Details
Avani, a historical about Raja Raja II.
"ஒட்டக்கூத்தர் அவளை ஒரு கோவிலுக்கு அழைத்துப் போனார். சக்ராயி என்று அந்த அம்மனுக்கு பெயர். அம்மன் மட்டுமே இருக்கின்ற கோவில். அம்மன் முகத்திற்க்கு கீழே துணியால் மறைக்கப்பட்டிருந்தது. சிகப்பு துணி போடப்பட்டிருந்தது. அவனியை தவிர, மற்ற எல்லோரையும் வெளியே போகச் சொல்லி விட்டு ஒட்டக்கூத்தர் பூசாரியை அம்மனின் ஆடையை அவிழ்க்கச் சொன்னார். ஒரு பெண்கால் அகட்டிபடுத்துக் கொண்டிருக்கிறாள் முன்னே அவளுடைய யோனியும், பிறகு பருத்த வயிறும், பிறகு தடித்த முலைகளும் அதற்கு பிறகு அரைவட்டமாக முகமும்படுத்தவாக்கில் இருக்கின்ற ஒரு பெண்ணை சிற்பமாக காட்டினார். ஒரு கர்ப்பிணிப் பெண் பிள்ளைப்பேறுக்கு தயாராகபடுத்திருக்கிறாள். அவளுக்காக இந்த உலகம் காத்திருக்கிறது.
அவள் கண்களை மூடி கொண்டிருக்கிறாள் தன் குழந்தையைதான் முதலில் பார்க்காது வேறு எவரேனும் முதலில் பார்க்கவேண்டும்." "இரண்டாம் இராஜராஜனுக்கு தயாராகி விட்டேன். படித்ததும் பார்த்து அனுபவித்ததும் ததும்பி நிற்கின்றன. அவனி என்னு பெயர் வைத்திருக்கிறேன். அவனி என்றால் உலகம்.அவளுக்கு அவனி முழுதுடையாள் என்று பெயர்.
அவள் இரண்டாம் இராஜராஜனின் இரண்டாம் மனைவி. இலக்கியவாதி. அவன் அரசன் முத்தமிழ் காவலன். இன்று வியக்கவைக்கும் அத் தாராசுரம் உருவாக அவளே காரணம்.அவள் மலையமான் வம்சம். சோழர்களை எதிர்த்து பாரி மகளிருவரை மணந்தவர் மலையமான். களம் மிக மிகப் பெரிது. ஏகப்பட்ட சம்பவங்கள். அவனிபோரே இல்லாத காலம் அது. சிறிய முறைப்புககெல்லாம் பெரும் போர் சோழர்கள் மேற்கொள்வார்கள. சோழரைப் இழித்துப்பேசியவர்களைக் கடுமையாய் தண்டிப்பார்கள் ஆனால் இரண்டாம் இராராஜன் காலத்தில் பெரும் போர்கள இல்லை. காவிரியை திசை திருப்பி தஞ்சைப்பக்கம் வராது செய்தது உடனே சிதறடிக்கப்பட்டதுவணிகர் மிக முக்யம். ஆனால் உழவு அதைவிட முக்யமில்லையா. சோழ வம்சத்தின் ஆனந்தமான காலம் இது.