் கல்வி இதற்கு தீர்வு காட்டுமா?
இல்லை. இவர்களுக்கும் அப்பால், இன்னும் மேலாக, யாராவது ஒருவர் இதை விளக்க வேண்டும். அப்படி விளக்குபவர் குரு.
இருட்டான அறியாமையில் இருந்து, வெளிச்சமான அறிவுக்கு அழைத்தும் போகிறவர் இவர் தான். குரு இருக்குமிடம் தான் பாகசாலை.