வனவாசம் - கவிஞர் கண்ணதாசன் - Vanavasam - Vanavaasam - Kavignar Kannadasan
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
KP B 003
₹380.00
சுயசரிதை.
காகித அட்டை;
424 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முன்னர் 37 பதிப்புகள்;
முதற் பதிப்பு: ஆகஸ்டு 2010;
பதினைந்தாம் பதிப்பு: ஆகஸ்ட் 2021;
படிக்கக்கூடிய எழுத்துரு.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
முதற் பதிப்பின் முன்னுரை:
1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடந்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.
சில உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.
சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.
எனது மேன்மைகள் என்று நான் குறிப்பிடுபவற்றை நான் பயத்துடனே குறிப்பிட்டுள்ளேன்.
ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது, ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்கையுமல்ல இது.
வாழ்கை வழிபோக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல்.
இதனைப் படிக்கின்றவர்கள் என்னை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
சில ரசிகர்களுக்காக இந்தச் சரிதம் பலகாலம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தாலும் நான் வருந்தமாட்டேன்.
ஏனென்றால், என் காலத்துக்கு பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.
இதில் நான் 'வனவாசம்' என்று குறிப்பிடுவது ஓர் அரசியல் கட்சியில் நான் வாழ்ந்த வாழ்கையையே ஆகும்.
அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியதோடு வனவாசம் முடிந்து விடுகிறது.
அடுத்த பகுதியை 'மனவாசம்' என்ற தலைப்பில் எழுத நினைத்துள்ளேன்.
இந்த வனவாசத்தின் ஒரு பகுதி முதலில் தென்றலிலும் பிறகு இனமுழக்கத்திலும் வெளி வந்தது.
அந்த ஈடுகளுக்கும், அவற்றின் நிர்வாகிகளுக்கும் இதனை நூலாக வெளியிட்டவர்களுக்கும் எனது நன்றி.
- கண்ணதாசன்
04.09.1965.
புதிய முன்னுரை:
ஒரு சாதாரண மனிதனின் சுயசரிதம் இந்த அளவுக்குப் பரபரப்பாக விற்பனையாகும் என்று, நான் ஒருபோதும் கருதியதில்லை.
காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்த பின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது.
உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம் போல் ஆடையின்றிக் குளிக்க? ஆற்றில் குளிக்கும்போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது! அவமானத்துக்குப் பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகி விட்டது. என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னல் அதனை வெளியிட்டால், அது எனக்குச் செய்யும் உதவியாகவே இருக்கும்.
எழுதிகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான்.
ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமைய வேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக் கூடிய கலை அல்ல!
மீசை முளைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றி விட்டது.
'எப்படி வாழ வேண்டும்?' என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக்கூடாது!' என்பதற்கு இதுவே வழிகாட்டி.
- கண்ணதாசன்
26.04.1981
கண்ணதாசன வனவாசம்´ என்பது, கண்ணதாசனின் சுயசரிதை. அவர் வாழ்க்கையில் நடந்தையெல்லாம் அருமையாக எடுத்துச் சொல்லியிருப்பார். அதில் தான் அண்ணா, கருணாவின் நடத்தைகளையெல்லாம் புட்டுபுட்டு வைத்திருப்பார். வேறு யாராவது எழுதி இருந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் வந்திருக்காது. ´கிசு கிசு´ போல் பலவீனமாகி இருந்திருக்கும். ஆனால், கண்ணதாசன் தி.மு.க தலைவர்களின் நடத்தையை அம்பலப்படுத்திய போது சம்பந்தப்பட்டவர்களே வாயை திறக்கவில்லை என்பதோடு, கண்ணதாசன் தன்னுடைய நடத்தைகள் குறித்தும் பகிரங்கமாகவே எழுதியிருக்கிறார் கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார்.
'நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம். '
உள்ளே...
எனது பிள்ளைப் பருவம்;
பொருளடக்கம்:
01.மறக்க முடியாத சிரிப்பு;
02.சிந்தனை அலைகள்;
03.வேலை கிடைத்தது;
04.நினைக்காத உறவு;
05.இன்ப உலகம்;
06.முதல் கவிதை;
07.ஓர் எளிய பக்தன்;
08.மாறிய வடிவம்;
09.எதிர்பாராத வேதனை!;
10.நல்ல நண்பர்கள்;
11.மனப்போராட்டம்;
12.மயக்கத் துவக்கம்;
13.சண்டமாருதம்!;
14.புதிய உலகம்;
15.ஆசை அலைகள்;
16.புதிய கட்சி;
17.மன உறுதி;
18.பாட்டு எழுதினான்;
19.பயங்கர அனுபவம்;
20.நாராயணன் ஆனான்;
21.ஆசை! அச்சம்!;
22.பரிதாபத்திற்கு உரியவர்கள்;
23.அரசியல் பிரமுகர்;
24.அறிவு தரும் நூல்கள்;
25.புரட்சிக்காரன்;
26.கொதித்தெழுந்தான்;
27.கண் கலங்கினான்;
28.கல்கத்தா வாழ்க்கை;
29.இரண்டு இரண்டு! ;
30.போராட்டம்!;
31.கைதானான்;
32.தீர்ப்பு;
33.அது ஒரு தனி உலகம்!;
34.ஒருநாள் இரவு!;
35.விடுதலை;
36.தென்றல் பிறந்தது;
37.கூட்டுக்குரல்;
38.இலக்கிய உலகில் அவன்!;
39.கட்சி வாழ்க்கை;
40.திருச்சி மாநில மாநாடு;
41.தேர்தலும் - தேறுதலும்;
42.தூது வந்தனர்;
43.சோதனைகள்;
44.தேர்தல் முடிவு;
45.தயாரிப்பாளன் ஆனான்!;
46.மாநகர் மன்றத் தேர்தல்;
47.கணையாழியும் கசப்பும்;
48.இலங்கை வேந்தன்;
49.முடிவின் தொடக்கம்;
50.உட்கட்சிக் குழப்பம்;
51.கட்டுரையும் வெட்டுரையும்;
52.பொதுக்குழுவில் சதிக்குழு;
53.வன் செயற்குழு;
54.எதிர்பார்த்தபடியே;
55.நாடறியப் பிளவு;
56.அண்ணாதுரையின் அறிக்கை;
57.நடிகர்களால் குழப்பம்;
58.பாவமன்னிப்பு;
59.பெரும் பரபரப்பு;
60.கழக மரியாதை;
61.காவலர் கூட்டம்;
62.நடக்காத கூட்டங்கள்;
63.விடுதலை தந்த ஏப்ரல் ஒன்பது!;
64.பத்தாண்டு வனவாசம் முடிவு.
ஆசிரியர் குறித்து:- கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
SKU Code | KP B 003 |
---|---|
Weight in Kg | 0.090000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9788184026122 |
Author Name | கவிஞர் கண்ணதாசன் Kavignar Kannadhasan |
Publisher Name | கண்ணதாசன் பதிப்பகம் Kannadasan Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%