மனவளமான சமுதாயம் - எரிக் ஃபிராம் - Manavalamana Samuthayam - Erich Seligmann Fromm - The Sane Society in Tamil
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
மொழிபெயர்ப்பு நூல்/ உளவியல் / மானுடவியல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
384 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: 2016.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
லட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை. மானிடப் பரிணாமத்திற்கு இவை இன்றியமையாத ஊக்கங்கள்; பிடிமானங்கள்; அகவயமான உந்துதல்கள். இந்திய - தமிழகம் போன்ற பின்னடைந்த கலாச்சாரம், பற்றாக்குறையான அறிவியல் நோக்கு, பொறுப்பற்ற பொருளாதார அமைப்பு, அரைநாகரிகம், புராதனமான இனக்குழு மரபு மாறாத குருதி, மண், சாதி, கடவுள், பால் சார்ந்த உறவுகள் ஆகியவை நிலவுகிற எதார்த்தத்தில், இவற்றைக் கடந்து சென்று, பொதுவான மாந்தவிய உறவுகளின் மேன்மையை எடுத்துக் கூறுவது இன்றியமையாச் செயல்பாடாக இருக்கிறது. இந்தச் செயல்பாட்டிற்கு ஆக்கம் தருவதாக எரிக் ஃபிராம் படைப்புகள் அமைந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முதல் முக்கால் கால அளவில் வாழ்ந்து மறைந்த இவருடைய நூல்களில் குறிப்பிடும்படியான ‘மனவளமான சமுதாயம்’ (The Sane Society- 1955) என்ற நூல் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் குறித்து: எரிக் ஃபிராம் (1900 – 1980) எரிக் ஃபிராம் ஜெர்மனியில் பிறந்த உளப்பகுப்பாய்வாளர், சமூகத் தத்துவஞானி, நூலாசிரியர். இவர் 1900ஆம் ஆண்டு ஃபிராங்ஃபர்ட்டில் பிறந்தார். ஹெய்டல்பர்க், ஃபிராங்ஃபர்ட், மூனிச் பல்கலைக்கழகங்களில் சமூகவியலும் உளவியலும் கற்றார். பெர்லின் உளப்பகுப்பாய்வு நிறுவனத்தில் உளப்பகுப்பாய்வில் பயிற்சி பெற்றார். 1925ஆம் ஆண்டு முதல் ஃபிராம், உளவியல் ஆலோசகராகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்; கோட்பாட்டாய்வில் ஈடுபட்டார். பின்னர் ஓர் அமெரிக்கக் குடிமகனாக எரிக் ஃபிராம் கொலம்பியா பல்கலைகழகம், பின்னிங் கல்லூரி, உளச் சிகிச்சைக்குரிய வில்லியம் அலன்ஸன் ஒய்ட் நிறுவனம், சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளி, சிகாகோ தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
SKU Code | Kch B 072 |
---|---|
Weight in Kg | 0.780000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9789382033752 |
Author Name | எரிக் ஃபிராம் - Erich Seligmann Fromm |
Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Save: 25.00 Discount: 3.85%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Save: 30.00 Discount: 5.66%
உடையார் முதல் பாகம் - Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1
Save: 25.00 Discount: 5.88%
உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2
Save: 15.00 Discount: 3.53%
உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar
Save: 25.00 Discount: 4.76%