Details
பதிப்பாளர் எழுத்தாளர் உறவு கணவன், மனைவி உறவு போல புனிதமானது சிறிதளவு கூட சந்தேகம் வரக்கூடாத உறவு இது.
திருமகள் நிலையம் சார்ந்த விசா பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் திரு திருப்பதிக்கும் எனக்கும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலான நல்லுறவு நீடித்து வருகிறது. இது குருவருள்.
புத்தகம் நல்லா விக்குது என்ற மனமாரச்சொல்லத் தயங்காத பதிப்பாளர் இவர். இப்படி ஒரு நாவல் எழுதுங்கள். அப்படி ஒரு கட்டுரைத்தொகுப்பு செய்யுங்கள் என்று இடைவிடாது ஆலோசனை சொல்பவர். எனக்கு எல்லாவிதமாகவும் பக்கபலமாய் இருப்பவர்.
என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன்.
"பதிப்பகம் நடத்தும் அண்ணன். அவனுக்கேற்ற மனைவி வருகிறாள். தங்கை பொறாமையால் துடிக்கிறாள். "