Details
மதிப்போடு வணங்கப்பட்ட அந்த தெய்வ தாசிகள் வெறும் மாமிசப் பிண்டங்களாக மாற்றப்பட்டு விட்ட அவலம் என் விழியோரம் நீர்துளிர்க்க வைத்தது. அதையும் மீறி சில பெண்களை காலம் தன் பக்கங்களில் மறக்க முடியாத சித்திரமாய்ப் பதிந்து வைத்திருக்கிறது என்றால் அந்த பெண்மணிகள் எவ்வளவு உயர்வாய் வாழ்ந்திருக்க வேண்டும்?.
ஒரு செப்புப்பட்டயம் ஒரு தேவரடிய பெண்ணின் உயர்ந்த வாழ்கையை நாலு வரிகளில் தனக்குள் செதுக்கிக் கொண்டிருப்பதை இவர் விஸ்தாரமாய் விவரித்து எழுதியிருப்பது விழி உயர்த்தி நம்மை வியக்க வைக்கிறது.
"எத்தனை கோவில்கள் எத்தனை தெய்வங்கள் இருந்தும் ஏன் நம்மை கைவிட்டன? போன்ற கேள்விகளும் தெய்வ தாசி பெண்களின் பணிகளையும் கண்டு கண்மூடி அவர்களை வணங்க தோன்றியது. இவர்களின் பிரமாண்டங்களுக்கு மத்தியில் உலகில் வேறு ஏதும் உயர்வாகத் தெரியவில்லை.