The story of Pazhaiyanoor Neeli in detail. Tamil Thriller Re-incarnation. Historical Novel.
Book Review:
'புருஷவதம்' உங்களுடைய மணிமகுடத்தில் இன்னொரு மரகதம். புவனபதிக்கு எல்லா திறமையும் இருந்தும் ஒரு அப்பாவி பெண்ணை முட்டாள்தனமாக கொன்றான். இவை மறு ஜென்மத்தில் அவனை அலற வைக்கின்றன. திருவாலங்காடு கோயில் பற்றியும் இப்புதினத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. "பழையனூர் நீலி கதை. புகழ் போதைக்கு அடிமையாகி அதற்கு விலையாக தன் சொந்த மனைவியின் கையால் மரணம் அடையும் மனிதனின் அவலத்தை ஒவ்வொரு வரியிலும், திகிலும், திருப்பமும் கலந்து சொல்லும் சுவாரஸ்யமான நெடுங்கதை. " "நீலி கதை பிடித்திருந்ததில் வியப்பு இல்லை.தன்னை ஏமாற்றிக் கொன்ற கணவனை பல பிறவிகள் கடந்தும் காத்திருந்து பழி தீர்த்துக் கொண்ட கதை. பாலகுமாரன் இந்த கதைப் பாடலை விரித்து அற்புதமாக எழுதி இருக்கிறார். அந்தக் கால செட்டிக்களின் வாழ்வு, காசி வாழ்க்கை, நிரஞ்சர்கள் என்ற கேடி சாதுக்களின் அட்டகாசங்கள், யாத்திரை செய்கிறவருக்கு அன்றிருந்த சிரமங்கள் எல்லாவற்றையும் விரிவாக எழுதி இருக்கிறார்."
பெண்களுக்கு செய்த கொடுமை எந்த ஜென்மத்திலும் விடாது - என்று எச்சரித்திருக்கிறீர்கள்.
படிப்பும், பணமும், மந்திரமும், தந்திரமும் உயர்குடிப் பேச்சும், உயர்குடிப் பிறப்பும், புலமையும் ஒரு நாலும் உன்னைக் காப்பாற்றாது என்று இடித்து உரைத்திருக்கிறீர்கள்.
இது வெறும் பேய்க்கதை இல்லை. பேய்க்கதையில் கூட பாடங்கள் நடத்தியிருக்கிறீர்கள். வாழ்க்கை பற்றி இடைவிடாது விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறீர்கள். ஒட்டுமொத்தமாய் படித்து முடிக்க, வேறு ஒரு உலகத்திற்கு போய் வந்தது போல் இருந்தது. பல நாட்கள் மனசுக்குள் இந்த பாத்திரங்கள் உலா வந்தன. -என்றும் அன்புடன் ரா. வேத நாராயணன். அண்ணா நகர். சென்னை.