யோகா & செக்ஸ் - ஆசனா இரா. ஆண்டியப்பன் Yoga & Sex by Asana R Aandiappan
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Bharti B 223
₹80.00
யோகாசனம் புத்தகம்.
காகித அட்டை;
168 பக்கங்கள்;
முதல் பதிப்பு: டிசம்பர் 1989;
நான்காவது பதிப்பு: நவம்பர் 2018.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இல்லறம் இனிக்கவும், தாம்பத்ய உறவில் முழுமை பெறவும் வழி கூறும் நூல்.
முன்னுரை:
பால் உறவைப் பற்றி யோகாப்பியாசத்தின் நிலை என்ன என்று அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அநேகமாக மனிதர்களிடம் ஒரு தவறான அபிப்ராயம் நிலவி வருகிறது. பால் உறவை அடக்குவதற்கும் துறவைத் திணிப்பதற்கும் யோகாப்பியாசம் தூண்டுகிறது என்று கூறப்படுகிறது. இது அப்படியல்ல. யோகாப்பியாசம் மற்ற எந்த முறையைக் காட்டிலும் அல்லது விஞ்ஞானம் அல்லது மதத்தைக் காட்டிலும் பாலுறவைப் பற்றி அதிகமாகச் சொல்கிறது. பாலுறவின் ஆன்மீக மனக்கிளர்ச்சி நிலைகளை மாத்திரம் இல்லாமல் உடம்பு நிலையைப் பற்றியும் விரிவாக யோகாப்பியாசம் சொல்லுகிறது.
குண்டலினி என்று சொல்லப்பட்ட வல்லமையுள்ள மின்சார சக்தியுடன் பாலுறவு நெருங்கி சம்பந்தப்பட்டிருக்கின்றதென்று யோகிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எல்லா மனிதரிடத்திலும் உறங்கிய நிலையில் இருக்கும் இந்த முக்கியமான சக்தியை யோகாப்பியாசத்தின் முறைகளால் எழுப்பலாம். அப்படி எழுப்பப்படும் பொழுது குண்டலினி மிகவும் சக்திவாய்ந்த சில உணர்ச்சிகளைத் திறந்து விடுகிறது. அவ்வுணர்ச்சிகள் மனிதனிடத்தில் ஏற்பட்டதும் அவன் யோகாப்பியாசத்தின் முறைகளால் பயிற்சி பெற்று, ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டும். இல்லையெனில் அவனுக்கு அவை அதிகக் கேடுகளை விளைவிக்கும். யோகிகள் தங்களுடைய பால் உறவு உணர்ச்சிகளை மனோதத்துவ வழிகளிலும் உன்னதமான சக்திகளிலும் செலுத்த சில வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால்தான் ஒரு யோகி தன்னுடைய பாலுறவு உணர்ச்சிகளை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். இந்த மாறுதல் இல்லாவிடில் துறவின் முக்கியம் அழிந்து விடுகிறது. பாலுறவு உணர்ச்சிகளை வேறு வழிகளில் செலுத்தாமலும் அல்லது நியாயமான முறைகளில் செலுத்தாமல் இருந்தால் அவற்றை அடக்குவது கடினம். அங்ஙனம் அடக்காததால் அடிக்கடி மனிதன் மற்றவர்களைக் கொடிய முறையில் துன்புறுத்தவோ, அப்படி துன்புறுத்தி சந்தோஷம் அடையவோ, சாதாரணமான விஷயங்களைச் செய்யத் தூண்டுகிற விஷயமோ பலருக்குத் தெரிந்ததே.
தாம்பத்திய வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, பாலுறவைப் பற்றி யோகா சொல்லியிருக்கிற சில விதிகளின் மூலமாக யோகாப்பியாசத்தைப் பின்பற்றுபவர்களின் மேல் பிரம்மச்சரியத்தை திணிக்கவில்லை என்று சந்தேகமில்லாமல் தெரிகிறது. விதிகளில் மிகவும் முக்கியமானது நமது தேகத்தை உள்ளும், வெளியிலும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது. உதாரணமாக மலச்சிக்கல் அசுத்தமாகக் கருதப்படுகிறது. அதே மாதிரியாக ஸ்திரீகளின் மாதவிடாய் நேரங்களில் பாலுறவைக் கொண்டாடுவது அசுத்தமாகக் கருதப்படும். மேலும் பாலுறவின் உணர்ச்சிகளின் அவசியப்படாத, சுத்தமான மனது தேவை என்று யோகப் பயிற்சிகளால் பரிந்து பேசப்படுகிறது. குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும், யௌவனப் பருவத்திலும் பாலுறவைப் பற்றி முக்கியமான விஷயங்களை போதித்தால் சுத்தமான மனதை அடைய வழி இருக்கிறது. பையனை வளர்ப்பதில் அன்பு (love) என்ற கலையைப் பற்றி விவரமாக தகவல்களை அவனுக்கு சொல்லிக் கொடுப்பதில் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. தெய்வத் தன்மையுள்ள ஆனந்தத்தை நன்கு புரிந்து கொள்ளுவதால் உண்டான சக்தியைக் கடவுளுடைய வெகுமதியாகப் பாலுறவைக் கருதும்படி யோகம் அவனுக்குப் போதிக்கிறது. சிஷ்யனாக இருக்கும் காலத்தில் ஆன்மீக குருவாகவும், வழிகாட்டியாகவும் உள்ள அவனுடைய ஆசிரியரால் விதிக்கப்பட்ட கண்டிப்பான விதிகளுக்குக் கட்டுப்பட்டு பிரம்மச்சரியத்தைக் கட்டுப்படுத்துகிறான். அவனுடைய குருகுலவாசம் முடிந்தவுடன் அவன் கல்யாணம் செய்து கொண்டு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு விட்டு யோகாப்பியாசி ஆகிறான். மேலும் சந்நியாசி ஆக விரும்பினால் அவனுடைய பாலுணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தவில்லை. ஏனென்றால் அவன் அவ்வுணர்ச்சிகளை வேறு வழிகளில், அதாவது மனோஞான வழிகளில் புகுத்தி விடுகிறான். இந்த Transmutation மாற்று வழிகளில் அவ்வுணர்ச்சிகளைப் புகுத்துவது யோகியை பலமற்றவனாகச் செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக அவனுடைய மானிட சக்தியும் ஆத்மீக பலமும், சில அப்பியாசங்களைப்
பழகுவதினால் பலமடைகின்றன.
- இரா. ஆண்டியப்பன்.
பொருளடக்கம்:
01. பாலுணர்வும் யோகாசனமும்;
02.இன்ப வாழ்வளிக்கும் யோகமும் போகமும்;
03.யோகம் போகத்திற்கு எப்படி உதவும்?;
04.பாலுணர்வின் முதிர்ச்சி;
05.கல்வியியலில் பூரணத்துவம் அடைவது எப்படி ?;
06.ஆனந்தமயமான ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமா?;
07.கோயில் சிலைகளில் உடலுறவுக் காட்சி ஏன்?;
08.யோகாசனங்கள் பயிலும் போது ஆசனங்களைத் தேர்வு செய்யும் முறை;
09.ஆசனங்களின் வகைகள்;
10.சூரிய நமஸ்காரம்;
11.யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை;
12.யோகத்திற்கும் பாலுணர்விற்கும் இடையேயுள்ள உறவு;
13.யோகமும் பாலுணர்விலுள்ள முறையற்ற செயல்களும்;
14.யோகமும் போகமும்;
15.பாலுணர்வின் உடற்கூறும் உடல் தத்துவத்தின் முன்னேற்றமும்;
16.அமைப்பும் - பாலுணர்வும்;
17.பாலுணர்வில் தணிப்பதின் அவசியம்;
18.கலவிக்கு முன் விந்து வெளியாதல் பற்றிய தவறான கருத்துகள்;
19.பாலுணர்வும் இதய நோய்களும்;
20.யோகமும், கமமூட்டும் செயல்களும்;
21.யோகமும், போதைப் பொருள்களும்;
22.யோகமும், அகந்தையும், பழக்க வழக்கமும், அவற்றின் சம்பந்தங்களும்;
23.யோகாசனம் பற்றிய சில சந்தேக விளக்கங்கள்;
24.பிராணாயாமமும் - செக்ஸும்;
25.சந்தானத்தைக் கோரிய போக நெறி;
26.மிதச் சேர்க்கை;
27.வரை கடந்த சேர்க்கையால் வரும் கெடுதி;
28.சேர்க்கைக்குத் தகாதவர்கள்;
29.சம்போக காலத்தில் சந்திரகலை சூரியகலை பாயும் சம்யோசித பலாபலன்;
30.சம்சார வாழ்க்கையின் சுக அனுபோக முறைகள்;
31.போகத்திற்கு உதவும் யோகம்;
32.உடல் உறவு முறைகள் பற்றிய கோயில் சிற்பங்கள்.
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசனா ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.
SKU Code | Bharti B 223 |
---|---|
Weight in Kg | 0.150000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | ஆசனா இரா. ஆண்டியப்பன் Asana R Aandiappan |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%