Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தைப்பாவை - கவிஞர் கண்ணதாசன் - Thaipavai - Kavignar Kannadhasan - Thaipaavai - Taipavai - Taipaavai - Thai Paavai - Thai Pavai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 011
₹25.00

கண்ணதாசன் கவிதைகள்.

காகித உறை/ பேப்பர்பேக்; 

39 பக்கங்கள்;  

மொழி: தமிழ்; 

முதல் பத்தொன்பது பதிப்புகள்- வானதி பதிப்பகம்; 

கண்ணதாசன் பதிப்பகம் - முதற் பதிப்பு: மே 2013; 

கண்ணதாசன் பதிப்பகம் - இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 2016.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே தைப்பாவாய் என அழைத்துப் பாடியிருப்பார்.
 
தைத்திங்கள் முதல்நாளை தமிழர் திருநாள் என்று கொண்டாடும் தமிழர் இயல்பையும் திராவிட இயக்க கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழர் மரபு, வேளாண்மை, காதல் வாழ்வு, மூவேந்தர் மாண்பு உள்ளிட்ட பற்பல அம்சங்களைக் கொண்டு தைப்பாவை எனும் நூலை சுவைமிக்க கவிதைகளால் தொடுத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.
 
தைமகள் வருகையால் தமிழர்களுக்குரிய எல்லா மேன்மைகளும் கிட்டவேண்டும் என்றும் கன்னியருக்கு திருமணம் கைகூட வேண்டுமென்றும், மூவேந்தர் மாண்பு துலங்க வேண்டுமென்றும் பற்பல அம்சங்களை இந்நூல் பாடுகிறது.
 
“எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல் இடுவெங் களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய்; முன்னேற்றம் தான் தருவாய்
தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்”
 
இது தைப்பாவையின் முதல் பாடல். தமிழரின் வாழ்வியல்புகள் பலவற்றையும் சுட்டுகிறது.தைமகள் வருகையால் தமிழர் நலன் மேம்பட வேண்டும் எனும் வாழ்த்தையும் இப்பாடலில் கவியரசர் கூறுகிறார். காதல் கைகூடிய இணையரையும் தைப்பாவை காட்டுகிறது.காதல் கொண்ட தலைவனும் தலைவியும் நேர்பட சந்திக்கையில் நிகழ்பவற்றை நயமுடன் பாடுகிறார் கவியரசர்.
 
“வா என்றன இமைகள்; மண்நோக்கின விழிகள்
தா என்றன இதழ்கள்;தழுவென்றது மேனி
பார் என்றது பருவம் ;படை கொண்டது நாணம்;
நேர்கின்றது யாதோ..நிலை கொண்டது காதல்.
தேர்கொண்டொரு தெய்வம் தெரு வந்தது போலே
ஊர்கின்றவன் மனதில் உழல்கின்றது காமம்;
சீர்கொண்டவன் எதிரே சிலை கொண்டவள் வந்தாள்
யார் வென்றனர் அறிவாய்;அறிவாய தைப்பாவாய்” என்கிறார்.
- மரபின் மைந்தன் முத்தையா.
 
கவிஞர் குறித்து: கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 011
Weight in Kg 0.010000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184026849
Author Name கவிஞர் கண்ணதாசன் Kavignar Kannadhasan
Publisher Name கண்ணதாசன் பதிப்பகம் Kannadasan Pathippagam
Write Your Own Review
You're reviewing:தைப்பாவை - கவிஞர் கண்ணதாசன் - Thaipavai - Kavignar Kannadhasan - Thaipaavai - Taipavai - Taipaavai - Thai Paavai - Thai Pavai

Similar Category Products