Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

விரும்பிச் சொன்ன பொய்கள் - சுஜாதா - Virumbi Sonna Poikal - Sujatha - Virumbichonna Poigal - Virumbhi Chonna Poighal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 251
₹60.00
மர்ம புதினம்/ மர்ம நாவல்.
 
காகித அட்டை/ பேப்பர்பேக்; 
80 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
நான்காம் பதிப்பு: மார்ச், 2013; 
ஐந்தாம் பதிப்பு: மார்ச், 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்கிறது. அன்றைய இரவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ராதா மந்தாகினியின் மேல் பைத்தியமாகிறான். மந்தாகினி விடைபெற்றுச் செல்லும்போது ராதாவின் நினைவாக அவனது அம்பைப் பெற்றுச் செல்கிறாள். அதன் பின் அவள் சென்னையில் இறந்துபோகிறாள். அவள் மார்பில் ரத்தப் பிரவாகமாக செருகிக் கிடப்பது ராதாவின் அம்பு. மந்தாகினி கொலை செய்யப்பட்டாளா அல்லது மிகத் தீவிரமாக மரணத்தை நேசித்தவள் தற்கொலை செய்து கொண்டாளா? 
 
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-* 
 
1987-ல் 'குங்குமச் சிமிழ்' இதழுக்காக எழுதப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்தும் சுவாரஸ்யமான கதைகளுக்கு செலாவணி இருப்பது என் போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருகிறது.
 
இந்த நாவல் இறுதியில் ஒரு 'ஆம்' 'இல்லை' என்ற வார்த்தையின் தேர்வில் வந்து கதை முடிகிறது. வாசகர்களிடம் முடிவை விட்டுவிடுவது எனக்குப் பிடித்த உத்திகளில் ஒன்று.
 
சுஜாதா 
மே-2004
சென்னை. 
 
எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன்)
 
தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக்  கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக  ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன. 
More Information
SKU Code TMN B 251
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சுஜாதா Sujatha
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:விரும்பிச் சொன்ன பொய்கள் - சுஜாதா - Virumbi Sonna Poikal - Sujatha - Virumbichonna Poigal - Virumbhi Chonna Poighal

Similar Category Products