Details
பீஷ்மரின் கதை.
இதுவே உண்மை. இந்த உண்மையை வார்த்தையாகும் போது பலவீனமாகிறது. நான் சொல்லும் உண்மை மிகப் பெரியது. கடவுளைப் பற்றி அறிய யாரிடமும் கேட்காதே. எவரிடமும் கையேந்தாதே. உனக்கும் கடவுளுக்கும் இடையே யாரையும் அனுமதிக்காதே.
குள்ளமாய் குண்டாய் கருப்பாய் ஒளி பொருந்திய கண்களும் சிவந்த உதடுகளும் தாமரை போன்ற முகமும் உள்ள முனிவர் எனக்கு போதித்தார். அவர் தென்திசையில் பொதிகைமலை என்ற இடத்திலிருந்து வருகிறாராம். பெயர் அகத்தியராம். அவர் சொன்னது எனக்குப் புரிந்தது. அவர் பாதங்களில் விழுந்து விம்மி விம்மி அழுதேன்.